ராஜிவ் காந்தி

 1. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 161இன் கீழ் புதிய தீர்மானம் - தொல். திருமாவளவன்

  ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகள்
  Image caption: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை காலத்துக்கு பிறகும் சிறையில் இருந்து வரும் ஏழு பேர்.

  பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று புதிய தீர்மானம் ஒன்றை இந்திய அரசியலமைப்பின் 161ஆவது விதியின் கீழ் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சரவை கூடி கடந்த 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் அவர் காலதாமதம் செய்துவந்த நிலையில் அதுகுறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு தாங்களே உத்தரவு பிறப்பிப்போம் எனவும் கூறினர்.

  அதனால் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆளுநர் தன்னிச்சையாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததார்.

  இதனை நீதிமன்றத்தில் ஆளுநர் தனது பதிலாக தெரிவித்தார்.தமிழ்நாடு ஆளுநரின் இச்செயல் மாநில அரசையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும் என்று சட்ட வல்லுநர்கள் அப்போது கருத்து தெரிவித்தனர்.இந்l நிலையில் உச்ச நீதிமன்றம் 03.08.2021 அன்று 'ஹரியானா-எதிர்- ராஜ்குமார்' என்ற வழக்கில் மிகத் தெளிவான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையைக் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ளது. அரசியலமைப்பு சட்ட உறுப்பு எண் 161-இன் படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவு என்பது அரசின் முடிவுதானே தவிர ஆளுநரின் முடிவு அல்ல. அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் ஆளுநரின் ஒப்புதலானது அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு சடங்கு மட்டுமே என்றும் அந்தத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலும், "அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் -161 இன் கீழும் தன்னை விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் தமிழ்நாடு அரசுக்கு அளித்த மனுவின் மீது மாநில அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்," என மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனவே, இதனடிப்படையிலும், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அளித்த தீர்ப்புகளின்படியும்,30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்திட தமிழ்நாடு அரசு உடனே அமைச்சரவையைக் கூட்டி மீண்டும் புதிதாகத் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்று திருமாவளன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 2. பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கிய தமிழக அரசு - அற்புதம்மாள் உருக்கம்

  பேரறிவாளன்

  பேரறிவாளனின் உடல்நிலை காரணமாக அவருக்கான பரோல் காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், அடிக்கடி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கொரோனா காலத்தில் அவரது உடல்நிலையில் மேலும் பாதிப்பு ஏற்படவே வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் தெரிவித்ததால், பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார்.

  இதை ஏற்று பரோல் வழங்கப்பட்டதால், கடந்த மே மாதம் 28 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்குத் திரும்பினார்.அவருக்குத் தொடர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிப்பு செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அற்புதம்மாள், `30 ஆண்டுகளின் தனிமை, சிறைவாசம் தந்து விட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகத் தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனையை ஏற்று வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டது. தற்போதுதான் மருத்துவம் தொடங்கி உள்ள சூழலில் அது தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,' எனப் பதிவிட்டுள்ளார்.

 3. ராஜீவ் காந்தி

  இந்த ஏழு பேரும் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து, பெரும் விலை கொடுத்திருக்கின்றனர். அவர்களது தண்டனை குறைப்பு மீது முடிவெடுப்பதில் ஏற்கெனவே மிகுந்த தாமதம் ஏற்பட்டு விட்டது. தற்போதைய கோவிட் சூழ்நிலையில், சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென நீதிமன்றங்களும் கூறிவருகின்றன.

  மேலும் படிக்க
  next
 4. ரகோத்தமன்

  மத்திய புலனாய்வுத் துறையில் முப்பத்தி ஆறு ஆண்டு காலம் பணியாற்றிய ரகோத்தமன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலானாய்வுக் குழுவில், தலைமைப் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 5. ராகுல் காந்தி

  "எனக்கு அது கடுமையான நேரமாக இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால் எனது வலி உங்களுக்குப் புரியும். எனது தந்தையை இழந்தது என் நெஞ்சை பிளந்தது போல் இருந்தது. அது மிகப்பெரிய வலியைத் தந்தது," என்று ராகுல் காந்தி கூறினார்.

  மேலும் படிக்க
  next
 6. பங்கஜ் ஸ்ரீவாத்சவ்

  மூத்த பத்திரிகையாளர்

  ஜவஹருலால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல்

  இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவை தாக்குவதற்கு அப்போதைய துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் பெயர் கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 7. 'பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்' விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் ஆளுநரிடம் கோரிக்கை

  "நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள். சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்."

  மேலும் படிக்க
  next
 8. இஸ்ரோ

  இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ்.-01 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 9. எல்டிடிஈ

  உள்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட விளக்கங்கள் அடிப்படையில், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்க செயலாளர் பிறப்பித்த உத்தரவும் அது தொடர்பான முடிவும் எந்த அடிப்படையில் எடுக்கப்படுகிறது என்ற கருத்தை மட்டுமே ஆணையத்தால் வெளியிட முடியும்.

  மேலும் படிக்க
  next
 10. எரிக்

  இலங்கை உள்நாட்டு போரின்போது தமிழ் மக்களை வெளியேற்ற பிரபாகரன் ஒப்புக் கொள்ளவில்லை எனவும், பிரபாகரன் சமரசம் செய்ய தவறிவிட்டதாக எரிக் சொல்ஹெம் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3