கோலிவுட்

 1. நடிகர் விஜய்

  "வழக்கின் ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என நீதிபதி தெரிவித்திருந்தார். வழக்கின் ஆவணங்களில் தொழிலைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகக் கூறுவதும் தேவையற்ற கருத்துகள் ஆகும்."

  மேலும் படிக்க
  next
 2. அசுரன் படத்துக்காக தேசிய விருது பெற்றார் தனுஷ்

  View more on twitter

  டெல்லியில் இன்று 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தாதாசாஹேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது என ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.

  மேலும், `அசுரன்` திரைப்படத்திற்காக நடிகர் தனுஷூக்கும், `போன்ஸ்லே` என்கிற இந்தி திரைப்படத்திற்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.

  `மனிகர்னிகா`, `பங்கா` ஆகிய இந்தி திரைப்படங்களுக்காக நடிகை கங்கனா ரணாவத்துக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது என்றும் ஏ.என்.ஐ முகமை தெரிவித்துள்ளது.

 3. ச.ஆனந்தப் பிரியா

  பிபிசி தமிழுக்காக

  திரைப்படம்

  விருதுகளை குவித்த 'கூழாங்கல்' திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சர்வதேச அளவில் பல விருதுகளை இந்தப் படம் குவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  திரைப்படம்

  மெயின் ஸ்ட்ரீம் சினிமா மீதான எதோ ஒரு வெறுப்போ, ஒவ்வாமை காரணமாகவோதான் பெரும்பாலும் சுயாதீன படங்கள் (Independent Movies) எடுக்கப்படும். அப்படி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு எனக்கு ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை எந்தவொரு சமரசமும் இல்லாமல் முழு ஆதரவு கொடுத்தது மெயின் ஸ்ட்ரீமை சேர்ந்த சினிமா நண்பர்கள்தான் என்று பெருமிதப்படுகிறார் வினோத்ராஜ்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: "நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல"

  நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று மத்திய சுகாதாரத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 6. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  ஓ மணப்பெண்ணே

  கார்த்திக்கிற்கு நன்றாக சமைக்க வரும் என்பதையும் சுருதி ஒரு வாகன உணவகம் ஆரம்பக்க நினைத்ததும் தெரிகிறது. ஆகவே இருவரும் சேர்ந்து அந்தத் தொழிலில் முடிவுசெய்கிறார்கள். இதற்கிடையில் கார்த்திக்கை வீட்டோடு மாப்பிள்ளையாக தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்க ஒரு பெரிய தொழிலதிபர் முன்வருகிறார். வரதட்சணைக்காக அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள கார்த்திக்கும் ஒப்புக்கொள்கிறான்.

  மேலும் படிக்க
  next
 7. விவேக்

  ஊசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது. ஏப்ரல் 16ஆம் தேதி நினைவிழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 8. பாலியல் சீண்டல்

  சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்ட புகாரில் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் உட்பட 5 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. நிழலுலக தொடர்புகள் மூலம் மிரட்டினர் - ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா குற்றச்சாட்டு

  ஷில்பா ஷெட்டி
  Image caption: கணவர் ராஜ்குந்த்ராவுடன் நடிகை ஷில்பா ஷெட்டி

  தங்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் தெரிவித்த நடிகை ஷெர்லின் சோப்ரா மீது ரூ. 50 கோடி மான நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் பாலிவுட் பிரபல தம்பதியான ராஜ்குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி.

  "இடுப்பு பெல்டுக்கு கீழே அசிங்கமானவர்கள்," என்று பொதுவெளியில் தங்களைப் பற்றி அவதூறாக ஷெர்லின் பேசியதாகக் கூறி அவரது மன்னிப்பை வேண்டியுள்ள ராஜ்குந்த்ரா, ஷில்பா ஷெட்டி தரப்பு, வழக்கறிஞர் மூலம் அதற்கான நோட்டீஸயும் அனுப்பியுள்ளனர்.

  மும்பையில் ஆபாச செயலி மூலம் மாடல்களை ஆபாசமாக படம் எடுப்பதாக வெளியான குற்றச்சாட்டின்பேரில் ராஜ்குந்த்ராவை சில மாதங்களுக்கு முன்பு மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

  அந்த வழக்கில் தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தங்களை விமர்சித்து ஷெர்லின் சோப்ரா வெளியிட்ட கருத்து, போலியானது, தவறானது, அடிப்படை ஆதாரமற்றது என்று ராஜ்குந்த்ராவும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டியும் கூறியுள்ளனர்.

  தங்களிடம் இருந்து பணத்தை கறப்பதற்காக இப்படியொரு அபாண்டமான புகாரை ஷெர்லின் சோப்ரா சுமத்தியிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  இந்த நோட்டீஸ் குறித்த தகவல் ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களில் ஷெர்லின் சோப்ரா தமது ட்விட்டர் பக்கம் மூலமாக ராஜ்குந்த்ராவும் ஷில்பா ஷெட்டியும் தங்களுடைய நிழலுக தொடர்புகள் மூலம் தன்னை மிரட்டியதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

  View more on twitter
 10. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழ்

  ஜோதிகா

  நடிகை ஜோதிகா சமூக வலைதளங்கள் எதிலும் கணக்கு வைத்திருக்காதவர். சமீபத்தில்தான் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கு தொடங்கி இருக்கிறார். அதில் முதல் பதிவாக இமய மலை பயணம் செய்ய வேண்டும் என்ற தனது சிறு வயது ஆசை திருமணத்திற்கு பின்புதான் நிறைவேறியது என குறிப்பிட்டு, அங்கு எடுக்கப்பட்ட பகிர்ந்திருக்கிறார் ஜோதிகா.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 52