இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

 1. இலங்கையில் உணவுப் பஞ்சமா? களத்தில் உள்ள நிலவரம் என்ன?

  ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கை

  இலங்கை

  இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவசரநிலை அறிவிக்கப்பட்டபின், அங்கு உணவுப் பஞ்சம் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. செய்கை உரப் பயன்பாட்டிற்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டு, இயற்கை வேளாண்மைக்கு மாறியது, இந்த உணவு பஞ்சத்திற்கான காரணம் எனவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

  கோவிட் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பும், உணவு பஞ்சத்திற்கான ஒரு காரணம் என கூறப்பட்டு வருகின்றது. இந்த விடயங்களின் உண்மைத் தன்மை தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

  அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசரகால சட்ட விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை கடந்த 30ம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதியை நாடாளுமன்றம் திங்களன்று வழங்கியிருந்தது.

  இலங்கையில் செய்கை உர பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த மே மாதம் 6ம் தேதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.

  இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், செய்கை உர இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

  இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து, இலங்கையில் திடீரென உரத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

 2. சதீஷ் பார்த்திபன்

  பிபிசி தமிழுக்காக

  மலேசியா லட்சுமி ராமகிருஷ்ணன்

  எனக்கு மாதந்தோறும் முறையாக சம்பளமும் வழங்கவில்லை. பலமுறை கேட்ட பிறகு குறைந்த தொகை ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிந்து கொண்டேன். ஏதாவது கேட்டால் அடி, உதைதான் கிடைக்கும். எனது கடவுச்சீட்டை வாங்கி வைத்துக் கொண்டனர். ஓர் அடிமையைப் போல் நடத்துவர் என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலாயுதம்.

  மேலும் படிக்க
  next
 3. மலையகத்தை முடக்கிய பெருந்தோட்ட தொழிலாளர் போராட்டம்

  மலையகத்தில் உள்ள பெருத்தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்திய வம்சாவளித் தமிழர்கள். பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தில் இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிய இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் சந்ததிகள் இவர்கள்.

  மேலும் படிக்க
  next
 4. ரஞ்ஜன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  senthil thondaman

  இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள்  நாட்டின் ஜனாதிபதியாக முடியாது. பிரதம மந்திரியாகவும் முடியாது. வருகின்ற ஜனாதிபதி வருகின்ற பிரதம மந்திரி ஆகியோருடன் சேர்ந்து செயற்பட்டால் மாத்திரம் தான், இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை பெற்றுகொள்ள முடியும்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: ஆறுமுகன் தொண்டமான் யார்? இலங்கை தமிழ் அரசியலில் அவர் பங்கு என்ன?

  ஆறுமுகன் தொண்டமான் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.

 6. Arumugan Thondaman ஆறுமுகன் தொண்டமான்

  இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இன்று மாலை காலமானார்.

  மேலும் படிக்க
  next