சீமான்

 1. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  பெரியார்

  தமிழ்நாடு அரசின் சார்பிலேயே பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைக்கப்பட போவதாக பலரும் புரிந்துகொண்டனர்.குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு சிலை அமைப்பதைக் கடுமையாக விமர்சித்தார். உண்மையில் பெரியாருக்கு சிலை வைப்பது யார்?

  மேலும் படிக்க
  next
 2. சீமான் திராவிடம்

  குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு ரூ. 3,000 கோடியில் மோதி சிலை வைத்ததற்கும், நீங்கள் ரூ. 100 கோடியில் பெரியாருக்கு சிலை வைப்பதாக அறிவிப்பதால் உங்களிருவருக்கும் என்ன பெரிய மாறுபாடு இருக்கிறது? தமிழ்நாட்டில் பெரியாருக்கு போதும் என்ற அளவுக்கு சிலைகள் உள்ளன. இப்படி செய்வதற்குப் பெயர்தான் பணக்கொழுப்பு, அதிகாரத் திமிரு. பெரியார் இருந்தால் கூட இப்படி செய்வதை விரும்பியிருக்க மாட்டார். இந்தக் கொடுமைகளை எல்லாம் எடுத்துரைத்தால், சிலர் திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார்கள் என்று கொதிக்கிறார்கள் என்கிறார் சீமான்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: கே.டி. ராகவன் விவகாரம் பற்றி சீமான் பேசிய காணொளி

  கே.டி. ராகவன் விவகாரம் பற்றி சீமான் பேசிய காணொளி

 4. சீமான்

  யார் யாருடன் பேசுகிறார்கள் என்பதை பதிவு செய்து வெளியிடுவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? இந்த காணொளியை வெளியிட்ட நபரைக் கைது செய்திருக்க வேண்டும். உலகின் யாரும் செய்யாத ஒன்றையா அவர் செய்துவிட்டார். சட்டமன்றத்திலேயே ஆபாசப் படம் பார்த்துள்ள சம்பவங்களும் வெளிவந்துள்ளன" என்கிறார் சீமான்.

  மேலும் படிக்க
  next
 5. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  N lingusamy / seeman

  'பகலவன்' சாயலில் இருக்கும் கதையை லிங்குசாமி எடுத்தால் அதனால் தாம் பாதிக்கப்படுவதாகவும் அந்த கதையை இயக்குநர் லிங்குசாமி கைவிட வேண்டும் எனவும் சீமான் தெரிவித்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
 6. ஃபேமிலி மேன் 2 சீரீஸ் திரையிடுவதை நிறுத்த வேண்டும் : சீமான் வலியுறுத்தல்

  சீமான்

  ஃபேமிலி மேன் 2 சீரீஸ் ஒளிபரப்பை நிறுத்தவில்லை என்றால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ப்ரைம் வீடியோ உள்ளிட்ட அனைத்து அமேசான் சேவைகளையும் புறக்கணிப்போம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  அதில் ஈழ விடுதலை போராட்டம் தவறான முறையில் காட்டப்பட்டுள்ளதாகவும், தமிழர்கள் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  12 கோடி தமிழ் தேசியவாதிகளை புண்படுத்தும் வகையில் இந்த சீரீஸ் எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  View more on twitter
 7. தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்க - சீமான் எச்சரிக்கை

  அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி ஃபேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன.

  விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

  இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுவுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல. ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப்பெரும் சனநாயகவாதிகளாக நின்று அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப்போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

  தமிழர்களைத் தவறாகத் தோற்றம் கொள்ளச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும், கொந்தளிப்புடனும் எதிர்வினையையும், கண்டனத்தையும் பதிவுசெய்து வருகின்றனர்.

  சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்கள் போர் மரபுகளையும், விதிகளையும் மீறி உலக நாடுகளின் துணையோடு உள்நாட்டுப்போரை நடத்தி நச்சுக்குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்றொழித்தபோதும் சிங்கள மக்கள் மீது சிறுதாக்குதல் கூடத் தொடுக்காது மரபுவழிப் போரையே இறுதிவரை முன்னெடுத்து, அழிவைச் சந்தித்தபோதும் அறவழிலிருந்து வழுவாது நின்ற விடுதலைப்புலிகளின் மாண்பைப் பேசாமல், அவர்களை ஈவிரக்கமற்ற வன்முறைக்கூட்டம் போலக் காட்ட முயலும் இத்தொடரை இணையவெளியில் ஒளிபரப்புவதை ஒருநாளும் ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஆகவே, அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

  ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும்.

  அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

  சீமான்
 8. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  சீமான்

  சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் பெற்றுள்ளது. வாக்குகளாகக் கணக்கிட்டால் 30,41,974 பேர் நாம் தமிழர் கட்சியை ஆதரித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 9. எம்.மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  Seeman

  நடந்து முடிந்திருக்கும் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது கடந்த தேர்தலைவிட ஆறரை மடங்கு.

  மேலும் படிக்க
  next
 10. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் தோல்வி

  TAMILNADU
  Image caption: சீமான்

  சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியடைந்தார்.

  அத்தொகுதியில் திமுக வேட்பாளர் கே.பி. சங்கர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே. குப்பனை விட 37,661 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  கே.பி. சங்கருக்கு 482 தபால் வாக்குகள் உட்பட 87,703 வாக்குகளும் குப்பனுக்கு 89 தபால் வாக்குகள் உட்பட 50,435 வாக்குகளும் கிடைத்துள்ளன.

  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 100 தபால் வாக்குகள் உட்பட 48,497 வாக்குகள் கிடைத்துள்ளன.

பக்கம் 1 இல் 4