அமெரிக்கத் தேர்தல் 2016

 1. டிரம்ப்

  சமூக ஊடகங்களில் பிரபலமான Shopify, Pinterest, TikTok, Reddit ஆகியவை தங்களின் பக்கங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் தேர்தல் முடிவுகள் குறித்து அதிபர் டிரம்ப் பேசியதாக தெரிய வந்தால், உடனடியாக அந்த பக்கத்தின் இடுகைகளை முடுக்க நடவடிககை எடுத்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 2. டிரம்ப், மனாஃபோர்ட் (நடுவில்) இவான்கா டிரம்ப் (வலது)

  டிரம்பை வெற்றி பெறவைக்கவேண்டும் என்பதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற இருவர் இந்த மன்னிப்பு வெள்ளத்தில் நீந்தி கரையேறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. தேர்தல்

  தேர்தல் வாக்குப்பதிவு மோசடி தொடர்பான அதிபர் டிரம்பின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அந்நாட்டின் உள்துறையின் அங்கமான சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு அமைப்பான சிஐஎஸ்ஏ குழு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. நாம் இணைந்து இதை சாதித்தோம் - கமலா ஹாரிஸ்

  View more on twitter

  அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக தேர்தல் சபை இடங்களில் வெற்றிக்கான வாய்ப்பு உறுதியானதையடுத்து, ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், நாம் இணைந்து இதை சாதித்தோம் என்று அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனின் ட்விட்டர் தகவலுக்கு பதிலளிக்கும் விதமாக கூறியுள்ளார்.

  ஜோ பைடனும் நானும், அமெரிக்க மக்களுக்காக உழைக்க தயாராகி வருகிறோம் என்றும் மற்றொரு ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  இந்த தேர்தல் ஜோ பைடனையோ என்னையோ விட மேலானது. இது அமெரிக்கர்களின் ஆன்மா பற்றியது, அதற்காக போராடிய நமது விருப்பம் பற்றியது. நமக்கு முன்னே ஏராளமான பணிகள் உள்ளன. நாம் செயல்படத்தொடங்குவோம் என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

  View more on twitter
  View more on twitter
 5. பைடன்

  ஜோ பைடனுக்கான வெற்றி வாய்ப்பு இறுதியாகி விட்டதால், 1990களுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் பதவியில் ஒரேயொரு முறை மட்டுமே வகிக்கக் கூடியவராக டொனால்ட் டிரம்ப் ஆகியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 6. "எல்லோருக்குமான அதிபராக இருப்பேன்" - ஜோ பைடன்

  அமெரிக்க அதிபராக தன்னை தேர்வு செய்த நாட்டு மக்களுக்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் நன்றி தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நமக்கு முன்னால் உள்ள பணிகள் கடினமாக இருக்கும். ஆனால் இதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்: நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் வாக்களித்திருக்காவிட்டாலும் நான் எல்லா அமெரிக்கர்களுக்குமான ஒரு அதிபராக இருப்பேன் . நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

  View more on twitter
 7. வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும் முயற்சி அற்பத்தனமான செயல் - மிஷிகன் தேர்தல் அதிகாரி

  தேர்தல்

  மிஷகனில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த மேற்கொள்ளப்படும் அதிபர் டிரம்ப் பிரசாரக்குழுவின் சட்டப்பூர்வ முயற்சி அற்பத்தனமான செயல் என்று அந்த மாகாண தலைமை தேர்தல் அதிகாரி சாடியுள்ளார்.

  வாக்குப்பெட்டியில் பதிவான வாக்குச்சீட்டுகள் அனைத்தும் சரியான முறையில் கணக்கிடப்பட்டுள்ளதாக ஜோஸ்லின் பென்சன் என்ற மாகாண செயலாளர் தெரிவித்தார்.

  2016ஆம் ஆண்டில் மிஷிகன் மாகாணத்தில் 10,700 வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

  இந்த நிலையில், அங்கு தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, டிரம்பின் தேர்தல் பிரசாரக்குழு சட்ட நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது.

  ஜோர்ஜா, விஸ்கான்சின், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களிலும் இதேபோல சட்ட நடவடிக்கையை டிரம்பின் பிரசாரக்குழு முன்னெடுத்துள்ளது.

 8. 2016இல் ஹிலாரியை விட 30 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்ற டிரம்ப்

  2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனை விட சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்ற டிரம்ப் அதிபரானது எப்படி?

  விளக்குகிறது இந்தக் காணொளி.

  View more on youtube
 9. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது தெரிய வரும்?

  வாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் காலை யார் வெற்றியாளர் என்பதை கணித்து விட முடியும்.

  2016ஆம் ஆண்டு, வாக்குப்பதிவு நடந்த மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நியூயார்க்கில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு தனது வெற்றி உரையை ஆற்றினார் அதிபர் டிரம்ப்.

  ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் தபால் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள தாமதம் ஆகலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

 10. வணக்கம் நேயர்களே!

  கொரோனா வைரஸ் தொடர்பான தமிழக, இந்திய, இலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உங்களுக்காக பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து மு. நியாஸ் அகமது மற்றும் சிவக்குமார் உலகநாதன் தொகுத்து வழங்குகிறோம்

  கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

  கோப்புப்படம்
பக்கம் 1 இல் 2