அமேசான் (நிறுவனம்)

 1. அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை

  காடுகள்

  உலகின் 30 சதவிகித காட்டு மர இனங்கள் அழிவை எதிர்கொண்டிருப்பதாக புதிய ஆய்வு மதிப்பீடு ஒன்றின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

  மக்களால் நன்கு அறியப்பட்ட ஓக் மரங்கள் முதல் வெப்பமண்டல மரங்கள் வரை அழிந்து போகும் இனங்கள் பட்டியலில் உள்ளன.

  ஒட்டுமொத்தக் கணக்கீட்டின்படி 17,500 மர இனங்கள் ஆபத்தில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். அழிவின் விளிம்பில் உள்ள பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன ஆகியவற்றைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு எண்ணிக்கையாகும்.

  காடழிப்பு, மரம் வெட்டுதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைந்து எடுக்க வேண்டும் என சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

 2. Video content

  Video caption: பிட்காயின் மதிப்பு கிடுகிடு உயர்வு: அமேசானுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

  பிட்காயின் மதிப்பு கிடுகிடு உயர்வு: அமேசானுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

 3. பிட்காயின்

  ``பெரு நிறுவனமான அமேசானுக்கு, பணம் செலுத்தப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மீது ஆர்வமிருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. ஒரு புதிய டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கக் கூட அவர்களிடம் திட்டம் இருக்கலாம்``

  மேலும் படிக்க
  next
 4. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  சார்பட்டா பரம்பரை

  வட சென்னை, குத்துச் சண்டை என்றவுடன் மனதில் தோன்றும் வழக்கமான டெம்ப்ளேட்களை கலைத்துப் போட்டபடி துவங்குகிறது படம். ஆரம்பித்து ஐந்து நிமிடங்களிலேயே மிக வேகமாக உச்சகட்டத்தை நோக்கி நகர ஆரம்பிக்கிறது திரைக்கதை.

  மேலும் படிக்க
  next
 5. பால் ரின்கன்

  அறிவியல் ஆசிரியர், பிபிசி செய்தி இணையதளம்

  ஜெஃப் பெசோஸ்

  பூமியில் இருந்து மேல்நோக்கி 100 கி.மீட்டர் தூரத்தில் உள்ள விண்வெளி எல்லையாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தை நோக்கி ப்ளூ ஆரிஜின் விண்கலன் முன்னேறியது. அங்கு மிதவை நிலையில் நான்கு நிமிடங்களை இந்த குழுவினர் செலவிட்டனர்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: அமேசான் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகல் - இனி என்ன செய்வார்?

  அமேசான் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகல் - இனி என்ன செய்வார்?

 7. அமேசான் ஜெஃப் பெசோஸ்

  அமேசான் நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதே தினத்தில் தமது பதவியில் இருந்து விலகுவேன் என்று கடந்த மே மாதம் அறிவித்திருந்தார் ஜெஃப் பெசோஸ். அதன்படியே அவர் செய்தும் காட்டியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 8. கொரோனா

  தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்தது

  Catch up
  next
 9. அமேசான் நிறுவன தலைமை பதவியை துறந்தார் ஜெஃப் பெசோஸ் - அடுத்தது என்ன?

  Jeff
  Image caption: ஜெஃப் பெசோஸ்

  அமேசான் நிறுவனத்தை 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் நிறுவிய ஜெஃப் பெசோஸ், இதுநாள் வரை வகித்து வந்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து இன்று முறைப்படி விலகியிருக்கிறார்.

  இதைத்தொடர்ந்து தமது கனவு இலக்கான ப்ளூ ஆரிஜின் விண்ணூர்தி பயண நிறுவனத்தில் அவர் முழு நேரமும் கவனம் செலுத்தவிருக்கிறார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து அமேசான் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆண்டி ஜாஸே பொறுப்பேற்கிறார்.

  உச்சம் தொட்ட ஆன்லைன் வர்த்தகம் ஆரம்ப காலத்தில் ஆன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட அமெசான் நிறுவனம் இன்று உலகின் முன்னோடி மின்னணு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது.

  இந்த நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதே தினத்தில் தமது பதவியில் இருந்து விலகுவேன் என்று கடந்த மே மாதம் அறிவித்திருந்தார் ஜெஃப் பெசோஸ். அதன்படியே அவர் செய்தும் காட்டியிருக்கிறார்.

  இனி பெசோஸ் என்ன செய்வார்?

  கடந்த பிப்ரவரி மாதமே, தமது பதவி விலகல் தொடர்பான முடிவை ஜெஃப் பெசோஸ் வெளியிட்டிருந்தார். அவரது பொறுப்பை ஏற்கவிருக்கும் ஆண்டி, கிளெட் கம்ப்யூட்டிங் தொழிலை கவனித்து வருகிறார். 53 வயதாகும் ஆண்டி ஜெஸ்ஸி, ஹார்வர்டில் படித்த பிறகு, அமெசான் நிறுவனத்தில் 1997ஆம் ஆண்டில் சேர்ந்தார்.

  தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினாலும், நிறுவனத்தின் செயல் தலைவர் பதவியில் தொடரும் ஜெஃப் பெசோஸ், நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் பிரசார மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்.

  உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை நீண்ட காலமாக தக்க வைத்து வந்தவர் ஜெஃப் பெசோஸ். அவரது சொத்து மதிப்பு 16,700 கோடி டாலர்கள். இந்திய மதிப்பில் இது சுமார் 13 லட்சம் கோடி ரூபாயாகும்.

  உலகின் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஸ்காட் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி. அவரிடம் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸை 2019-ஆம் ஆண்டு விவகாரத்து செய்யும்போது கிடைத்தது.

  கடந்த டிசம்பர் மாதம், அந்த பணத்தில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாயை அவர் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். ஏராளமான நன்கொடை வழங்கினாலும் இன்னும் அவர் உலகின் 22-ஆவது பணக்காரராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறுகிறது. அவரது சொத்து மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்.

  Jeff
  Image caption: ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஓரிஜின் விண்ணூர்தியின் மாதிரி வடிவமைப்பு
 10. அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி ரூ.20,000 கோடி நன்கொடை

  ஸ்காட்

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்ஸி ஸ்காட் மக்கள் தொண்டுக்காக மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

  இது தொடர்பாக தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள மெக்கென்ஸி ஸ்காட் "நெடுங்காலமாக பணமே கிடைக்காத, கவனிக்கப்படாத" மக்களுக்கு இந்தப் பணத்தை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

  இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதற்கு இனப்பாகுபாட்டுக்கு எதிராகப் பணியாற்றும் 286 அமைப்புகளைத் தேர்வு செய்திருப்பதாகவும் ஸ்காட் குறிப்பிட்டுள்ளார்.

  தற்போது உலகின் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஸ்காட்டும் ஒருவர். அவரிடம் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸை 2019-ஆம் ஆண்டு விவகாரத்து செய்யும்போது அவருக்குக் கிடைத்தது.

  கடந்த டிசம்பரில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அவர் நன்கொடை வழங்கினார்.

  ஏராளமான நன்கொடை வழங்கினாலும் இன்னும் அவர் உலகின் 22-ஆவது பணக்காரராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறுகிறது. அவரது சொத்து மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்.

பக்கம் 1 இல் 6