துன்புறுத்தல்

 1. 101 வயது நாஜி படை காவலர் மீது விசாரணை

  இரண்டாம் உலகப்போர் முடிந்த 76 ஆண்டுகளுக்குப் பிறகு நாஜி வதை முகாம் ஒன்றின் காவலராக இருந்த ஒருவர் 3,518 பேரை கொலை செய்ய உதவியதற்காக விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

  ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே உள்ள இரண்டாம் உலகப் போரின்போது சாக்சென்ஹாசன் வதை முகாமில் 2 லட்சத்துக்கும் மேலானவர்களை அடைத்து வைத்திருந்தனர். சாக்சென்ஹாசன் வதை முகாமில் இவர் பணியாற்றியுள்ளார்.

  சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த கைதிகளை சுட்டுக் கொல்லவும் பிறரை சைக்லான் - பி (Zyklon B) நச்சுக் காற்றை செலுத்திக் கொல்லவும் ஜோசஃப் எஸ் எனும் அந்த நபர் உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  விரிவாகப் படிக்க: 101 வயது ஹிட்லரின் நாஜி படை காவலர் மீது விசாரணை - 3,518 கொலைக்கு உடந்தை

  Nazi guard trial
 2. ஹிட்லர் bbc

  சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த கைதிகளை சுட்டுக் கொல்லவும் பிறரை சைக்லான் - பி நச்சுக் காற்றை செலுத்திக் கொல்லவும் ஜோசஃப் எஸ் எனும் அந்த நபர் உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. ஹிட்லர்

  துணைவரைத் தேர்வு செய்யும்போது உங்களுடைய தலை முடி நிறமும் அவரது கண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இப்படி பழகும் எந்தவொரு ஆண் வீரர் அல்லது அதிகாரியின் பெயரும் அந்த பெண்களிடம் பகிரப்படவில்லை. அதுதான் லெபென்ஸ்போர்ன் திட்டத்தின் அடிப்படை.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் பொதுமக்களைக் கொல்லும் காட்சிகள்

  ஆப்கானிஸ்தானில் மக்களைக் கொல்கிறார்களா தாலிபன்கள்? உண்மை என்ன? - பிபிசியின் கள ஆய்வு

 5. தாலிபன்கள்

  "நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தேன், ஏனென்றால் அவர்கள் என்னை இன்னும் மோசமாக அடிப்பார்கள் என்று நினைத்தேன், அதனால் நான் என் உடலின் முன்புறத்தை பாதுகாக்கும் நிலையில் தரையில் படுத்தேன்"

  மேலும் படிக்க
  next
 6. தாலிபன்

  "அவர்கள் நிறைய கெட்ட வார்த்தைகளைக் கூறி திட்டினார்கள், எங்களைக் கேவலப்படுத்தினார்கள். அவர்கள் எங்களை நோக்கி அழைத்த பெயர்களை மீண்டும் சொல்வதற்கு எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது."

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: தாயகத்தில் உறவுகளின் நிலை குறித்து கவலைப்படும் ஆப்கன் அகதிகள்

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தாலிபன்களின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனாலும், பலர் தாயகத்தை விட்டு வெளியேற முடியாமல் தொடர்ந்து சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

 8. யோகிதா லிமாயே

  பிபிசி நியூஸ், காபூலில் இருந்து...

  தாலிபன்

  தாலிபன் தலைவர்களிடமிருந்தும், செய்தித் தொடர்பாளர்களிடமிருந்து வரும் அறிவிப்புகளுக்கு நேர் எதிராக உண்மை நிலவரம் இருக்கிறது. இதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 9. சாத்தான்குளம் மகேந்திரன் மர்ம சாவு: மதுரை சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

  மதுரை சிபிசிஐடி

  சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்ததாக கூறப்படும் புகார், மதுரை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அதன் காவல் துணை கண்காணிப்பாளர் முரளி இன்று விசாரணையை தொடங்கியுள்ளார்.

  தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். கடந்த ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாரால், கொலை வழக்கு ஒன்றில் சந்தேக நபராக விசாரிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களிலேயே அவர் உயிரிழந்தார்.

  இது தொடர்பாக, மகேந்திரனின் தாயார் வடிவம்மாள், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை தூத்துக்குடி, நெல்லை சரக சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் அனில்குமார் தலைமையில் விசாரிக்க உத்தரவிட்டது.

  இந்த நிலையில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதால் சாத்தான்குளம் மகேந்திரன் வழக்கு விசாரணை தாமதமானதாக தெரிகிறது.

  எனவே வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி மகேந்திரன் தொடர்பான வழக்கை, மதுரை சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதைத்தொடர்ந்து, மகேந்திரன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திடம் இருந்து மதுரை சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி பெற்றுக்கொண்டு விசாரணையை இன்று தொடங்கினார்.

  முதல் கட்டமாக மகேந்திரனின் சகோதரியான சந்தனமாரி, தாயார் வடிவம்மாள் உள்ளிட்டோருக்கு விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் உறவினர்கள் சிலரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

  இது குறித்து வடிவம்மாள் தரப்பு வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், மகேந்திரன் இறந்தது தொடர்பான விசாரணையை விரைவாக நடத்த வேண்டும். மகேந்திரனை சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் அடித்து துன்புறுத்தியிருக்கிறார். அந்த நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறினார்.

  சாத்தான்குளத்தில் தந்தை, மகன் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் இருந்தபோது இறந்தனர். காவல் நிலையத்தில் கண்மூடித்தனமாக அவர்களை சில காவல்துறையினர் தாக்கியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி விசாரணைக்கும் பிறகு மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

  ஆனால், அந்த சம்பவத்துக்கு சில வாரங்களுக்கு முன்பு, அதே சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு பின்னர் இறந்தவர்தான் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

 10. ரோமாபுரி மன்னன்

  கி.பி 64 இல் ரோமாபுரி எரிந்து சாம்பலானது. நீரோ சக்கரவர்த்தியால்தான் தீ வைக்கப்பட்டதாக வதந்தி பரவியதுடன் ரோம் எரியும் போது நீரோ ஃபிடில் வாசித்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்து வரலாற்றாய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள்?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4