ஹாங் காங்

 1. The Goddess of Democracy being removed by officers

  தியானென்மென் சதுக்கப் படுகொலை அருங்காட்சியகத்தில் ரெய்டு நடத்திய ஹாங்காங் போலீசார் அதை இழுத்து மூடினர். இந்த அருங்காட்சியகத்தை நடத்திய குழுவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
 2. சீனாவின் புதிய சட்டங்கள்

  இந்த சட்டப்படி, சீனாவில் இருக்கும் நிறுவனங்கள், சீன தனிநபர்களுக்கு எதிராகவோ அல்லது சீன நிறுவனங்களுக்கு எதிராகவோ வெளிநாட்டு தடை சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது.

  மேலும் படிக்க
  next
 3. சீன அதிபர்

  ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அங்கு ஜனநாயக ஆதரவுக்குரல்கள் ஒடுக்கப்படுவதாகவும் உலக அளவில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் வேளையில், சீன அதிபரின் இந்த கடுமையான எச்சரிக்கை அமெரிக்காவை குறிப்பிட்டுப் பேசுவது போல உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. ஹாங்காங்

  ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை பிரசுரிக்கும் பத்திரிகையான ஆப்பிள் டெய்லியின் கடைசி பதிப்பை படமெடுக்க ஆயிரக்கணக்கானோர் ஹாங்காங் நகரில் குவிந்தனர். இந்த பத்திரிகை 26 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சேவையை நேற்று நிறுத்திக் கொண்டது. இதன் கடைசி பிரதிகள் இன்று வெளியான நிலையில், அவற்றின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது.

  மேலும் படிக்க
  next
 5. ஹாங்காங்: புதிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் முதலாவது விசாரணை இன்று தொடக்கம்

  ஹாங்காங்

  ஹாங்காங்கில் அறிமுகமான புதிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கின் முதலாவது விசாரணை இன்று தொடங்கியுள்ளது.

  இதில் முதலாவது வழக்கை எதிர்கொள்பவர் 25 வயதாகும் டோங் யிங் கிட். அவருக்கு எதிராக தேச துரோகம், பயங்கரவாதம், ஆபத்தாக வாகனத்தை ஓட்டியது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங் சுதந்திரத்தை வலியுறுத்தும் கொடியை பறக்கச் செய்ததாகக் கூறி இவர் மீது காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

  ஆளும் அரசுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக மட்டுமே இந்த புதிய சட்டம் பாயும் என்று சீன பெருநில அரசு எச்சரித்துள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை எதிர்ப்புக்குரல்களை ஒடுக்கும் முயற்சி என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

  ஹாங்காங்கில் 2019ஆம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய அளவிலான ஜனநாயக ஆதரவு போராட்டத்துக்குப் பிறகு இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.

  இந்த சட்டத்துக்கு எதிராக சர்வதேச அளவிலான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. முதலாவது விசாரணயை எதிர்கொள்ளும் டோங் யிங் கிட், 2020ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, தனது மோட்டார் சைக்களை, காவல்துறையினர் குழுவாக நின்றபோது அவர்கள் மீது மோதும் வகையில் ஓட்டியது தொடர்பானது. அந்த சம்பவத்தில் சில காவலர்கள் காயம் அடைந்தனர்.

  மேலும், ஹாங்காங் சுதந்திர கொடியையும் அவர் தமது வாகனத்தில் பறக்கவிட்டிருந்தார். அதில் ஹாங்காங் சுதந்திரம், நமது வாழ்கால புரட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய சட்டத்தின்படி இத்தகைய செயல்பாடுகள் சட்டவிரோதமானது மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது.

  இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் டோங் யிங் கிட்டுக்கு ஆயுள் சிறை தண்டனை கிடைக்கும். புதிய சட்டம் தொடர்பான வழக்குகளை ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் நியமிக்கும் நீதிபதிகள் அல்லது மாஜிஸ்திரேட்டுகள் பிரத்யேகமாக விசாரிப்பார்கள்.

  இந்த வழக்கு விசாரணை 15 வேலை நாட்களில் நிறைவு பெறும் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறியுள்ளன.

  ஹாங்காங்
 6. ஜிம்மி லாய்

  ஹாங்காங்கின் ஊடக ஜாம்பவானான ஜிம்மி லாய் மற்றும் அரசியல் தலைவரான மார்டின் லீ ஆகியோர் அனுமதியளிக்கப்படாத பேரணியை நடத்தியதற்காக, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. காணொளி

  பிரிட்டன் ஆளுகையில் இருந்த ஹாங்காங் 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரிட்டன், சீனா இரு நாடுகளுக்கு இடையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி 1997 முதல் 50 ஆண்டுகளுக்கு 'ஒரு நாடு, இரு அமைப்பு' என்ற ஏற்பாடு நீடிக்கும்.

  மேலும் படிக்க
  next
 8. ஜஸ்டின் ஹார்ப்பர்

  பிபிசி வணிக செய்தியாளர்

  நியூயார்க் பங்குச் சந்தை இந்த நிறுவனங்களை அகற்றப்போவதாக கூறியுள்ளது.

  மூன்று சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் இருந்து வெளியேற்றப்படுவது அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையில் அதிகரித்து வரும் சர்வதேச அரசியல் பிரச்சனையில், ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. ஒரு போராட்டத்தில் ஹாங்காங் கொடியை ஏந்தியிருக்கும் போராட்டக்காரர் ஒருவர்.

  ஹாங் காங்கில் அதிருப்தியாளர்களின் வாயடைக்கும் வேலையை சீனா செய்கிறது என விமர்சனம் வந்த நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா.

  மேலும் படிக்க
  next
 10. செளதி அரேபியா: கல்லறையில் வெடிகுண்டு தாக்குதல் - நடந்தது என்ன?

  செளதியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் அக்டோபர் 29ஆம் தேதி தூதரகத்தின் காவலர் ஒருவர் கத்தியில் குத்தப்பட்டார். இதே நாளில்தான் பிரான்ஸின் நைஸ் நகரில் இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல் என அழைக்கப்பட்ட ஒரு தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7