வாட்ஸ்ஆப்

 1. "ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்க முயற்சி" - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு

  THIRUMURUGAN
  Image caption: திருமுருகன் காந்தி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்

  மக்களுக்காக உழைப்பவர்களின் செல்பேசிகளை ஒட்டுக்கேட்பது சட்டவிரோதமானது என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

  கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இன்று அவர் கு.ராமகிருட்டிணன், வெண்மணி ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது:

  உலகம் முழுவதும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் சுமார் 1,500 பத்திரிகையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  இந்தியாவிலும் 50க்கும் மேற்பட்டவர்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களின் செல்போன் தரவுகள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது.

  மோதி அரசு பெகாசஸ் மூலம் உளவு பார்த்து இருக்கிறது. பெகாசஸ் ஸ்பைவேரின் மூலம் மொபைல், கம்யூட்டர்களில் உள்ள தகவல்களை எடுக்க முடியும். இமெயிலில் நுழைந்து பார்க்கவும், அதை செயல்படுத்தவும் முடியும். ஆவணங்கள், புகைப்படங்கள், பேசுவதை ஒட்டுக்கேட்பது போன்ற அனைத்தையும் இதன் மூலம் செய்ய முடியும்.

  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோனா வில்சன் எனும் பத்திரிக்கையாளரை உளவு பார்த்து பொய்யான தகவல்களை பதிவு செய்து, அவர் உட்பட சமூக செயல்பட்டாளர் பலர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது.

  மத்திய அரசுக்கு செல்பேசியை உளவு பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

  மக்களுக்காக போராடுபவர்கள் மீது இதுபோன்ற உளவு வேலையை செய்வதன் நோக்கம் தமது தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்த அரசு முயல்கிறது.

  இதை கண்டிக்காவிட்டால் யார் மீது வேண்டுமானாலும் இந்த செயலியை பயன்படுத்தி தவறான தகவல்களை பதிவு செய்து சிறையில் அடைத்துவிட முடியும். இஸ்ரேலில் உருவாக்கப்படும் இந்த மென்பொருள் தனியார்களுக்கு விற்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7 ஆண்டுகளாக பிரதமர் மோதி ஊடகத்தை சந்திக்கவில்லை, ஆனால் இப்போது ஊடகங்களுக்கு அரசு பல வழிகளில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் மோசமான இடத்தில் வைத்திருக்கும் நாடுகள் இந்த செயலியை பயன்படுத்துகின்றன. இந்திய அரசும் இந்த செயலியை பயன்படுத்துகிறது.

  பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 6 மாதத்திற்குள் ஊடகங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என்கிறார். ஆனால் அதற்கு முன்பாகவே ஊடகங்களை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர் என தெரிகிறது.

  எமர்ஜென்ஸி காலத்தில் இருந்த நடைமுறைகள் போல இப்போது இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளோம்' என திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

  மே 17 இயக்கம் அறிக்கை

  இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெகாசஸ் விவகாரம் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் முழு விவரம்:

  பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்ற உளவுச் செயலியின் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அரசுகளால் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்ற பட்டியலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் இருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

  திருமுருகன் காந்தியின் தரவுகளை சேகரித்து அவரை முடக்கி விடலாம் என்ற எண்ணத்தில் இந்திய ஒன்றிய மோதி அரசு ஈடுபட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

  திருமுருகன் காந்தி உட்பட முற்போக்கு செயற்பாட்டாளர்களை, பத்திரிக்கையாளர்களை முடக்கி, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முயலும் பாஜக மோதி அரசை மே பதினேழு இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

  இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ. (NSO) என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற உளவு செயலியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகள் அந்நாட்டின் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டு, வாட்சப் தகவல்கள் உட்பட மொபைல் தரவுகள் அனைத்தையும் சேகரித்துள்ளன என இந்தியாவின் தி வயர் (The Wire), தி பிரிண்ட், இங்கிலாந்தின் கார்டியன், அமெரிக்காவின் தி வாசிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உட்பட உலகின் முன்னணி பத்திரிக்கைகள் பல நேற்று (18-07-2021) இரவு செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 40 பத்திரிக்கையாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டிருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  அவற்றில் ஒன்று தான் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தமிழீழ விடுதலை மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை சிக்கல்களை முன்வைத்து போராடி வரும் தமிழ்த்தேசிய அமைப்பான மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஒன்றிய பாஜக அரசின் தமிழின விரோத போக்கை தமிழர்களிடையே அம்பலப்படுத்துவதும், தமிழர்களை எளிமையாக அரசியல்படுத்தும் வேலையை செய்வதும் மோடி அரசை சினம்கொள்ள செய்துள்ளது.

  பாஜக அரசியலுக்கு தடையாக இருக்கும் திருமுருகன் காந்தி அவர்களை முடக்கிவிட்டால், தமிழ்நாட்டு அரசியலை மாற்றிட முடியும், தமிழ்நாட்டு அரசியலில் இலகுவாக செயல்பட முடியும் என்ற நோக்கத்திலேயே தான், அவரது தொலைபேசியை உளவு பார்த்து அவரது தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இச்செயலியின் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகளால் உளவு பார்க்கப்பட்டுள்ள நபர்கள் யாரென்று உற்று நோக்குகையில் இதனை அறிந்துகொள்ள முடிகிறது. பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தற்போது தொலைபேசி உளவு பார்க்கப்பட்டவருள் ஒருவரான ரோனா வில்சன் என்பவது மடிக்கணினி ஹேக் (Hack) செய்யப்பட்டு போலியான மின்னஞ்சல்கள் அவர் அனுப்பியது போல் நிறுவப்பட்டது. அதனை அமெரிக்காவின் டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் ஒன்றும் உறுதிபடுத்தியது.

  இப்படியாக போலியான தரவுகள் மூலம் பீமா கோரேகான் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ரோனா வில்சன் உட்பட பலர் பிணை கூட வழங்கப்படாமல் மூன்று ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் உள்ளனர். அதேபோல், தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியிலும் போலியான தகவல்களை நிறுவி, திருமுருகன் காந்தி அவர்களை சதியின் மூலம் ஏதேனும் ஒரு வழக்கில் சிக்க வைக்கும் பாஜக அரசின் கீழ்த்தரமான முயற்சி என்று மே பதினேழு இயக்கம் கருதுகிறது. உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் 2018 காலகட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி மீது அரசு சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டதை “ஆபரேசன் டிஎம்ஜி” என்று நக்கீரன், விகடன் போன்ற பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தி எழுதின என்பதையும் நினைவுகூர வேண்டும்.

  2019 நாடாளுமன்ற தேர்தலின் போது மே பதினேழு இயக்கத்தின் செயல்பாட்டை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் பாஜகவிடம் இருந்தது. இதற்காக, திருமுருகன் காந்தி உட்பட மே பதினேழு இயக்கத் தோழர்கள் மீது 2017 முதல் கடுமையான நெருக்கடிகள் தினிக்கப்பட்டது. 2017-ல் தமிழீழ இனப்படுகொலைக்காக நினைவேந்தல் நடத்தியதற்காக தோழர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

  குண்டர் சட்டம் உடைக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்து, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்ததற்காக தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலையை ஐநா மனித உரிமை மன்றத்தில் பதிவு செய்ததற்காக, உபா (UAPA) என்னும் கருப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அன்று முதல் அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

  இந்த காலகட்டத்தில் 40 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டதோடு, அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளை சந்திக்க இன்றளவும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்று வருகிறார். தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீதான அடக்குமுறைகள் என்பது மே பதினேழு இயக்கத்தை முடக்குவதற்கான முயற்சிகள். அதனை பாஜக தலைவர்களின் பேச்சும் உறுதி செய்துள்ளது.

