யூரோ பகுதி

 1. செல்பேசி

  ஸியோமி, க்வாவே செல்பேசி ரகங்களில் தணிக்கை செயலிகள், தரவுகள் கசிவு போன்ற ஆபத்துகள் இருப்பதாக லித்துவேனியா பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசியால் அரிய வகை நரம்பியல் பக்கவிளைவுக்கு வாய்ப்பு - ஐரோப்பிய மருத்துவ அமைப்பு எச்சரிக்கை

  கொரோனா தடுப்பூசி

  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு போடப்படும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போடுவதால் குயில்லன் பார்ரே என்ற அரிய வகை நரம்பு மண்டல பக்க விளைவு சாத்தியமாகலாம் என்றாலும் அந்த ஆபத்து வெகு குறைவு என்று ஐரோப்பிய மருத்துவ அமைப்பான இஎம்ஏ கூறியிருக்கிறது

  ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்துக்கும் இந்த அரிதான நரம்பியல் பாதிப்புக்கும் ஒரு சதவீத தொடர்பு உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  ஆனால், இந்த வகை பக்கவிளைவு 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கே ஏற்படலாம் என்று இஎம்ஏ கூறுகிறது. இந்த சாத்தியமிக்க ஆபத்துகளுடன் தடுப்பூசியின் ஆற்றலை ஒப்பிட்டால் அது பல மடங்கு பயன் தரவல்லது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  இதே இஎம்ஏ அமைப்பு, கடந்த ஜூலை மாதம் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போடுவதால் குயில்லன் பர்ரே குறைபாடு ஏற்படலாம் என்று கூறியது.

  அஸ்ட்ரா செனிகா போலவே அந்த நிறுவன தடுப்பூசி மருந்தில் அடினோ வைரஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

  குயில்லன் பர்ரே குறைபாடு என்றால் என்ன?

  GBS என்பது ஒரு சுய தடுப்பாற்றல் குறைபாடு ஆகும். இதில் ஒருவரின் நோய்த்தடுப்பாற்றல் மண்டலம் புற நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான திசுக்களைத் தாக்குகிறது.

  தசை அசைவுகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளையும், வலி, வெப்பம், தொடு உணர்வுகளைக் கடத்தும் நரம்புகளையும் இந்நோய்த் தாக்கம் பாதிக்கிறது.

  இதன் விளைவாகத் தசை பலவீனம், உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் சில வேளைகளில் முடக்குவாதமும் ஏற்படும்.

  சிலர் முற்றிலுமாக இந்நோயில் இருந்து குணம் பெறுவர். ஆனால் சிலருக்கோ நீடித்த நரம்புச் சிதைவு ஏற்படும்.இந் நோய் சிக்கல்களால் 3% - 5% நோயாளிகள் இறக்க நேரிடலாம். மூச்சைக் கட்டுப்படுத்தும் தசைகளில் வாதம், ரத்த தொற்று,நுரையீரலில் ரத்த உறைவு, இதயம் செயலிழப்பு ஆகியவை இந்த சிக்கல்களில் அடங்கும்.

  இந்நோய்க்கான காரணம் தெரியவில்லை.ஆனால்,இரைப்பைக் குடல் தொற்று அல்லது நுரையீரல் தொற்று போன்ற ஒரு தொற்று நோயினால் இது குறிப்பாகத் தூண்டபடுகிறது.

  ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகள்,குடும்பங்களில் இந்நோய் ஏற்படுவதாக அறிக்கை தந்துள்ளன

  உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி 100000 பேரில் 0.4 – 4.0 பேருக்கு GBS உண்டாகிறது. இதனால் அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம். பெரியவர்களுக்கு அதிலும் ஆண்களுக்குப் பரவலாகக் காணப்படுகிறது.

