புனே மெட்ரோ

 1. லேசான நம்பிக்கை தரும் புனேவின் புள்ளி விவரங்கள்

  ராகுல் கெய்க்வாட், பிபிசி மராத்திக்காக, புனேவிலிருந்து

  லேசான நம்பிக்கை தரும் புனேவின் புள்ளி விவரங்கள்

  மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக புனே இருக்கிறது.

  மகாராஷ்டிராவில் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்க, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் படுக்கையை பெறுவதற்கான போராட்டம் போன்ற சில மோசமான நாட்களை இந்த நகரம் கண்டது.

  ஆனால் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நிலைமை மேம்பட்டு வருகிறது.

  குணமடைபவர்களின் எண்ணிக்கை புதிய தொற்று எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இந்தப் போக்கு ஒரு வாரமாக தொடர்கிறது. தற்போது பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 54,000 லிருந்து 47,000 ஆக குறைந்துள்ளது

  ஏப்ரல் 19 ஆம் தேதி புள்ளி விவரங்களின்படி, புனேயில் 4587 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, 6473 நோயாளிகள் குணமடைந்தனர்.

  ஏப்ரல் 26 ஆம் தேதி நகரத்தில் 2538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர், அதேநேரம், 4351 நோயாளிகள் நலமடைந்தனர்.

  புனேயில் புதிய தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

  எனவே குறைந்த எண்ணிக்கையிலான மக்களே இப்போது மருத்துவமனையில் அனுமதி பெறச் செல்கின்றனர்.

  ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகளைப் பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது.

  மண்டல ஆணையரின் ஏப்ரல் 27 தரவுகளின்படி, 227 ஆக்சிஜன் படுக்கைகளும், 1158 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளும் காலியாக உள்ளன.

  பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கோவிட் பராமரிப்பு மையங்களை திறந்துள்ள காரணத்தால் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  இந்த தொற்று நோய் காலகட்டத்தில் ரெம்டிசிவிர் ஊசிமருந்து விவாதங்களின் மையப்புள்ளியாக உள்ளது. புனேவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த மருந்துக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

  சில நாட்களுக்கு முன்பு நோயாளிகளின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதற்கான ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டது.

  சீரான விநியோகத்திற்காக ஒரு நோடல் அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயினும் பிரச்சனை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

 2. ஸ்ரீதரன்

  பாஜகவை பொறுத்தவரை 75 வயதை கடந்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு உள்ளது. இதை காரணம் காட்டியே எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் முழு நேர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 88 வயதாகும் ஸ்ரீதரனுக்கு பாஜக மேலிடம் எதிர்வரும் கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருமா என்பது கேள்விக்குரியதாக உள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. ஸ்ரீதரன்

  இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை சில மாநிலங்கள் முன்வைத்தபோது, அது கடும் செலவினத்துக்கு வழிவகுக்கும் திட்டம் என்றும் ஸ்ரீதரன் தெரிவித்தார். வெளிப்படையாகவும் மனதில் பட்டதை நேர்படவும் பேசக்கூடியவராக அறியப்படும் ஸ்ரீதரனுக்கு 2001இல் பத்மஸ்ரீ, 2012இல் பத்மவிபூஷண் ஆகிய உயரிய விருதுகளை இந்திய அரசு வழங்கி கெளரவித்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. டெல்லி மெட்ரோ

  இந்த புதிய சேவை, ஜனக்புரி மேற்கு முதல் நொய்டாவின் பொட்டானிக்கல் கார்டன் பகுதிவரை இயக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இதேபோன்ற ஓட்டுநரில்லா சேவையை பிங்க் லைன் எனப்படும் மஜ்லிஸ் பார்க் முதல் ஷிவ் விஹார் வரையிலான பாதையில் இயக்கவும் டெல்லி மெட்ரோ திட்டமிட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. மெட்ரோ

  மஹாராஷ்டிரா அரசு இதுவரை அங்கு மெட்ரோ ரயில் சேவையை இயக்க முடிவு செய்யவில்லை. அங்கு மாநில அரசு எப்போது சேவையை தொடங்க தீர்மானிக்கிறதோ அப்போது முதல் இந்த வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next