  அரசின் நெருக்கடியை சந்தித்ததால், திருமுருகன் காந்தி உட்பட மே பதினேழு இயக்கத் தோழர்களை ஊடகங்கள் புறக்கணிப்பும் செய்தன. மே பதினேழு இயக்கம் தொடர்பான செய்திகளை வெளியிடாமல் இருப்பது, இரட்டடிப்பு செய்வது போன்றவையும் நடந்தேறின. அதே போல், மே பதினேழு இயக்கத்தோடு இணைந்து செயல்பட்ட பல அமைப்புகள் காவல்துறையின் நெருக்கடியை சந்தித்தன. இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் 2019 டிசம்பரில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு, மே பதினேழு இயக்கத்தின் மீதான அடக்குமுறைகளை கண்டித்தும், திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சூழலில், திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசி மோதி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும் என்ற செய்தி மே பதினேழு இயக்கத்தை முடக்க பாஜக அரசு முயல்கிறது என்பதையே உறுதிபடுத்துகிறது.

  இவ்வாறு, திருமுருகன் காந்தியை முடக்க முயலும் முயற்சிகளை மே பதினேழு இயக்கம் ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ளும். பாஜக அரசின் இது போன்ற செயல்கள் மூலம் மே பதினேழு இயக்கத் தோழர்களை அச்சமடைய செய்திட முடியும், அதன் மூலம் மே பதினேழு இயக்கத்தை முடக்கிவிட முடியும் என்ற எண்ணத்தை மே பதினேழு இயக்கம் உடைத்தெறியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

  பெகாசஸ் உளவு வேலையை இந்திய ஒன்றிய பாஜக அரசு மறுத்தாலும், பெகாசஸ் செயலியின் நிறுவனமான என்.எஸ்.ஓ., அரசு மற்றும் அரசு நிறுவனங்களுடன் மட்டுமே வணிக தொடர்பு வைத்திருப்பதாக உறுதிபட கூறியிருக்கிறது. இதன் மூலம், மோடி அரசு இச்செயலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மேலும், மோடி அரசை விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சியினர் உட்பட நூற்றுக்கணக்கான நபர்களின் தொலைபேசி பெகாசஸ் செயலியின் மூலம் மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும் என்ற செய்தி, ஜனநாயகத்தை முடக்கும் முயற்சியாகும். இது, மோடி அரசு பாசிசத்தை நோக்கி செல்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

  மோதி அரசின் இத்தகைய ஜனநாயக விரோத, பாசிச போக்கு மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை. நாட்டின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து மோதி அரசின் இந்த பாசிச போக்கை கண்டிக்க முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

  இந்த உளவு செயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்களை காக்க, அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும். அரசின் ஜனநாயக விரோத செயல்களை அம்பலப்படுத்தி, அரசின் அடக்குமுறையை அறத்துடன் எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே பாசிசத்தை வேரறுக்க முடியும் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். அப்படியான முன்னெடுப்புகளுக்கு மே பதினேழு இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை கூறிக்கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 2. பெகாசஸ்

  நாட்டின் பாதுகாப்புக்காகவே பெகாசஸை வாங்குவதாகப் பல நாட்டின் அரசுகள் கூறினாலும், மக்களை வேவு பார்க்க இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா இல்லையா எனத் தெரியவில்லை.

  மேலும் படிக்க
  next
 3. பெகாசஸ் ரகசிய மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்ட இந்தியாவின் முக்கிய புள்ளிகள்

  இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. வாட்ஸ்அப்

  மே 15 முதல் ஜூன் 15 வரை இந்தியாவில் மட்டும் "அதிக எண்ணிக்கையிலான மற்றும் அசாதாரண அளவிலான தகவல்களை" அனுப்பிய 20 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்சாப் கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. பிரசாந்தோ கே. ராய்

