டெல்லி

 1. சிங்கு எல்லையில் விவசாயி படுகொலை பற்றி அரசுக்கு முன்பே தெரியும்: விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகெய்த் குற்றச்சாட்டு

  View more on twitter

  டெல்லி - சிங்கு எல்லையில் விவசாயி லக்பீர் சிங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசுக்கு முன்பே தெரியும் என்று பாரதிய கிசான் யூனியன் (பிகேயூ) தலைவர் ராகேஷ் திகெய்த் குற்றம்சாட்டியிருக்கிறார்.

  அந்த படுகொலை சம்பவத்துக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.

  இதில் தேவையின்றி விவசாய அமைப்புகளை அரசு தொடர்புபடுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் ராகேஷ் திகெய்த் கூறுகையில், "இது ஒரு மத சம்பவம். சம்பந்தப்பட்ட நிஹாங்கும் இது தங்களுடைய உள்விவகாரம் என்று கூறியிருக்கிறார்.

  இப்படியொரு சம்பவம் நடக்கிறது என்றால் அரசின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? சம்பவ பகுதியில் போலீஸ் தடுப்பு கூட இருந்திருக்கிறது. இதை பார்க்கும்போது போலீஸாருக்கு தெரிந்தே அச்சம்பவம் நடந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது," என்றார்.

 2. தில்நவாஸ் பாஷா

  பிபிசி செய்தியாளர்

  சிங்கு எல்லை

  தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணாவின் சோனிபத் மாவட்டத்தின் கோண்ட்லி காவல் நிலைய வரம்புக்குட்பட்ட இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. ஹரியாணா போலீஸ் குழு இந்த சம்பவத்தை ஆய்வு செய்ய பல முறை வந்தது. ஆனால் அவர்கள் யாரையும் விசாரிக்கவில்லை அல்லது நிஹாங் சீக்கியர்களின் முகாமிற்குள் நுழையவில்லை.

  மேலும் படிக்க
  next
 3. தில்நவாஸ் பாஷா

  பிபிசி செய்தியாளர்

  லக்பீர் சிங்

  உயிரிழந்த லக்பீர் சிங், பஞ்சாபின் டார்ன் தரன் மாவட்டம் சீமா குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கு 8, 10, 12 வயதில் மூன்று பிள்ளைகளும் மனைவியும் உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 4. தோனி

  "ஆட்டத்தை முடித்து வைக்கும் சிங்கம் மீண்டும் வந்துவிட்டது. இருக்கையில் இருந்து குதித்து எழுந்தேன்". இப்படிப் பதிவிட்டிருந்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. பின்னர் அதை அழித்துவிட்டு "என்றென்றும்" என்ற சொல்லைச் சேர்த்தார்.

  மேலும் படிக்க
  next
 5. போலீசை வன்புணர்வு செய்த வழக்கில் போலீசிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது

  ஒரு பெண் காவலரை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆண் சப் இன்ஸ்பெக்டரிடம் லஞ்சம் வாங்கியதாக டெல்லியில் இரண்டு போலீஸ் அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆண் உதவி சப் இன்ஸ்பெக்டர். மற்றொருவர் பெண் எஸ்.ஐ.

  டெல்லி மாளவியா நகர் காவல் நிலையத்தில் இந்த கைது நேற்றிரவு நடந்தது. ஏ.என்.ஐ. செய்தி முகமை இந்தத் தகவலை ட்வீட் செய்துள்ளது.

  View more on twitter
 6. பரத்

  ஏற்கெனவே மூன்று அணிகள் பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்ற கருதப்பட்ட ஒரு ஆட்டம் கடைசிப் பந்து வரை பரபரப்பாக முடிந்திருக்கிறது. மற்றொரு போட்டி முழுக்க வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 7. சுற்றுலா

  சுற்றுலா விசா வழங்கப்பட்டாலும், விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய உள்துறை தெரிவித்துள்ளது.

  Follow
  next
 8. டெல்லியில் பாரத தரிசனப் பூங்கா

  டெல்லியில் உருவாக்கப்பட்ட பாரத தரிசனப் பூங்கா அக்டோபர் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பூங்காவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 21 வரலாற்றுச் சின்னங்களின் மாதிரிகள் இடம் பெற்றிருக்கும். இந்தப் பூங்காவுக்கு ரூ.100 நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அலுவலர்கள் தெரிவிப்பதாக பிடிஐ செய்தி முகமை கூறியுள்ளது.

  View more on twitter
 9. வந்துகொண்டிருக்கும் செய்திஇந்தியாவில் திருவிழாக்களை இலக்கு வைத்த தாக்குதல் சதி முறியடிப்பு: டெல்லி காவல்துறை

  டெல்லி காவல்துறை
  Image caption: டெல்லி காவல்துறை தனிப்பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேர்

  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திருவிழா காலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக இன்று காலையில் ராஜஸ்தானின் கோட்டாவில் ஒருவர், டெல்லியில் இரண்டு பேர், மற்றும் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையின் தீவிரவாத தடுப்புப்பிரிவு உயரதிகாரி நீரஜ் தாக்குர் தெரிவித்தார்.

  பிடிபட்ட நபர்களில் ராஜஸ்தானில் கைதான நபர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மொஹம்மத் ஷேக் (47). டெல்லியைச் சேர்ந்த ஒசாமா (22), உத்தர பிரதேசத்தின் ரே பரேலியைச் சேர்ந்த மூல்சந்த் (47), பிரயாக்ராஜை சேர்ந்த ஜீஷான் கமர் (28), பக்ரைச்சை சேர்ந்த மொஹம்மத் அபு பாக்கர் (23), லக்னெளவை சேர்ந்த ஆமிர் ஜாவேத் (31) என தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

  இவர்கள் பிடிபட்ட இடங்களில் இருந்து இரண்டு கையெறி குண்டுகள், ஐஇடி வெடிகுண்டுகள், ஒரு கிலோ ஆர்டிஎக்ஸ், இத்தாலி ரக கைத்துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

  இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒசாமா, கமர் ஆகியோர் மஸ்கத்துக்குச் சென்று அங்கிருந்து பாகிஸ்தானுக்கு படகில் சென்றதாகவும் அங்கு அவர்கள் ஆயுத பயிற்சி பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது என்று நீரஜ் தாகுர் தெரிவித்தார்.

  இவர்களுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பயிற்சி வழங்கியிருக்கலாம் என்று டெல்லி காவல்துறை சந்தேகிக்கிறது. மத்திய உளவுத்துறை கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டெல்லி தனிப்பிரிவு காவல்துறையினர் இந்த நபர்களை பிடிக்க ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநில காவல்துறையுடன் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.

  இந்த நபர்கள் இந்தியாவில் திருவிழா காலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 10. டெல்லியில் கனமழை: விமான நிலையத்தில் வெள்ள நீர் தேங்கியது

  இந்தியத் தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. நகரப் பேருந்துகள் தேங்கிய நீரில் நீந்திச் செல்வது போன்ற நிலை உருவாகியுள்ளது.

  இந்த கனமழையால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.

  விமானங்கள் வரிசையாக நிற்கிற இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்கும் காட்சிகள் காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகியுள்ளன.

  View more on twitter
பக்கம் 1 இல் 33