எடப்பாடி பழனிசாமி

 1. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீது தாக்குதல் - டிடிவி தினகரன் விளக்கம்

  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து அமமுகவின் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.

  "எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தேன்."

  "பழனிசாமி & கம்பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் ஈன புத்தி எங்களுக்கு கிடையாது."

  "அதுவும் நாங்கள் போற்றி வணங்குகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரும், இதயதெய்வம் அம்மா அவர்களும் துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல."

  "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும்," என்று அவர் கூறியுள்ளார்.

 2. ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி கே. பழனிசாமி

  அப்போது அ.தி.மு.க. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கே.சி. பழனிச்சாமிக்கும் அ.தி.மு.கவுக்கும் தொடர்பில்லையென்பதால் அவரது மனுவை ஏற்கக்கூடாது, தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கூடாது என்று கோரினார்.

  மேலும் படிக்க
  next
 3. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  அதிமுக

  எம்.ஜி.ஆர். காலத்தில் கட்சி துவங்கப்பட்டபோது அடிப்படை உறுப்பினரால்தான் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதியாக இருந்தது. ஜெயலலிதாவும் அதே விதியைத்தான் பின்பற்றினார். ஆகவேதான், ஒருங்கிணைப்பாளரையும் இணை ஒருங்கிணைப்பாளரையும் நேரடியாக கட்சியின் உறுப்பினர்கள் கொண்டுவருவார்கள் என்று கொண்டு வந்திருக்கிறோம் என்கிறார் வைகைச்செல்வன்

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: அன்வர் ராஜா திடீர் நீக்கத்துக்கு பின்னணியில் என்ன நடந்தது? அதிமுகவில் என்ன நடக்கிறது?

  அ.இ.அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து கட்சியில் இருப்பவர் அன்வர் ராஜா. 2001- 2006 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தவர்.

 5. அதிமுகவில் புதிய விதி - என்ன நடக்கிறது அந்த கட்சியில்?: வைகைச்செல்வன் பேட்டி

  முரளிதரன் காசி விஸ்வநாதன்

  அதிமுகவின் இன்றைய செயற்குழு கூட்டத்தில் புதிய விதி கொண்டு வரப்பட்டு கட்சியை கட்டுப்படுத்தும் இரு பதவிகளுக்கு ஒற்றை வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து் பாஜகவின் அழுத்தத்தில் அதிமுக உள்ளதா என்பது குறித்தும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழ் நேரலையின்போது கேள்வி எழுப்பப்பட்டது.அவர் அளித்த பதில்கள் குறித்து அறிய இங்கே சொடுக்கவும்.இந்த செய்தியின் காணொளி வடிவை இங்கே பார்க்கலாம்.

  View more on facebook
 6. குழந்தை

  கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் இருந்தும் வெளியேறும் சர்வதேசப் பயணிகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

  Follow
  next
 7. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  அன்வர் ராஜா

  அ.இ.அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவின் செயலருமான அன்வர் ராஜா நீக்கப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து அறிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. வேதா இல்லம் அரசுடைமையாக்க நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் - எடப்பாடி பழனிச்சாமி

  வேதா இல்லம்
  Image caption: வேதா இல்லம்

  ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடமிருந்து சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் இந்த பணிகளை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பார்வையிட்டார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது “அம்மா கிளினிக் தொடர்ந்து இயங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு பணியாற்றும் மருத்துவர்களையும், மருத்துவ உதவியாளர்களையும் பணியில் இருந்து நிறுத்தக் கூடாது.

  அம்மா உணவகத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. சம்பளத்தை குறைக்காமல் பழையபடி முழு சம்பளம் வழங்க வேண்டும்.

  வேதா இல்லம் அரசுடைமையாக்க, அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.

  சேலத்தில் வீடு விழுந்து 6 பேர் இறந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே வீடு கட்டித்தர வேண்டும். அதுவரை தற்காலிகமாக தங்க இட வசதி செய்து தரவேண்டும். இறந்தவர்களுக்கு 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது இதை 15 லட்சமாக உயர்த்தி தரவேண்டும்.

  தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அதனால் மீண்டும் சேத மதிப்பு கணக்கிட்டு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும்.

  மழை காலத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு சரியாக வழங்கப்படவில்லை என்று எனக்கு தகவல் வந்தது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் உடனே வழங்க வேண்டும்.

  அதே போல கொள்முதல் செய்யப்பட்ட நெல் வீணாகிறது என கேள்விப்பட்டேன். நெல் மழையால் வீணாவதை உடனே தடுக்க வேண்டும்.

  ஏற்கனவே மழை பெய்திருந்தது. அதனால் கூடுதலாக மோட்டார்கள் வைத்து தண்ணீர் இறைத்து இருக்கலாம். சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  வெள்ள பாதிப்பு குறித்து மாநில அரசு கேட்கும் நிதியை வழங்கவேண்டும் என்று அதிமுக சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்” என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

 9. எடப்பாடி பழனிசாமி

  மணி எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

  மேலும் படிக்க
  next
 10. ஆ.விஜய்ஆனந்த்

  பிபிசி தமிழ்

  அதிமுக

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ` தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். கூட்டத்தில் என்ன நடந்தது?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 33