கிம் ஜோங்-உன்

 1. வடகொரியாவில் உணவுப் பிரச்சனை நிலவுவது ஏன்?

  கிம் ஜாங் உன்
  Image caption: கிம் ஜாங் உன்

  "தெருக்களில் அதிகம் ஆதரவற்ற குழந்தைகள் இருப்பதாகவும் பட்டினிச் சாவுகள் நிகழ்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன" என்கிறார் டெய்லி என்.கே என்ற நாளிதழின் ஆசிரியர் லீ சாங் யாங். இவருக்கு வடகொரியாவில் செய்தித் தொடர்புகள் உள்ளன.

  "வட கொரியாவில் உள்ள அடித்தட்டு மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். எதிர்பார்த்ததை விட உணவுத் தட்டுப்பாடு மோசமாக இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

  வட கொரியாவிலிருந்து செய்தியைப் பெறுவது நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டிருக்கிறது. சீனாவிலிருந்து கோவிட்-19 பரவிவிடக்கூடாது என்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே எல்லை மூடப்பட்டிருக்கிறது. கொரியப் பிரிவினையின்போது தென்கொரியாவுக்குச் சென்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு செய்தி அனுப்புவதுகூட ஆபத்தான வேலையாக மாறியிருக்கிறது.

  முழுமையாகப் படிக்க இங்கே சொடுக்கவும்

 2. லாரா பிக்கர்

  பிபிசி நியூஸ், சோல்

  வட கொரியா

  "ஏற்கனவே வட கொரியாவில் தீவிரப் புயல்கள் அதிகரித்து வருகின்றன. 2020 மற்றும் 2021ம் ஆண்டில் புயல் காலங்களில் அதிகப் புயல்கள் வீசின.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: வட கொரியா தலைவரின் சபதம்: யாராலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்

  அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வட கொரியா தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பாக போடப்பட்ட நிபந்தனையை வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் ஏற்கவில்லை.

 4. கிம்

  எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார். தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும் அந்நாட்டு அவர் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 5. Ethiopia's Tigray crisis: Army launches offensive on all fronts - rebels

  தனிநாடு நாடு கேட்டுப் போராடி வரும் வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

  Follow
  next
 6. தென்கொரியாவும் அமெரிக்காவும் சீண்டுகின்றன: கிம் ஜோங் உன்

  கிம்

  தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.

  வடகொரியாவின் அரசு ஊடகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

  தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குவதாகவும் போரைத் தொடங்குவது வடகொரியாவின் நோக்கம் அல்ல எனவும் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.

  திங்கள்கிழமையன்று பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கிவைத்து கிம் உரையாற்றினார்.

  கடந்த சில வாரங்களாக வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனைகளை நடத்திய நிலையில், கிம் ஜோங் உன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

 7. ஃபேஸ்புக்

  உலக அளவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் செயலிகளின் சேவை முடங்கியிருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.40 மணி முதல் இந்த சேவை முடங்கியிருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை மூன்று செயலிகளின் நிர்வாகங்களும் இன்னும் அறிவிக்கவில்லை. சேவை முடங்கிய செய்தியை மூன்று நிறுவனங்களும் அவற்றின் ட்விட்டர் பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளன.

  Follow
  next
 8. North Korean leader Kim Jong Un delivers a policy speech at the second-day sitting of the 5th Session of the 14th Supreme People"s Assembly

  தென் கொரியாவுடன் ஹாட்லைன் தொடர்பை புதுப்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளது வட கொரியா. அதே நேரம் பகைமையான கொள்கைகளை கைவிடாமல் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா பேசுவது ஏமாற்று வேலை என்றும் அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. காங்கிரஸில் முறைப்படி இணைந்த கனையா குமார், ஜிக்னேஷ் மேக்வானி

  காங்கிரஸ்
  Image caption: கனையா குமார், ஜிக்னேஷ் மேக்வானி

  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவருமான கனையா குமார் மற்றும் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

  இவர்கள் இருவரும் செப்டம்பர் 27ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் சேர திட்டமிட்டிருந்தனர். ஆனால், விவசாயிகள் சங்கங்கள் ஒரே நாளில் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால் இவர்களின் கட்சியில் சேரும் நிகழ்வு ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டது.

  முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் கனையா குமார் ராகுல் காந்தியை சந்தித்தார், அவர் கட்சியில் சேருவதாக வதந்திகள் கிளம்பின. அதைத்தொடர்ந்து, குஜராத் சுயேச்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி கடந்த வாரம் கன்ஹையா குமாருடன் காங்கிரசில் சேரும் அறிவிப்பை வெளியிட்டார். 2017இல் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்கம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார்.

 10. வடகொரியா ஏவுகணை சோதனை

  குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் வட கொரியா செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏவியுள்ளது என்று தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

  தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான மற்றும் ஆயுதங்களை சோதனை செய்வதற்கான வடகொரியாவின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்று வடகொரியாவின் தூதர் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தெரிவித்துள்ள சூழ்நிலையில் இந்த ஆயுத சோதனை நடந்துள்ளது.

  இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மாற்று க்ரூஸ் ஏவுகணை ஆகியவற்றை வட கொரிய அரசு சோதனை செய்திருந்தது.

  சில நாட்களுக்கு முன்பு தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாங்கள் விரும்புவதாகவும் வடகொரியா அரசு தரப்பில் சென்ற வாரம் கூறப்பட்டிருந்தது.

  இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ள அமெரிக்க ராணுவம், அமெரிக்கப் படையினருக்கோ அதன் கூட்டாளி நாடுகளைச் சேர்ந்த சேர்ந்தவர்களுக்கோ வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.

  North Korea fires missile, says South's military
பக்கம் 1 இல் 8