தமிழ்நாடு

 1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம், இத்துடன் இந்த பக்கத்தை நிறைவு செய்கிறோம்.

  எங்களுடன் இன்றைய நாளில் இந்த பக்கத்தில் இணைந்திருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 2. பேஸ்புக்கில் பெண் என நினைத்து பழகியவர் ஆண் என்று தெரிந்ததும் கொலை செய்த இளைஞர் கைது

  கைது
  Image caption: காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் முருகன்

  பேஸ்புக்கில் பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்டு பழகியவர் ஆண் என்று தெரிந்ததால் அவரை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து. மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் இருந்த கண்ணாணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

  அதில் இறந்தவர் விளாத்திகுளம் அருகே உள்ள மேலஈரால் பகுதியை சேர்ந்த முருகன் (28) என்பதும், அவரை கொலை செய்தது காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியைச் சேர்ந்த் முருகன் (24) என்பதும் தெரியவந்தது.

  முருகன் கொலை குறித்து கைது செய்யப்பட்ட முருகனிடம் போலீசார் நடத்திய விசரணையில், இறந்து போன முருகன் அமுதா என்ற பெண் பெயரில் முகநூல் கணக்கு ஒன்று உருவாக்கி வைத்துள்ளார்.

  அந்த முகநூல் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் முருகன் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகனிடம் பெண் என்று நினைத்து பேஸ்புக் வழியாக பழகி வந்துள்ளார்.

  பின்னர் இருவரும் செல்போன் நம்பர் பரிமாறிக் கொண்டுள்ளார்.; காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகனிடம் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் செல்போனில் பெண் குரலில் பேசி வந்துள்ளார்.

  இருவரும் காதலர் தினத்தன்று சந்திக்க திட்டமிட்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் எட்டையாபுரம் வந்துள்ளார்.

  எட்டயபுரத்தில் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தான் பேசிய பழகி வந்த நபர் பெண்ணல்ல ஆண் என்பது காஞ்சிபுரம் முருகனுக்கு தெரிய வந்தது.

  உடனே முருகன் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்புவதாக கூறி கிளம்பியபோது, அவருடன் சமரசம் பேசி தன்னுடன் அழைத்துச் சென்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

  இந்த நிலையில் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகனை மிரட்டி மீண்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி அழைத்துள்ளார்.

  ஆனால் முருகன் மறுத்துவிடவே இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வீடியோவை உனது குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக முருகனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் எப்படியாவது விளாத்திகுளத்தை சேர்ந்த முருகனை கொலை செய்துவிட்டு அவனது செல்போனில் உள்ள ஆபாச வீடியோவை அழித்து விட வேண்டும் என திட்டமிட்டு குளிர் பானத்தில் விஷத்தை ஊற்றி வைத்துள்ளார். இருவரும் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டு பகுதிக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளனர்.

  அப்போது விஷம் கலந்த குளிர்பானத்தை காஞ்சிபுரம் முருகன் விளாத்திகுளம் முருகனுக்கு கொடுத்துள்ளார்.அதை குடித்த முருகன் மயக்கத்தில் இருந்துள்ளார். அப்போது காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் அருகில் இருந்த கல்லை முருகனின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். கொலை செய்த இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் தனது மணி பர்ஸ்சை தவற விட்டு சென்றுள்ளார்.

  முருகன் தனது வீட்டிற்கு சென்ற போது தன்னுடைய மணி பர்ஸ்சை தவறவிட்டு வந்ததை அறிந்து, அதை எடுப்பதற்காக மீண்டும் மறுநாள் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சென்றபோது அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 3. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  யானை காதல்

  ஆசிய யானைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்துக்குள் இருந்தாலும் வேட்டை, மின்வேலி, அகழி, மோதல், விபத்து, நஞ்சு எனப் பல்வேறு காரணிகளால் யானைகளின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன.

  மேலும் படிக்க
  next
 4. Charanjit Singh Channi

  மாநில முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கை பதவியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்ட பின் அவர் பதவி விலகிய நிலையில் சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

  Follow
  next
 5. "ஒன்றிய அரசு போதிய தடுப்பூசி தந்திருந்தால் தமிழகத்தில் எல்லோருக்கும் தடுப்பூசி போட்டிருப்போம்"

  தடுப்பூசி

  ஒன்றிய அரசு போதிய தடுப்பூசி வழங்கியிருந்தால் தற்போது தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா மெகா தடுப்பூசி முகாம்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ..அப்போது அவர் கூறியது:தமிழகத்தில் இன்று 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது மாலை 4 மணி வரை 12 லட்சத்து 74 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த 40 ஆயிரம் முகாம் மூலம் 28 லட்சத்து 94 ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பொதுமக்களுக்கு 56 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் தடுப்பூசி போடுவதில் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 63 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டது. எளிதாக தடுப்பூசி கிடைத்தபோது அதை பயன்படுத்த அப்போதைய அதிமுக அரசு தவறிவிட்டது. தற்போதும் ஒன்றிய அரசு போதிய தடுப்பூசி வழங்கியிருந்தால் தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருக்கும்.இந்த செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு ஒரு கோடியே 4 லட்சம் தடுப்பூசி வழங்க ஒன்றிய அரசு இலக்கு வைத்துள்ளது. ஆனால் தடுப்பூசி குறைவாகவே வழங்கி வருகிறது. எனவே கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும். தமிழகத்தில் மூன்றாம் அலை வந்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

  மூன்றாம் அலை குழந்தைகளைத் தாக்கும் என்ற வதந்தி பரவியது . அதற்கும் தயாராக தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் சுகாதார துறையில் பணி வாங்கி தருவதாக ஏமாற்றிய 3 பேர் மீது நிச்சயம் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

 6. Video content

  Video caption: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் உங்களுக்கு எந்த அளவுக்கு பயன் கொடுக்கும்?

  மாதந்தோறும் பணம் செலுத்தி முதலீடு செய்யும் SIP நல்லதா அல்லது மொத்தமாக பணத்தை முதலீடு செய்யலாமா என்ற கேள்விக்கு SIP முதலீடே சிறந்தது என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

 7. ச.ஆனந்தப் பிரியா

  பிபிசி தமிழுக்காக

  விஜய் மற்றும் ரசிகர்கள்.

  ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த விருப்பமுள்ள வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிடவும் நடிகர் விஜய் பெயர் மற்றும் மன்ற கொடியை பயன்படுத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  தொல்லியல்

  பூம்புகார் மற்றும் அரிக்கமேடு துறைமுகங்களிலிருந்து கீழை நாடுகளுடன் நேரடியாகவும், பாலூர் துறைமுகம் வழியாகவும் வணிகம் நடைபெற்றுள்ளதாக தமிழக தொல்லியல் துறை கருதுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. விராட் கோஹ்லி

  ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் தற்போதைய ஆட்டத்துக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

  Follow
  next
 10. இன்றைய நேரலை நிறைவடைகிறது

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,இத்துடன் இந்த பக்கத்தில் இன்றைய நேரலை தகவல்களை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

பக்கம் 1 இல் 100