தெலுகு சினிமா

 1. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  சந்தானம்

  நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம் 'டிக்கிலோனா'. இதில் மாற்றுத்திறனாளிகள் குறித்து, நகைச்சுவை என்ற பெயரில் சந்தானம் பேசியிருக்கும் சில வசனங்களும், பெண்கள் சுதந்திரம், உடை குறித்த சில கருத்துகளும் பொது வெளியில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. அது என்ன சர்ச்சை? அது ஏன் விவாதமாகியிருக்கிறது?

  மேலும் படிக்க
  next
 2. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  ஓடிடி தளம்

  தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்கள் வெளியாவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் முக்கிய முடிவுகள் எடுத்ததாக செய்திகள் வெளியானது. இது மீண்டும் திரையரங்க உரிமையாளர்கள் VS தயாரிப்பாளர்கள் என உரசலை ஏற்படுத்தி இருக்கிறதா?

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு அபராதம் விதித்த போலீஸ் - ஏன் தெரியுமா?

  கொரோனா பரவல் தடுப்பு விதிகளை ஒழுங்காக பின்பற்றாமல் ஷூட்டிங் நடந்த இடத்தில் திரளாக மக்கள் கூடுவதை அனுமதித்த படக்குழுவினருக்கு காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

 4. தனுஷ்

  "சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். ஐம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட வரி செலுத்தும்போது நீங்கள் ஏன் செலுத்தக் கூடாது? பால்காரர் ஜிஎஸ்டி கட்ட முடியவில்லை என நீதிமன்றத்தை நாடுகிறாரா?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

  மேலும் படிக்க
  next
 5. ஷில்பா ஷெட்டி

  "ஒரு திரை பிரபலமாக நான் ஒரு தத்துவத்தைக் கடைப்பிடிக்கிறேன். எப்போதும் யார் மீதும் புகார் சொல்லக்கூடாது. விளக்கமும் தரக்கூடாது. அந்த வகையில், இது விசாரணை நிலுவையில் உள்ள விவகாரம். மும்பை காவல்துறை மீதும் இந்திய நீதித்துறை மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒரு குடும்பமாக எங்களுக்கு உள்ள எல்லா சட்ட வாய்ப்புகளையும் நாங்கள் பயன்படுத்துவோம்," என்று கூறியுள்ளார் ஷில்பா ஷ்ட்டி.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: ராஜ் குந்த்ரா வாழ்வில் நேபாள பயணம் ஏற்படுத்திய திருப்புமுனை
 7. Video content

  Video caption: சர்பேட்டா பரம்பரைக்காக ரஞ்சித்தை துரத்திப்பிடித்த நடிகர் ஆர்யா
 8. சீமான்

  அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றம் செல்ல மாட்டார்கள் என அந்த கடிதத்தில் கூறியுள்ள சீமான், இந்த நாட்டில் 'வரி' மக்களை சுரண்டுவதற்கான அரசின் கருவி எனவும் சாடியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  vijay

  நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீரிதிமன்றம். இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் வெளிநாட்டு காருக்கு வரி விலக்கு கேட்டதன் பின்னணி என்ன?

  மேலும் படிக்க
  next
 10. நடிகர் விஜய் ரூ. 1 லட்சம் அபராதம் செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

  ACTOR VIJAY
  Image caption: நடிகர் விஜய்

  பிரிட்டன் இறக்குமதி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராத தொகையுடன் காருக்கு உரிய வரியை இரண்டு வாரங்களில் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்து வாங்கியிருந்தார். அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததோடு, வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் அவர் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு உரிய வரியைச் செலுத்தும்படி வணிக வரித் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

  அந்த கார் பதிவு செய்யப்படவில்லை என்பதால், அது பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறிய நடிகர் விஜய், அந்தக் காருக்கான வரியை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

  இந்தக் காருக்கு உரிய வரியை செலுத்தாவிட்டால், அதைப் பதிவு செய்ய முடியாது என வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்தது. இதை எதிர்த்தே நடிகர் விஜய் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், ஒரு காரை இறக்குமதி செய்வதற்கு முன்பாக, உரிய வரியைச் செலுத்தியிருக்க வேண்டும் என வணிகவரித் துறை வாதிட்டது.

  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த அபராதத்தை இரண்டு வாரத்திற்குள் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்குச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

பக்கம் 1 இல் 9