வானிலை

 1. Video content

  Video caption: ஆர்ப்பரித்து வரும் நீரைக்கூட அனாயாசமாக உறிஞ்சிக்கொள்ளும் திசையன்விளை கிணறு

  திசையன்விளை கிணறு: ஆர்ப்பரித்து வரும் மழை வெள்ளத்தைக் கூட அனாசாயமாக உறிஞ்சிக்கொள்ளும் கிணறு.

 2. ஆ.விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  ராணி

  ` தனிநபர்களாலும் கல்வி நிறுவனங்களாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ள வாய்க்கால்களை மீட்டால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும்' என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை நின்று போனாலும் நீர் வடியவில்லை

  செங்கல்பட்டு மாவட்டத்தின் படூர் பகுதியில் மழை நீர் வடியாததால் உள்ளூர் மக்கள் கடுமையான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

 4. திருச்சி அரியாற்றில் உடைப்பு - 1,200 ஏக்கர் பயிர்கள் மூழ்கின

  மழை

  தொடரும் கன மழையால் திருச்சி மாநகரில் கருமண்டபம், தீரன் நகர், பிராட்டியூர், லிங்க நகர், சண்முகா நகர், உய்யகொண்டான் திருமலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

  அத்தியாவசியத் தேவைகளுக்கு மக்கள் படகுகளில் செல்கின்றனர். தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, பொது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  புங்கனூர் பகுதியில் அரியாற்றில் 120 அடி நீளத்திற்கு நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதனால், திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. ஆறு உடைப்பு, வெள்ளத்தில் 1, 200 ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கியுள்ளன. அரியாறு உடைப்பு சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையினருடன் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.

  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பிபிசி தமிழிடம் கூறுகையில், "வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் இருந்து 800 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தினமும் 3, 400 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. அரியாற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை இன்று மாலைக்குள் அடைத்து விடுவோம். குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள வெள்ள நீரை வடிய வைக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்பி விடும்" என்றார்.

 5. ஆ விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  வெள்ளம்

  வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. "இனிவரும் நாள்களில் மழை பெய்யவில்லை என்றாலும்கூட தேவைக்கு அதிகமான மழை பெய்துவிட்டது." என வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதில் ஒருநாள் தாமதம்

  View more on twitter

  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்திருக்கும் நிலையில், அடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எதிர்பார்த்ததைவிட ஒருநாள் தாமதமாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  திங்கட்கிழமையன்று அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன் பிறகு, அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும் என்றும் கூறப்பட்டிருந்தது.

  ஆனால் தற்போது ஒரு நாள் தாமதமாக 30-ஆம் தேதியன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் அது நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 7. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

  தெற்கு அந்தமானில் நவம்பர் 29ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை கூறியுள்ளது.

  ஏற்கனவே தமிழகத்தில் ராமேஸ்வரம் உட்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  View more on twitter
 8. நெதர்லாந்து

  தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு சென்ற 13 பேரிடம் புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  Follow
  next
 9. Video content

  Video caption: வெள்ளத்தின் கோரப்பிடியில் ஆந்திரப் பிரதேசம்

  வெள்ளத்தின் கோரப்பிடியில் ஆந்திரப் பிரதேசம்

 10. Video content

  Video caption: தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

  தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

பக்கம் 1 இல் 26