இந்திய ராணுவம்

 1. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்!

  பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குவோர் எம் ஏ பரணிதரன், பரணிதரன், கெளதமன் முராரி.

  நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்

 2. பிரிவு உபசார விழாவில் உயிரிழந்த ராணுவ வீரர்

  தூத்துக்குடி மாவட்டம் கீழ விளாத்திகுளத்தினை சேர்ந்த ராணுவ வீரர் ரவிக்குமார் என்பவர் பஞ்சாப் மாநிலத்தில் அவருக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் மயக்கி விழுந்து உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

  ரவிகுமாருக்கு இன்றுடன் பணிநிறைவு பெறும் நிலையில் கடந்த 29ந்தேதி நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் மயக்கி விழுந்து உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கீழ விளாத்திகுளத்தினை சேர்ந்தவர் ரவிக்குமார் (46). இவர் கடந்த 28 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

  தற்பொழுது பஞ்சாப் மாநிலம் பாட்டிலாயாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் லேப் டேக்னீசினியாக பணியாற்றி வந்துள்ளார். இன்று (31.10.2021) ரவிக்குமார் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்று முன்தினம் (29.10.2021) அவர் பணிபுரிந்த இடத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றுள்ளது. விழாவில் ரவிக்குமார் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதையெடுத்து விழாவில் கலந்து கொண்டவர்கள் ரவிக்குமாரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையெடுத்து உடற்கூறாய்வுக்கு பின்னர் பஞ்சாபில் இருந்து மதுரைக்கு விமானம் மூலமாக உடல் கொண்டு வரப்பட்டு, அங்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

  ரவிக்குமார் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விளாத்திகுளம் வட்டாச்சியர் விமலா அஞ்சலி செலுத்தினார்.

  ரவிக்குமார் மனைவி ராணியம்மாளிடம், ரவிக்குமார் உடலில் போர்த்தப்பட்டு இருந்த தேசிய கொடி ஒப்படைக்கப்பட்டது. இதையெடுத்து அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

  பிரிவு உபசார விழாவில் உயிரிழந்த இராணுவ வீரர்
 3. ரஞ்ஜன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக, இலங்கையில் இருந்து

  இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே

  சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்திற்கு பின்னர் வெளிநாட்டைச் சேர்ந்த, உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் இலங்கைக்கு வருகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

  மேலும் படிக்க
  next
 4. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் நகரில் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் ஐவர் பலி

  மொஹித் கந்தாரி ஜம்முவில் இருந்து, பிபிசி இந்திக்காக

  இந்திய ராணுவம்

  ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு ராணுவ அதிகாரி உள்பட ஐந்து வீரர்கள் பலியானார்கள்.

  எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள தேரா கி கலி என்ற பகுதியில் ஆயுததாரிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது.

  தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  இது குறித்து பிபிசி இந்தியிடம் பேசிய ஜம்முவில் உள்ள இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் லெப்டிணன்ட் கர்னல் தேவ்ந்திர ஆனந்த், "வெகு தூரத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி ஒரு ஜேசிஓ அதிகாரி உள்பட ஐந்து வீரர்கள் பூஞ்ச் பகுதியில் திங்கட்கிழமை காலையில் தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியாகியுள்ளனர். அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது," என்றார்.

  தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த நம்பகமான உளவுத்தகவல் அடிப்படையில் சூரன்கோட் தாலுகாவுக்குக் கீழ் உள்ள தேரா கி கலி என்ற பகுதியில் இந்த துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.

  தாக்குதல் நடவடிக்கையில் படுகாயம் அடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

  உயிரிழந்தவர்களில் ஒருவரான நாயக் சுபேதார் ஜஸ்விந்தர் சிங், நாயக் மந்தீப் சிங், சிப்பாய் கஜன் சிங் ஆகியோர் பஞ்சாபின் கபூர்தலாவைச் சேர்ந்தவர்கள். சிப்பாய் சரஜ் சிங் உத்தர பிரதேசத்தின் ஷாஹ்ரன்பூரைச் சேர்ந்தவர். வைசாக், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

  View more on twitter
 5. இந்திய - சீன எல்லை பதற்றம்

  இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்து உள்ளதால் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இருவருமே தற்போது கிழக்கு லடாக் பகுதியில் மேலும் சில மாதங்களைக் கழிக்க வேண்டி இருக்கும்.

  மேலும் படிக்க
  next
 6. தேசிய பாதுகாப்பு கல்லூரி மூலம் பெண்களுக்கு ராணுவத்தில் நிரந்தர கமிஷன் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

  இந்திய ராணுவம்

  இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் சேர ஏதுவாக பெண்கள் தேசிய ராணுவ கல்லூரியில் சேரலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

  இது தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, "ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய முப்படை தளபதிகளும் அரசாங்கமும் நிரந்தர கட்டளை பணியில் பெண்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் கடற்படை பயிற்சிக் கல்லூரியில் அவர்களுக்கு நிரந்தர கட்டளைப் பணி வழங்கப்படுவதற்கான முடிவு நேற்று மாலை எடுக்கப்பட்டது," என்று கூறினார்.

  ஆனால், இந்த வழக்கில் மத்திய அரசின் இந்த முடிவுக்காக இந்திய முப்படைகளில் பணியாற்றி வந்த பல முன்னாள் பெண் அதிகாரிகள் கடுமையான சட்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். சிலர் பணிக்காலத்திலேயே ஓய்வு பெற்றனர். முழு விவரம் அறிய இந்த செய்தியை பார்க்கவும்.

  இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமநிலை உறுதியாகுமா? - நீதித்துறை தலையீடும் வழக்குகளும்

 7. இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படுவதால் என்ன பயன்?

  பெண்கள் நீண்ட காலமாக இந்திய ராணுவத்தில் நிரந்தர கமிஷன் கோரி வந்தனர். இருப்பினும், இது ராணுவம் மற்றும் அரசாங்க மட்டத்தில் எதிர்க்கப்பட்டு வந்தது. திருமணம், குழந்தைகள் போன்ற காரணங்களும் ஆண்களின் எதிர்ப்பும் இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: பாகிஸ்தான் ஜெனரல் முஷாரஃப் தொலைபேசியை ஒட்டுக் கேட்ட இந்திய உளவுத் துறை - என்ன நடந்தது?

  பாகிஸ்தான் ஜெனரல் முஷாரஃப் தொலைபேசியை ஒட்டுக் கேட்ட இந்திய உளவுத் துறை - என்ன நடந்தது?

 9. இந்திய ராணுவம் அறிக்கை

  சென்ற பிப்ரவரி மாதம் இந்திய மற்றும் சீன படைகள் விலக்கப்பட்ட கிழக்கு லடாக் பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்க இரண்டு நாடுகளும் எந்த விதமான முயற்சியிலும் ஈடுபடவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது என்கிறது பிடிஐ செய்தி முகமை.

  மீதமுள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கவே இரு தரப்பும் விரும்புவதாக இந்திய ராணுவம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

  View more on twitter
 10. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  கைலாய மலை

  எப்போதெல்லாம் இந்தியா, சீனா இடையே லடாக் எல்லை, அருணாசல பிரதேசம் எல்லை பகுதியில் இரு நாட்டு படையினர் இடையே மோதல் நடக்கிறதோ அப்போதெல்லாம் கைலாய மலைக்கு வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு தடை விதிப்பதையோ கெடுபிடி காட்டுவதையோ சீனா வழக்கமாக கொண்டிருக்கும்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 11