ஓ. பன்னீர்செல்வம்

 1. ஆ.விஜய்ஆனந்த்

  பிபிசி தமிழ்

  அதிமுக

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ` தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். கூட்டத்தில் என்ன நடந்தது?

  மேலும் படிக்க
  next
 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  எடப்பாடி பழனிசாமி vs ஓ. பன்னீர்செல்வம் சசிகலா

  , தென் மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா மேற்கொண்டுள்ளார். சசிகலாவுக்கு ஆதரவாக பன்னீர்செல்வம் பேசிய வார்த்தைகள், அ.தி.மு.கவின் மற்றொரு பிரிவினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

  மேலும் படிக்க
  next
 3. மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா சசிகலா?

  ஆ. விஜயானந்த்

  சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  சசிகலாவுக்கு அ.தி.மு.கவில் இடமில்லை என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பேசி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள கருத்து, விவாதப் பொருளாக மாறியுள்ளது.

  பசும்பொன்னில் வரும் 30 ஆம் தேதி தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக வங்கி லாக்கரில் இருந்து அ.தி.மு.க தரப்பில் அளிக்கப்பட்ட தங்கக் கிரீடம் மற்றும் தங்கக் கவசத்தை ஒப்படைப்பதற்காக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்திருந்தார்.

  அப்போது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது'' என்றார்.

  அப்போது, `சசிகலாவை அ.தி.மு.க ஏற்றுக் கொள்ளுமா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது மக்களின் விருப்பம். அவரை அ.தி.மு.கவில் இணைப்பது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகள் பேசி முடிவுசெய்வார்கள். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கிய இந்த இயக்கம் தொண்டர்களுக்காகவே இன்றளவும் செயல்பட்டு வருகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் கட்சி செயல்பட்டு வருகிறது'' என்றார்.

  தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், ''அம்மா உணவகத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளேன். அந்த உணவுகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்எனவும் கூறி வருகிறோம். அ.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்தினால் நாங்கள் சட்டப்பூர்வமான முறையில் போராடுவோம்'' என்றார்.

  மேலும், ''ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவின் செயல்களால் பல இடங்களில் அ.தி.மு.கவின் வெற்றி மறைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்'' என்றார்.

  அண்மையில், 'பகை வெல்வோம்' என்றபெயரில் தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அவருக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் பேசி வரும் நிலையில், ஓ.பி.எஸ்ஸின் கருத்து அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஓ. பன்னீர்செல்வம்
 4. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  பன்னீர்செல்வம்

  சென்னை கேசவபிள்ளை பூங்கா பல அடுக்கு கட்டட விவகாரத்தில் ஐ.ஐ.டி நிபுணர் குழு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் `மக்களுக்குத் திட்டங்களைக் கொடுப்பதை விட தனக்குத்தானே லாபம் சம்பாதிப்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணியாக இருந்துள்ளது,' என்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ பரந்தாமன். என்ன நடக்கிறது?

  மேலும் படிக்க
  next
 5. சேகர் ரெட்டி டைரி: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்பட 12 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்

  ஆ. விஜயானந்த்

  தொழிலதிபர் சேகர் ரெட்டியின் டைரியில் இடம்பெற்றிருந்த பெயர்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட முன்னாள் அமைச்சர்கள் 12 பேருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம், விவாதப் பொருளாக மாறியுள்ளது.

  வேலூர் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த சேகர் ரெட்டி, கடந்த 2011-16 அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மணல் உள்பட பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் கொடிகட்டிப் பறந்தார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல அமைச்சர்களுடன் அவர் நெருக்கமாக இருந்ததாகவும் தகவல்வெளியானது.

  இந்நிலையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை சேகர் ரெட்டி வாங்கியதாகக் கூறப்பட்டது.

  இதையடுத்து, சேகர்ரெட்டியின் காட்பாடி இல்லம், சென்னை அலுவலகம் உள்பட அவரது நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பெட்டி பெட்டியாக 24 கோடி ரூபாய் அளவுக்கு புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

  இந்த விவகாரத்தில் சேகர்ரெட்டி, பிரேம்குமார், ஸ்ரீனிவாசலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா ஆகிய ஆறு பேர் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  இந்த வழக்கில் சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என சி.பி.ஐ கூறியதால், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

  இந்தச் சூழலில் சேகர் ரெட்டியின் டைரியில் இடம் பெற்றிருந்த பெயர்கள் தொடர்பாக, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு சி.பி.ஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

  இந்த 12 பேர் பட்டியலில் அ.தி.மு.கவில் அமைச்சராக இருந்து தற்போது தி.மு.கவில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

  EPS OPS
 6. மாற்றிப் பேசுவது தி.மு.கவுக்கு கைவந்த கலை!- ஜி.எஸ்.டி விவகாரத்தில் ஓ.பி.எஸ் விமர்சனம்

  `ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சும் பேசுவது தி.மு.கவுக்கு கைவந்த கலையாக இருக்கிறது' என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

  பெட்ரோலிய பொருள்களை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரும் விவகாரத்தில் தி.மு.கவின் நிலைப்பாட்டை இவ்வாறு அவர் சாடியுள்ளார்.

  உ.பி மாநிலம் லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காத நிலையில், அவர் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ` கலால் வரி மற்றும் மேல் வரி விதிப்புகளில் செய்யப்பட்ட மாற்றத்தால் மத்திய அரசின் வருமானம் அதிகரித்த நிலையில், மாநிலங்கள் பெரும் அளவில் வருவாய் இழப்பை சந்திக்கின்றன.

