பிரான்ஸ்

 1. Video content

  Video caption: இந்திய மண்ணில் தரையிறங்கிய 5 ரஃபால் விமானங்கள்

  இந்திய மண்ணில் தரையிறங்கிய 5 ரஃபால் விமானங்கள்

 2. 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.

  பிரான்ஸ், இந்தியா இடையிலான தொலைவு 7,000 கி.மீ பயணத்தின் நடுவே ஐக்கிய அரபு அமீரகத்தில், ரஃபால் விமானங்கள் தரையிறக்கப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 3. செய்தித்தாள்

  உணவக உரிமையாளர் ஒருவரால் நேஷனல் ஹெரால்ட், எகனாமிக்ஸ் டைம்ஸ் உட்பட டஜன் கணக்கான செய்தித்தாள்கள் கண்டறியப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 4. கார் விற்பனை சரிவு: 15,000 பேரை பணி நீக்கம் செய்யும் ரெனால்ட்

  ரெனால்ட்

  கொரோனா பெருந்தொற்று காரணமாக கார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதால், உலகளவில் 15,000 பேரை பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் கார் நிறுவனம் பணி நீக்கம் செய்ய உள்ளது.

  இந்த முடிவு மிக அவசியமானது என ரெனால்ட் நிறுவனத்தின் இடைக்கால தலைவர் குளோடில்டி டெல்போஸ் கூறியுள்ளார். மேலும், மின்சார கார் மற்றும் வேன்களை அதிகளவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 5. கொரோனா இறப்பு: ஸ்பெயினை முந்தியது பிரேசில்

  கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் பிரேசில் ஸ்பெயினை முந்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1,124 பேர் இறந்துள்ளனர்.

  இதன் மூலம் அந்நாட்டில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 27,878 ஆக அதிகரித்துள்ளது.

  ஸ்பெயினில் இதுவரை 27,121 பேர் இறந்துள்ளனர்.

  தொற்று எண்ணிக்கையில் உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.

 6. இயல்பு நிலைக்கு திரும்பும் பிரான்ஸ்: உணவகங்கள், மதுபான கடைகள் திறப்பு

  பிரான்ஸ்

  கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரான்சில் உணவகங்கள், மதுபான கடைகள் உள்ளிட்டவை திறக்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளார்.

  பாரீஸ் நகரம் நோய்த்தொற்று பரவலின் மையமாக இல்லாவிட்டாலும், அங்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  பிரான்சில் 100 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்படுவதாகவும், ஆனால் 10க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கான தடை நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 28,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

 7. கொரோனாவால் லட்சக்கணக்கில் வேலை இழப்பு

  ஏப்ரல் மாதம் மட்டும் பிரான்ஸ் நட்டில் 8,50,000 பேர் வேலை இழந்துள்ளனர்.

  கொரோனா தடுப்பு முடக்கநிலை முழுதும் அமலான முதல் மாதமாக ஏப்ரல் உள்ளது.

  இதன்மூலம் அங்கு வேலைவாய்ப்பற்றவர்கள் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது.

  coronavirus job loss in france european union
 8. ஹைட்ராக்சிகுளோரோகுயின் பயன்பாட்டை நிறுத்திய பிரான்ஸ்

  மூட்டழற்சி, மலேரியா காய்ச்சல் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்துவதை பிரான்ஸ் அரசு நிறுத்திவைத்துள்ளது.

  பல நாடுகளில் நடைபெற்று வந்த பரிசோதனை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் நேற்று, மே 26ஆம் தேதி, தெரிவித்தது.

  ஹைட்ராக்சிகுளோரோகுயின் (hydroxychloroquine) கோவிட்-19ஆல் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

  அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவிலிருந்து தன்னை காத்துக் கொள்ள இந்த மருந்தை உட்கொள்வதாக கூறியிருந்தார்.

  ஹைட்ராக்சிகுளோரோகுயின் கொரோனா தொற்றை குணமாக்கும் என இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

  hydroxychloroquin for coronavirus treatment
 9. ஹைட்ராக்ஸிகுளோராகுயின்: மறுபரிசீலனை செய்ய பிரான்ஸ் உத்தரவு

  கொரோனா

  கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்து பயன்படுத்தப்படுவதை மறுபரிசீலனை செய்யுமாறு பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் வெரன் உத்தரவிட்டுள்ளார்

  மலேரியாவிற்கு வழங்கப்படும் மருந்தான ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை கொரோனா நேயாளிகளுக்கு அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும், மாறாக அதனால், நோயாளிகள் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக லேன்செட் அறிவியல் சஞ்சிகையில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

  ஆனால், கொரோனா சிகிச்சைக்கு தொடர்ந்து ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை ஊக்குவித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த மருந்தை தாம் எடுத்துக் கொள்வதாக கூறியிருந்தார்.

 10. பிரான்ஸில் இன்று முதல் மத வழிபாட்டு கூட்டங்களுக்கு அனுமதி

  பிரான்ஸில்

  பிரான்ஸில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக, இன்று (மே 23) முதல் மத வழிபாட்டுக் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  வழிபாட்டுக் கூட்டங்களில் கலந்துக்கொள்பவர்கள், கைகளை கழுவிட்டு நுழைய வேண்டும் என்றும், மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும், இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பக்கம் 1 இல் 7