ஹரியானா

 1. ஃஜூபைர் அகமது

  பிபிசி செய்தியாளர்

  மோதி

  மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோதி திரும்பப் பெற்றதை போராட்டம் நடத்தும் விவசாயிகள் ஒருபுறம் கொண்டாடுகிறார்கள். மறுபுறம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள சீர்திருத்த ஆதரவு பொருளாதார வல்லுநர்கள் அவரது முடிவால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 2. விவசாயிகள்

  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அதை கைவிட்டு விட்டு, வீடுகளுக்கு திரும்ப விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும்வரை நாங்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் போராட்ட களத்திலேயே காத்திருப்போம்," என்றார் ராகேஷ் திகெய்த்.

  மேலும் படிக்க
  next
 3. 14 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

  View more on twitter

  சில தினங்களுக்கு முன் இந்தியாவின் 14 மாநிலங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி இன்று நடந்து வருகிறது. ஏ.என்.ஐ முகமை, இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது.விவரங்கள் பின்வருமாறு:

  மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த நான்கு தொகுதிகளிலும், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. மேகாலயாவில் என்.பி.பி என்றழைக்கப்படும் தேசிய மக்கள் கட்சி மற்றும் யூ.டி.பி என்றழைக்கப்படும் யுனைடெட் டெமாக்ரடிக் கட்சி தலா ஒரு இடத்தில் முன்னிலை வகித்து வருகின்றன.

  மிசோரத்தில் மிசோ நேஷனல் ஃப்ரண்ட் ஓரிடத்திலும், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும், தெலங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி ஓரிடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன.

  ஆந்திர பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், அசாமில் இடைத்தேர்தல் நடந்த ஐந்து இடங்களில் பாஜக மூன்று இடங்களிலும், யூ.பி.பி.எல் என்றழைக்கப்படும் யுனைடெட் பீபிள்ஸ் பார்ட்டி லிபரல் இரு இடங்களிலும், பீகாரில் ஜனதா தளம் (யூ) மற்றும் ராஸ்ட்ரிய ஜனதா தளம் தலா ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளனர். ஹரியாணாவில் ஐ.என்.எல்.டி என்றழைக்கப்படும் இந்தியன் நேஷனல் லோக் தள் தேர்தல் நடந்த ஒரே ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

 4. ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்

  இடைத் தேர்தல்
  Image caption: இடைத் தேர்தல்

  ஆந்திரப் பிரதேசம், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தொகுதிகளுக்கும், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

  மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்களித்து வருகின்றனர். நவம்பர் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 5. தில்நவாஸ் பாஷா

  பிபிசி செய்தியாளர்

  லக்பீர் சிங்

  உயிரிழந்த லக்பீர் சிங், பஞ்சாபின் டார்ன் தரன் மாவட்டம் சீமா குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கு 8, 10, 12 வயதில் மூன்று பிள்ளைகளும் மனைவியும் உள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 6. விவசாயிகள் மீது மோதிய பாஜக எம்.பி கார்

  உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பாஜக அமைச்சரின் மகன் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் ஹரியாணாவில் பாஜக எம்.பியின் கார் மோதி விவசாயி ஒருவர் காயமடைந்துள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  அம்பாலா அருகே நரைன்கார்க் எனும் இடத்தில் பாஜக எம்.பி நாயப் சைனியின் கார் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காயமடைந்த விவசாயி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  கார் உரிமையாளரான சைனி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போராடும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 7. வந்துகொண்டிருக்கும் செய்திபஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சித்து விலகல்

  பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகியிருக்கிறார்.

  அவர் கட்சியில் நீடிப்பார் என்று தெளிவாக கூறியிருந்தாலும். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய இந்த ராஜிநாமா கடிதத்தில், "சமரசம் செய்வதன் மூலம் ஒரு நபரின் மனசாட்சி சரிந்துவிடும். பஞ்சாபின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப் மக்களின் நலன் குறித்து நான் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. அதனால் தான் நான் பஞ்சாபில் இருக்கிறேன். நான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். நான் தொடர்ந்து காங்கிரசுக்கு சேவை செய்வேன்" என்று கூறியுள்ளார்.

  முன்னதாக, பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்திருந்தார்.

  View more on twitter
 8. ஹரியாணா மினி செயலக வாயிலில் கூடாரம் அமைத்த விவசாயிகள் - இன்டர்நெட் சேவை முடக்கம்

  விவசாயிகள் போராட்டம்
  Image caption: கர்னால் பகுதியில் விவசாயிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஹரியாணா மாநிலத்தின் கர்னால் பகுதியில் உள்ள மினி தலைமைச் செயலக வளாகத்துக்கு வெளியே சாலையிலேயே விவசாயிகள் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஹரியாணா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய தடியடியில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் காயம் அடைந்தநர்களுக்கும் இழப்பீடு வழங்கக் கோரி கடந்த சில தினங்களாக ஹரியாணா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகள் தரப்புடன் ஆலோசனை நடத்த 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. ஆனால், இரு முறை ஆலோசனை நடத்திய போதும் சமூக உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இன்று காலையில் மினி தலைமைச் செயலகம் முன்பாக திரண்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்னால் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்களில் சிலர் கோஷமிட்டனர்.

  போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு ஆயுஷ் சிங் உத்தரவிடும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வேளையில் அவருக்கு எதிராக விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

  ஆனால், உரிய விசாரணையின்றி எந்தவொரு அரசு அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசு தரப்பு கூறி விட்டது.

  View more on twitter
 9. ஹரியாணாவில் மாவட்ட அலுவலகங்களை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் சங்க தலைவர்கள் தடுத்து வைப்பு

  View more on twitter

  ஹரியாணாவில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்திய நடவடிக்கையை கண்டித்து மாவட்ட தலைநகரங்களை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களை காவல்துறையினர் தடுத்து வைத்தனர்.

  ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த் உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

  முன்னதாக விவசாயிகள் திட்டமிட்டிருந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

  இதையடுத்து விவசாயிகளின் பேரணிக்கு அனுமதி வழங்குவது குறித்து அவர்களின் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவத்தில் சுஷில் கஜ்லா என்ற விவசாயி காயம் அடைந்து உயிரி்ழந்ததாக விவசாயிகள் தரப்பு குற்றம்சாட்டினர்.

  ஆனால், அந்த விவசாயி மாரடைப்பால் இறந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற பெயரில் 40 விவசாய சங்கங்கள் செயல்படுகின்றன.

  அவை மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே விவசாயிகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

  அதைக் கண்டித்து ஹரியாமா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே விவசாயிகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட வழிகளில் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 10. Video content

  Video caption: ஹரியானா கிராமப்புறத்தில் மக்களுக்காக இயங்கும் சமூக வானொலி

  ஹரியாவின் கிராமப்புறத்தில் மக்களுக்காக சமூக வானொலி ஒன்று இயங்கி வருகிறது.

பக்கம் 1 இல் 4