அதிமுக

 1. அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்

  அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல்களுக்கு இடைக்காலத் தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அந்தப் பதவிகளுக்கு விருப்பமனு வாங்க வந்த ஒருவர் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்து விரட்டப்பட்டார்.

  அ.இ.அ.தி.மு.கவின் ஒருங்கிணப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு உரியவர்கள் அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள் என டிசம்பர் 1ஆம் தேதி நடந்த அ.தி.மு.கவின் செயற்குழு கூட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து இந்தப் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் ஏழாம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளாக பொன்னைய்யன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

  விரிவாகப் படிக்க: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

  ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.
 2. ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி கே. பழனிசாமி

  அப்போது அ.தி.மு.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கே.சி. பழனிச்சாமிக்கும் அ.தி.மு.கவுக்கும் தொடர்பில்லையென்பதால் அவரது மனுவை ஏற்கக்கூடாது, தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கூடாது என்று கோரினார்.

  மேலும் படிக்க
  next
 3. எடப்பாடி பழனிசாமி vs ஓ. பன்னீர்செல்வம் சசிகலா

  நேற்று நடந்து முடிந்த அ.தி.மு.கவின் செயற்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுச் செயலாளருக்கு இணையான பதவிகளைப் போல மாற்றி அ.தி.மு.கவின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்ட நிலையில், வி.கே. சசிகலா இந்த அறிக்கையை விடுத்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  அதிமுக

  எம்.ஜி.ஆர். காலத்தில் கட்சி துவங்கப்பட்டபோது அடிப்படை உறுப்பினரால்தான் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதியாக இருந்தது. ஜெயலலிதாவும் அதே விதியைத்தான் பின்பற்றினார். ஆகவேதான், ஒருங்கிணைப்பாளரையும் இணை ஒருங்கிணைப்பாளரையும் நேரடியாக கட்சியின் உறுப்பினர்கள் கொண்டுவருவார்கள் என்று கொண்டு வந்திருக்கிறோம் என்கிறார் வைகைச்செல்வன்

  மேலும் படிக்க
  next
 5. யுபிஎஸ்சி, சிஎஸ்இ முதல்நிலை தேர்வுகள்: இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு - மக்களவையில் கனிமொழி எம்..பி

  யுபிஎஸ்சி, சிஎஸ்இ முதல் கட்ட தேர்வுகள் மற்றும் இதர மத்திய அரசுப்பணி தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவதால் இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வாய்ப்பு பெறமுடிவதில்லை என்று மக்களவையில் பேசினார் திமுக எம்.பி கனிமொழி.

  இது தொடர்பான காணொளியை கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.அரசியலமைப்பு சட்டத்தில் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் இந்த போட்டி தேர்வுகளை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவர் மக்களவையில் பேசினார்.

  View more on twitter
 6. அதிமுகவில் புதிய விதி - என்ன நடக்கிறது அந்த கட்சியில்?: வைகைச்செல்வன் பேட்டி

  முரளிதரன் காசி விஸ்வநாதன்

  அதிமுகவின் இன்றைய செயற்குழு கூட்டத்தில் புதிய விதி கொண்டு வரப்பட்டு கட்சியை கட்டுப்படுத்தும் இரு பதவிகளுக்கு ஒற்றை வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து் பாஜகவின் அழுத்தத்தில் அதிமுக உள்ளதா என்பது குறித்தும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழ் நேரலையின்போது கேள்வி எழுப்பப்பட்டது.அவர் அளித்த பதில்கள் குறித்து அறிய இங்கே சொடுக்கவும்.இந்த செய்தியின் காணொளி வடிவை இங்கே பார்க்கலாம்.

  View more on facebook
 7. அதிமுக தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

  இன்று நடந்த அதிமுக செயற்குழுவில் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  கட்சியின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

  View more on twitter
 8. குழந்தை

  கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் இருந்தும் வெளியேறும் சர்வதேசப் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

  Follow
  next
 9. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  அன்வர் ராஜா

  அ.இ.அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவின் செயலருமான அன்வர் ராஜா நீக்கப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து அறிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 10. எடப்பாடி பழனிசாமி

  மணி எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 54