 3. ஜஸ்டின் ரெளலட்

  பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர்

  பருவநிலை மாற்றம்

  ஐ.நா சபையின் கருத்துப்படி, குறைந்த அளவில் கார்பனை வெளியிடும் ஆற்றலை விட, புதைபடிம மரபுசார்ந்த எரிபொருட்களுடன் தொடர்புடைய துறைகளில் வளர்ந்த நாடுகளே 50 சதவீதம் கூடுதலாக செலவிடுகின்றன என்பதுதான் மோசமான செய்தி.

  மேலும் படிக்க
  next
 4. போராட்டம்

  ஐரோப்பாவின் ``கடைசி சர்வாதிகாரி'' என வருணிக்கப்படும் பெலாரூஸ் அதிபர், சோவியத் கம்யூனிஸ சித்தாந்த அம்சங்களை அமல்படுத்த முயற்சித்து வருகிறார். தன்னை கண்டிப்பான தேசியவாதியாக காட்டிக் கொள்ளவும் அவர் முயன்று வருகிறார்.

  மேலும் படிக்க
  next
 5. கொரோனாவால் லட்சக்கணக்கில் வேலை இழப்பு

  ஏப்ரல் மாதம் மட்டும் பிரான்ஸ் நட்டில் 8,50,000 பேர் வேலை இழந்துள்ளனர்.

  கொரோனா தடுப்பு முடக்கநிலை முழுதும் அமலான முதல் மாதமாக ஏப்ரல் உள்ளது.

  இதன்மூலம் அங்கு வேலைவாய்ப்பற்றவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது.

  coronavirus job loss in france european union
 6. நேற்று நடந்தவை - சில முக்கியச் செய்திகள்

  • கோவிட் -19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த போலி மருத்துவர் க. திருத்தணிகாச்சலம் தமிழக காவல்துறையால் புதனன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
  • கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு அமைத்திருந்த சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
  • சீனாவில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கிய ஹூபே மாகாணத்தில் பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கின.
  • ஐரோப்பிய நாடுகளிலேயே கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்பை சந்தித்த நாடாகவும், உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்தபடி அதிக பலி எண்ணிக்கை கொண்ட நாடாகவும் பிரிட்டன் உருவெடுத்துள்ளது.
  • தமிழகத்தில் இன்று மது விற்பனை தொடங்கவுள்ள நிலையில் மதுபானங்கள் மீதான கலால் வரியை 15 சதவீதம் உயர்த்தி உள்ளது தமிழக அரசு.
  • இரான் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
  • கொரோனாவைரஸ் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், அவரை சுட்டவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  விரிவாகப் படிக்க: கொரோனா வைரஸ் - நேற்று உலகெங்கும் என்ன நடந்தது?

  coronavirus world news
 7. ஆஸ்திரியாவிலும் போலாந்திலும் ஊரடங்கு தளர்வு

  ஆஸ்திரியாவில் ஊரடங்கு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. 4300 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவில் இருக்கும் சின்ன கடைகள் , காய்கறி, பழங்கள், செடிகள் போன்றவை விற்கும் கடைகள் ஆகியன இன்று முதல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  ஆனால் மற்ற சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக விலகலை கடைப்பிடிக்க ஒருவரிடமிருந்து மற்றவர் 10அடி விலகி இருக்க வேண்டும் போன்ற வேறு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

  ஆஸ்திரியாவில் இதுவரை 14,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 368 பேர் உயிரிழந்துள்ளனர்.

  போலந்து நாட்டில் ஏப்ரல் 19 முதல் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது என போலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் லூகாஸ் சுமௌஸ்கி கூறியுள்ளார்.

  ஆர்.எம்.எஃப் பண்பலையில் பேசிய அவர் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்படும் என கூறியுள்ளார்.

  இந்த வார தகவல்களை ஆராய்ந்த பிறகு புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 8. போரிஸ் ஜான்சனின் முயற்சியை தோற்கடித்த எம்பிக்கள்

  பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், கட்சியின் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த கன்சர்வேட்டிவ் எம்பிக்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என்று பிரிட்டன் அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மேலும் படிக்க
  next