பாலியல் தொழிலாளர்கள்

 1. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  ஹரினி அமரசூரிய

  பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதால் அதைச் சட்டமாக்குவற்கு இணங்குவதாக கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவிக்கின்றார்.

  மேலும் படிக்க
  next
 2. டாம் டி காஸ்டல்லா

  பிபிசி

  JORVIK VIKING CENTRE, YORK

  வைக்கிங் சமூகத்தின் பழங்கால கதைகள் பல நூற்றாண்டுகளாக மக்களை கவர்ந்துள்ளன. ஆனால் உண்மையில் இந்த உலகம் அவர்களை வெகுவாகப் புரிந்து கொண்டிருக்கிறதா?

  மேலும் படிக்க
  next
 3. கூட்டுப்பாலியல் வழக்கு: உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் உள்பட மூவருக்கு ஆயுள் சிறை

  கூட்டுப்பாலியல் வழக்கு

  உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது சுரங்கத்துறை அமைச்சராக இருந்த காயத்ரி பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு கூட்டுப்பாலியல் வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  லக்னெளவில் உள்ள எம்பி-எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றநீதிபதி பவன் குமார் ராய் இந்த தீர்ப்பை வழங்கினார். குற்றவாளிகள் மூவருக்கும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

  அந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட பெண்ணின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

  மாநில சுரங்கத்துறை அமைச்சர் பதவி வகித்த காயத்ரி பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள், சித்ரகூட் பகுதியில் மைனர் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கில் காயத்ரி பிரஜாபதியுடன் சேர்த்து ஆஷிஷ் ஷுக்லா, அசோக் திவாரி, விகாஸ் வர்மா, ரூபேஸ்வர், அமரந்தர் சிங், பின்டூ, சந்தரபால் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

  இதில், ஆஷிஷ் ஷுக்லா, அசோக் திவாரிக்கும் ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

  தண்டனைக்குள்ளான சந்திரபால், காயத்ரி பிரஜாபதியின் துப்பாக்கி ஏந்திய காவலர். வழக்கில் குற்றம்சாட்டிருந்தவர்கள் பிரஜாபதியின் நெருங்கிய உதவியாளர்கள் ஆவர்.

  இந்த கூட்டுப்பாலியல் சம்பவம் 2017ஆம் ஆண்டு லக்னெளவில் உள்ள கெளதம்பள்ளியில் உள்ள அமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடந்தது. வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தலையீட்ட பிறகே காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட நபர்களை அதே ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தனர்.

  2017ஆம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் இருந்தார். அவரது அமைச்சரவையில் சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் காயத்ரி பிரஜாபதி. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருந்தது.

  அகிலேஷ் யாதவ் ஆட்சியில் சுரங்கத்துறையில் முறைகேடு நடந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதில் காயத்ரி பிரஜாபதிக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் காயத்ரி பிரஜாபதியின் கோடிக்கணக்கான சொத்துகளை அமலாக்க இயக்குநரகம் முடக்கி நடவடிக்கை எடுத்தது.

 4. Video content

  Video caption: பாலியல் தொழிலை குற்றமாக்குவேன் - சூளுரைத்த ஸ்பெயின் பிரதமர், இது சாத்தியமா?

  ஸ்பெயின் நாட்டில் பாலியல் தொழிலை குற்றமாக்குவேன் என சூளுரைத்தார் அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ். ஆனால் அது எதார்த்தத்தில் சாத்தியமா? கள நிலவரம் என்ன?

 5. பாலியல் ஸ்பெயின்

  2019ஆம் ஆண்டில் பெட்ரோ சான்செஸ் தேர்தல் செயல்திட்டத்தில் பாலியல் தொழிலை சட்டவிரோதம் ஆக்குவேன் என்று உறுதியளித்திருந்தார். பெண் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அவர் அந்த வாக்குறுதியை பயன்படுத்தியதாக அப்போது விமர்சிக்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 6. கேத்தி சில்வர்

  பிபிசி நியூஸ்

  சித்தரிப்புக்காக

  ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் ஓர் ஆண் உடலுறவு கொண்டால் அது பாலியல் வல்லுறவு. ஒரு பெண் இன்னொரு ஆணை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதும் பாலியல் வல்லுறவு குற்றமாக வேண்டாமா?

  மேலும் படிக்க
  next
 7. நெல்லையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞரை கைது செய்த காவல்துறை

  எம். பார்த்தசாரதி, திருநெல்வேலி

  பாலியல் தொந்தரவு
  Image caption: சித்தரிக்கப்பட்ட படம்

  நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகேயுள்ள குப்பகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு சிறுமிக்கு அந்த நபர் தொல்லை கொடுக்க முயன்றபோது அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி சிறுமி கூச்சலிடவே அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஓடிச்சென்று அவரை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் சகோதரர் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் அந்த சிறுமியின் பெற்றோரிடம் காவல்துறையினர் சமரசம் பேச முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதேவேளை, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை நகலை கேட்டு சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் குப்பகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சீவலப்பேரி சாலையில் திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு போராட்டம் நடத்தினர்.

  சிறுமிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்ததால் சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசியதைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சீவலப்பேரி காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு பிபிசி தமிழுக்காக பேசினோம்.

  “நேற்று முன்தினம் நடந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்துள்ளோம். அந்த நபரால் தங்களுடைய குடும்பத்தினருக்கு ஏதாவது பிரச்னை வருமோ என்ற அச்சத்தாலேயே கிராமமக்கள் நள்ளிரவில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பையும் அழைத்துப் பேசவிருக்கிறோம். சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை தொடருகிறது,” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

 8. பணத்துக்காக ஓர் இளைஞர் 'விலைமகன்' ஆன கதை #HisChoice

  என்னுடைய பதிலுக்கு அவரின் மறுமொழி என்ன தெரியுமா? 'உனக்கு தன்மானம் ஏன் கர்வம் என்றே சொல்கிறேன், அது அதிகமாக இருக்கிறது, இந்தத் தொழிலில் அது வேலைக்கு ஆகாது' என்று அவர் சொன்னது, என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

  மேலும் படிக்க
  next
 9. surrogate

  இந்த முறையை விமர்சிப்பவர்கள் இதை விபச்சாரத்துடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் இஸ்ரேல் அரசு இந்த முறையை முழுமையாக அனுமதிக்கிறது. வீரர் காயமடைந்து, இணைசேரும் திறன் பாதிக்கப்பட்டால், அரசே அவருக்கு வாடகைத் துணை மூலம் சிகிச்சையளிப்பதற்கான மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்கிறது

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: ஹாத்ரஸ் உயிரிழந்த பெண் குடும்பத்தாரின் நிலை என்ன?

  அவர்கள் வீட்டுப் பெண் கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகக் கூறும் இவர்களின் கோரிக்கை, இதற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே

பக்கம் 1 இல் 2