  இந்தநிலையில், ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வருவது மாநிலங்களுக்கு மிகப் பெரிய வரி வருவாய் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அநீதியாகவும் அமையும். பெட்ரோல், டீசலுக்கான மேல் வரிகளை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்தால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்த தங்களின் கருத்தை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருக்கிறோம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

  "மாநில சுயாட்சி, நீட் தேர்வு உள்பட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சும் பேசுவது தி.மு.கவுக்கு வாடிக்கையாக உள்ளது. அந்த வரிசையில் பெட்ரோலிய பொருள்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் அல்லது ஆயத்தீர்வை குறைக்கப்பட வேண்டும் என்றார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது" என்கிறார் ஓ.பி.எஸ்.மேலும், "ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்திலும், ` பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் பெட்ரோலிய பொருள்களை சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தினார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலைப்பாடு மாறிவிட்டது. லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டிக்கான 45வது கவுன்சில் கூட்டத்தில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி பெட்ரோல், டீசலை சரக்குகள் மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடர்பான தீர்மானம் பரிசீலிக்கப்பட்டது. இதனை பல்வேறு மாநிலங்கள் ஏற்க மறுத்ததால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.இதில், தி.மு.க சார்பில் நிதி அமைச்சர் பங்கேற்காவிட்டாலும், மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதாவது, ஜி.எஸ்.டியின்கீழ் பெட்ரோலிய பொருள்கள் வருவதை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய தி.மு.கவின் நிலைப்பாடாக இது உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதன் காரணம், எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதால்தான் என்ற ஐயம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு பெட்ரோலிய பொருள்களை சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் கொண்டு வந்து தேர்தலுக்கு முந்தைய தி.மு.கவின் நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார் ஓ.பி.எஸ்.

 7. மகளிருக்கு இலவசப் பயணம். ஆண்களுக்கு கூடுதல் கட்டணமா? - ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

  ஆ. விஜயானந்த்

  அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணம் ஏற்படுத்தும் இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். `அரசுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா?' எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, `அரசுப் பேருந்துகளில் உழைக்கும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவிகள் ஆகியோர் இலவசமாகப் பயணம் செய்யும் வசதி வழங்கப்படும்' என தி.மு.க அறிவித்தது. இதன்பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அனைத்து மகளிரும் அரசுப் பேருந்துகளில்இலவசமாகப் பயணம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் அரசுக்கு 1,358 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

  இந்நிலையில், போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ` அரசு உள்ளூர் பேருந்துகளில்மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும் பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்வதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.

  இந்த அறிவிப்பின்படி, நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சில பகுதிகளில், பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பேருந்துகளில் அந்த இழப்பை ஈடு செய்ய பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும் இதற்குமுன் 5 ரூபாய் என்பதுதான் குறைந்தபட்ச கட்டணமாக இருந்தது என்றும் சட்டத்துக்குப் புறம்பாக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது என்றும், இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தவறு சீர்செய்யப்படும் என்று பதில் அளித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன' எனக் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும், ` நகர்ப்புற பேருந்துகளைவிட புறநகர் பேருந்துகளில் கட்டணம் அதிகம் என்றும் நகர்ப்புற பேருந்துகளில் மட்டும்தான் இலவசப் பயணம் அனுமதிக்கப்படுகிறது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் பேருந்துகளில் `மகளிர் இலவசம்' என்ற பலகை வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் மகளில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் ஆனால், ஆண்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்பதற்குப் பதிலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் இலவச மகளிர் பயணத்தை அனுமதிக்கும் பேருந்துகள் நகர்ப்புறபேருந்துகள் என்ற போதிலும் ஆண்களில் குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

  இதுபோன்ற விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமச்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழித்தடங்களில் நடப்பதாகவும் புறநகர் பேருந்துகளில் சாதாரண மற்றும் விரைவுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்வசூலிக்கப்பட்டாலும் அந்தப் பேருந்துகள் பெரும்பாலும் அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தப்படுவதாகவும் பயண நேரத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லையென்றும் அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதேமுறை தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுவதற்கும்வாய்ப்புகள் உள்ளன.

  `மகளிருக்கு இலவசப் பயணம்' என அறிவித்துவிட்டு அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய யுக்திகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல். இது அரசாங்கத்துக்கு, ஆட்சியாளர்களுக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லதுதெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் கண்டிக்கத்தது. எனவே, இதில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 8. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  தமிழ்நாடு பா.ஜ.க

  தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கிவிட்டது. அதைப் பற்றி எடுத்துக் கூறுவதற்காகத்தான் இருவரும் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் நடக்கும் ரெய்டுகளை நிறுத்துமாறு பா.ஜ.கவிடம் கூறினாலும் அதனை தி.மு.க அரசு கேட்குமா எனத் தெரியவில்லை என்கிறது இந்த விவகாரத்தில் இருவரின் செயல்பாடுகளையும் நன்கறிந்த வட்டாரம்.

  மேலும் படிக்க
  next
 9. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  இ.பி.எஸ்

  அ.தி.மு.க அரசின் அமைச்சர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் புகார் மனு ஒன்றை மு.க.ஸ்டாலின் அளித்திருந்தார். சுமார் 97 பக்கங்களுக்கு அந்தப் புகார் மனு இருந்தது.

  மேலும் படிக்க
  next
 10. ஆ.விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  சசிகலா

  அ.தி.மு.கவினரிடம் வி.கே.சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. `அ.தி.மு.கவில் சசிகலாவுக்கு இடமில்லை' என எடப்பாடி பழனிசாமி கூறிய பின்னரும் தொடர்ந்து அவர் பேசி வருவது ஏன்? சசிகலாவின் திட்டம்தான் என்ன?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6