  தொழில்நுட்ப எழுத்தாளர்

  ட்விட்டர்

  ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் விதிகளுக்கு உடன்படாத நிறுவனங்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ட்விட்டர் மூலமே சமூக ஊடகங்களுக்கு காண்பிக்க இந்திய அரசு முயல்வதாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது என்று டிஜிட்டல் உரிமைகள் செயல்பாட்டாளர் நிகில் பஹாவா கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 6. ட்விட்டருக்கு தடை விதிப்பது நோக்கமல்ல, விதிகளை பின்பற்றுவதே அவசியம்: ரவிசங்கர் பிரசாத்

  RAVISHANKAR PRASAD

  இந்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய சமூக ஊடக கட்டுப்பாட்டு விதிகள் விவகாரத்தில் ட்விடட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே இணக்கமற்ற சூழல் நிலவுகிறது.

  சமீபத்தில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சில ட்விட்டர் பயனர்கள் பதிவிட்ட சரிபார்க்கப்படாத கருத்துகள் விவகாரத்தில் அந்த நபர்கள் மற்றும் ட்விட்டர் நிறுவனம் மீது உத்தர பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

  இதுதான் புதிய சமூக ஊடக விதிகள் அமலுக்கு வந்த பிறகு நாட்டிலேயே ட்விட்டர் மீது பதிவாகும் முதல் வழக்காகும். இந்த விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்தை மத்திய அரசு இலக்கு வைப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

  இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விதிகளை மீறி ட்விட்டர் நிறுவனம் செயல்படக்கூடாது," என்று தெரிவித்தார்.

  ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுமா என்று கேட்டதற்கு, "அத்தகைய நடவடிக்கையை அரசு ஆதரிக்கவில்லை," என்று குறிப்பிட்டார்.

  வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களும் எப்போதும் போல அதை செயல்படுத்தலாம். அவ்வாறு அந்த தளத்தில் பகிரப்படும் தகவல் குழு வன்முறை, கலவரம், கொலை, பெண்களை ஆபாசமாக காட்டுவது, பாலியல் ரீதியாக சிறார்களை தவறாக பயன்படுத்துவது போன்றவற்றை பிரதிபலிப்பதாக இருந்தால், பிறகு அந்த வைரல் தகவல்கள் எங்கிருந்து ஆரம்பத்தில் பகிரப்பட்டது என்பதை அறியவே அரசு முற்படும். அது எல்லை தாண்டி இந்தியாவுக்கு வெளியே இருந்து சித்தரிக்கப்பட்டு இந்தியாவுக்குள் நுழைந்தால் இங்கிருந்து முதலில் அதை பகிர்ந்தது யார் என்பதை கண்டுபிடிக்கவே அரசு முனையும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

 7. Video content

  Video caption: இந்திய அரசு சமூக ஊடகங்களுக்கு அறிவித்துள்ள கட்டுப்பாட்டை ஆட்சேபிக்கும் வாட்ஸ் ஆப்.

  இந்திய அரசின் சமூக ஊடகங்களுக்கு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்ட ஃபேஸ்புக், ட்விட்டர். ஆட்சேபனை தெரிவித்த வாட்ஸ் ஆப்.

 8. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  சித்தரிப்புப் படம்

  வாட்சாப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் பரவும் போலி விளம்பரங்களில் கொடுக்கப்பட்ட அலைபேசி எண்கள், இணையதளம் என பலவும் போலியானவை என பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்தபின்னர்தான் தெரிந்துகொண்டதாக கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 9. வாட்ஸ்அப்

  சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் இருக்கக்கூடிய புதுச்சேரியில், ஒவ்வொரு தொகுதியிலும் 950க்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர். அதற்குரிய தொலைபேசி எண்கள், இந்த குழுவிற்கு அட்மின் என இவ்வளவு பெரிய வேலை எப்படி நடந்தது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 10. வாட்ஸப்

  புதிய கொள்கைகளை வாட்ஸ்அப் நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, தனியுரிமை தொடா்பான புதிய கொள்கைகளை அமல்படுத்தக் கூடாது என வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4