தேர்தல் ஆணையம்

 1. தமிழ்நாட்டில் காலியாகவுள்ள மேலும் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4இல் தேர்தல்

  இந்திய தேர்தல் ஆணையம்

  தமிழ்நாட்டில் காலியாகவுள்ள மேலும் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களுடைய பதவிகளை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட காலி இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும். இதற்கான அறிவிக்கை செப்டம்பர் 15இல் வெளியாகும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 22, மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 27," என்று கூறப்பட்டுள்ளது.

  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அதிமுக உறுப்பினர் முகம்மது ஜான் மாரடைப்பால் காலமானார்.

  மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களாக இருந்த முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், வைத்திலிங்கம் ஆகியோர் ஓரத்தநாடு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

  இதையடுத்து அவர்கள் எம்எல்ஏ பதவியை ஏற்க அவர்கள் இருவரும் முடிவெடுத்து தங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தனர்.

  தனித்தனியாக தேர்தல் நடத்த திமுக கோரிக்கை

  இந்த நிலையில், காலியான மூன்று தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மாநிலத்தில் ஆளும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து முதலாவதாக முகம்மது ஜான் இடத்துக்கு போட்டியிருக்கும்பட்சத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததது.

  இதன்படி திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். சுயேச்சையாக 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் திமுக வேட்பாளர் அப்துல்லா தவிர மற்ற மூவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

  தமிழக சட்டபு்பேரவையில் மொத்தம் உள்ள 234 எம்எல்ஏக்களில் 118 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள்தான் அந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. அந்த வகையில் தி.மு.க.வுக்கு பெரும்பான்மைக்கும் அதிகமான 125 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் தி.மு.க வேட்பாளர் எம்.எம்.அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் கூறினார்.

  இந்த சூழலில் மீதமுள்ள இரண்டு காலியிடங்களுக்கான தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  இந்திய தேர்தல் ஆணையம்
 2. தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் : இந்திய தேர்தல் ஆணையம்

  தேர்தல் ஆணையம்

  தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கு வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கான அறிவிக்கை ஆகஸ்ட் 14 வெளியிடப்படும். வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 31வரை பெறப்படும்.

  யார் இந்த மொஹமதுஜான்?

  அதிமுகவைச் சேர்ந்த மொஹம்மதுஜான் (74) கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானதையடுத்து, அவர் வகித்து வந்த எம்.பி பதவிக்கான இடம் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

  அதிமுகவில் 1996 முதல் 2001ஆம் ஆண்டுவரை ராணிப்பேட்டை முனிசிபாலிட்டி தலைவராகவும் 2011 சட்டப்பேரவை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆகவும் ஆனார் மாஹம்மத்ஜான்.

  2019ஆம் ஆண்டில் தமிழ்நாடு வஃக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட அவர், அதே ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வானார். அவரது பதவிக்காலம் ஜூலை 24, 2025ஆம் ஆண்டு வரை இருந்தது.

  தமிழக அரசுக்கு உத்தரவு

  இந்த தேர்தலை கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

  கொரோனா தடுப்பு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த தனி அலுவலரை நியமிக்கும்படியும் தமிழக தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

  தமிழ்நாட்டில் மொஹம்மத்ஜான் மறைவைத் தொடர்ந்து ஒரு இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

  இது தவிர, அதிமுகவைச் சேர்ந்த கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவர்கள் ஏற்கெனவே வகித்து வந்த எம்.பி பதவியை கடந்த மேத மாதம் ராஜிநாமா செய்தனர்.

  இதில் முனுசாமியின் பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் வரையும், வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையும் இருந்தது. மாநிலங்களவையில் தற்போது அதிமுகவுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பேரும், புதுச்சேரியில் இருந்து என். கோகுலகிருஷ்ணனும் உறுப்பினர்களாக உள்ளனர்.

  இந்திய தேர்தல் ஆணையம்
 3. கமல்ஹாசன்

  தம் தவறுகளை மறைக்க சிலர் எழுப்பும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. காலம் பதில் சொல்லும். கட்சியின் உள் கட்டமைப்பை தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்கு ஏற்ப மாற்ற ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. கேரளா

  கேரளா முதல்வராக பதவியேற்றுள்ள பினராயி விஜயனின் அமைச்சரவையில் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இடம்பெற்ற ஒருவர் கூட அமைச்சராகவில்லை. பினராயி நீங்கலாக அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் புது முகங்கள்.

  Catch up
  next
 5. கேரள முதல்வராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன் - அமைச்சரவையில் 20 புது முகங்கள்

  kerala

  கேரள மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.

  76 வயதாகும் பினராயி விஜயன் அமைச்சரவையில் கடந்த முறை அவரது ஆட்சியில் இடம்பெற்ற யாரும் இடம்பெறவில்லை. இம்முறை அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் புது முகங்கள்.

  திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இதையொட்டி நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் என்சிபியின் ஏ.கே. சசீந்திரன், இந்திய தேசிய லீக்கின் அகமது தேவர்கோவில், ஆர். பிந்து, பி.ஏ. முகம்மது ரியாஸ் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

  கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற கேரள மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 140 இடங்களில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வென்றுள்ளது.

 6. நடராஜ் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  என் ஆர் காங்கிரஸ்

  சட்டப்பேரவையில் சபாநாயகர் மூலம் பதவி ஏற்காத நிலையில் மத்தியில் அங்கம் வகித்த தி.மு.க தனது செல்வாக்கை பயன்படுத்தி மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்து அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்த இந்த நடைமுறையை 1990ஆம் ஆண்டே திமுக அரங்கேற்றியது.

  மேலும் படிக்க
  next
 7. முதலவராகப் பொறுப்பேற்ற ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஆளுநர் தமிழிசை.

  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின்‌ 15வது சட்டபேரவைக்கான முதல்வர் பதவியை இன்று பிற்பகல் சரியாக 1.20 மணிக்கு ரங்கசாமி ஏற்றார். அவருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

  மேலும் படிக்க
  next
 8. என் ரங்கசாமி, புதுச்சேரி முதல்வர்

  இவருடைய தனிப்பட்ட ஆளுமையின் மேல் மக்கள் கொண்ட ஈர்ப்பின் விளைவாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர் 2011 பிப்ரவரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் தேர்தலைச் சந்தித்து, ஆட்சியையும் பிடித்தார்.

  மேலும் படிக்க
  next
 9. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  மக்கள் நீதி மய்யம் கமல்

  மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து டாக்டர் மகேந்திரன், மவுரியா, சி.கே.குமரவேல் என முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகியுள்ளனர். ` இவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை' என விலகல் கடிதத்தில் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். என்ன நடந்தது?

  மேலும் படிக்க
  next
 10. உச்ச நீதிமன்றம்

  கொரோனா காலத்தில் உயர் நீதிமன்றம் வெளியிட்ட கருத்து மிகவும் கடுமையானது மற்றும் சரியானது அல்ல என்று கூறிய நீதிபதிகள், வாய்மொழியாக வெளியிடப்படும் நீதிமன்ற கருத்துகள் உத்தரவின் அங்கமாகாது. எனவே, அதை நீக்குமாறு விடுக்கும் கோரிக்கை வலுவற்றது. அதே சமயம், ஊடகங்கள், நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் கருத்துகளை எல்லாம் செய்திகளாக்கி பரபரப்பை ஏற்படுத்தாமல் தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9