இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

 1. லக்கிம்பூர் சம்பவம் அரசை எதிர்க்கும் யாரும் கொல்லப்படுவார்கள் என்ற செய்தியை விடுக்கிறது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

  ஏ.எம். சுதாகர்

  சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
  Image caption: சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

  லக்கிம்பூர் விவசாயிகள் போராட்ட சம்பவம் மூலம் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவார்கள் என்பதையே மத்தியில் ஆளும் பாஜக அரசின் நடவடிக்கை உணர்த்துகிறது என்று கூறியிருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.

  சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. இலங்கை அரசு இந்திய அரசுடன் மிகுந்த நட்புடன் பல உதவிகளை செய்து வருகிறது. ஆனாலும் பாதிக்கப்படும் தமிழக மீனவர்கள் குறித்து மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை," என்றார்.

  "லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக பிரதமர் குறைபட்சம் அனுதாபம்கூட தெரிவிக்கவில்லை. போராடுபவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவார்கள் என்பதையே பிரதமரின் நடவடிக்கை உணர்த்துகிறது," என்று முத்தரசன் கூறினார்.

  "பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை கட்டுக்கடங்காமல் இறக்கை கட்டி பறக்கிறது. எரிபொருட்கள் விலை உயர்வால் தற்போது அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு விதிக்கின்ற வரியே விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணம். மக்கள் பிரச்னைகள் பற்றி கவலை கொள்ளாமல், தங்களை தற்காத்துக் கொள்வதாக எதிர்கட்சி தலைவரின் நடவடிக்கைகள் உள்ளது. விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகின்ற 30ஆம் தேதி சைக்கிள் பேரணி நடத்தப்படும்," என்று முத்தரசன் தெரிவித்தார்.

 2. தகைசால் விருது: தமிழக அரசுக்கு சங்கரய்யா நன்றி

  முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பசவராஜ் பொம்மை
  Image caption: சங்கரய்யா

  தமிழக அரசு தனக்கு தகைசால் விருது வழங்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா நன்றி தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்கள். எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

  "இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையை கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்."

  "மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்தியநாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன், சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று சங்கரய்யா கூறியுள்ளார்.

 3. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  சிபிஎம்

  1965ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை அரசு கைது செய்யத் துவங்கியது. இதில் சங்கரய்யாவும் கைதானார். 16 மாத கால சிறைவாசத்திற்குப் பிறகு 1966ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான பிறகு, தீக்கதிர் கட்சியின் அதிகாரபூர்வ ஏடாக அங்கீகரிக்கப்பட்டது. என். சங்கரய்யா அதன் ஆசிரியரானார்.

  மேலும் படிக்க
  next
 4. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  கம்யூனிஸ்ட்

  1964 ஆம் ஆண்டில் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. மேற்கு வங்கம் மற்றும் கேரளாவின் பெரும்பாலான தலைவர்கள் அதில் இணைந்தனர். ஆந்திராவில் சுமார் பாதி பேர் சிபிஎம் உடன் சேர்ந்தனர்.

  மேலும் படிக்க
  next
 5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் மைதிலி சிவராமன் இச்சமூகத்துக்கு செய்தது என்ன?

  1968ம் ஆண்டு கீழ்வெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. ரேடிகல் ரிவ்யூ பத்திரிகையில் அதை ஆவணப்படுத்தி, அக்கொடூரச் சம்பவத்தை தன் எழுத்துக்கள் மூலம் உரக்கப் பேசி, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்களில் முக்கியமானவர் மைதிலி.

  கீழ்வெண்மணி படுகொலை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கணபதியா பிள்ளை ஆணையத்துக்கு பல்வேறு ஆவணங்களை திரட்டிக் கொடுத்து உதவினார்.

  கல்லுடைக்கும் தொழிலாளர் போராட்டம், டேப்ளட் தொழிலாளர் போராட்டம், டன்லப் தொழிற்சங்கம், பொன்வண்டு சோப் கம்பெனி, பாலு கார்மெண்ட்ஸ், குவாரி தொழிற்சங்கம் என பல தொழிற்சங்கங்களில் தொழிலாளிகளின் உரிமைகளுக்காக போராடியவர். குறிப்பாக கார்மென்ட் தொழில்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பொருளாதார சுரண்டல்களையும், பாலியல் தாக்குதல்களையும் வலுவான முறையில் தலையிட்டு சட்டரீதியாக தடுத்து நிறுத்தியதில் பெரும் பங்கு மைதிலி சிவராமனுக்கு உண்டு.

  மேலும் முழுமையாகப் படிக்க இங்கே சொடுக்கவும்

  மைதிலி சிவராமன்
 6. மைதிலி சிவராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

  1968ம் ஆண்டு கீழ்வெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்தது. ரேடிகல் ரிவ்யூ பத்திரிகையில் அதை ஆவணப்படுத்தி, அக்கொடூரச் சம்பவத்தை தன் எழுத்துக்கள் மூலம் உரக்கப் பேசி, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்களில் முக்கியமானவர் மைதிலி.

  மேலும் படிக்க
  next
 7. சாய்ராம் ஜெயராமன்

  பிபிசி தமிழ்

  கேரள சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்க் குரல் - யார் இந்த ஏ. ராஜா?

  தோட்டத் தொழிலாளர்களான அந்தோணி லக்ஷ்மன் - ஈஸ்வரி தம்பதிக்கு 1984ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி ராஜா மகனாக பிறந்தார். கேரள சட்டப்பேரவைக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் கோயம்புத்தூர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞராக இருந்து வருகிறார்.

  மேலும் படிக்க
  next
 8. கேரளா

  கேரளா முதல்வராக பதவியேற்றுள்ள பினராயி விஜயனின் அமைச்சரவையில் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இடம்பெற்ற ஒருவர் கூட அமைச்சராகவில்லை. பினராயி நீங்கலாக அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் புது முகங்கள்.

  Catch up
  next
 9. கேரள முதல்வராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன் - அமைச்சரவையில் 20 புது முகங்கள்

  kerala

  கேரள மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.

  76 வயதாகும் பினராயி விஜயன் அமைச்சரவையில் கடந்த முறை அவரது ஆட்சியில் இடம்பெற்ற யாரும் இடம்பெறவில்லை. இம்முறை அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் புது முகங்கள்.

  திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இதையொட்டி நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் என்சிபியின் ஏ.கே. சசீந்திரன், இந்திய தேசிய லீக்கின் அகமது தேவர்கோவில், ஆர். பிந்து, பி.ஏ. முகம்மது ரியாஸ் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

  கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற கேரள மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 140 இடங்களில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வென்றுள்ளது.

 10. சு வெங்கடேசன்

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினரான சு வெங்கடேசன், இன்று மத்திய சுகாதார செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமது தொகுதியை சேர்ந்த 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த அனுமதி கோரியுள்ளார் அவர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3