காங்கிரஸ்

 1. 15 கட்சி தலைவர்களுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை

  ராகுல் காந்தி
  Image caption: எதிர்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களின் கூட்டத்தில் பேசும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

  நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பி வரும் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், முக்கிய மசோதாக்களை எதிர்கட்சிகள் ஆதரவின்றி நிறைவேற்றும் போக்கு போன்றவை தொடர்பாக விவாதிக்க டெல்லியில் 15 எதிர்கட்சிகளின் தலைவர்கள் இன்று கூடினார்கள்.

  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனை, இடதுசாரி கட்சிகள், ஐயுஎம்எல், ஆர்எஸ்பி, கேரள மணி காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாடு, திரிணமூல் காங்கிரஸ், லோக்தந்த்ரிக் ஜனதா தளம் ஆகிய 15 கட்சிகளின் நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

  நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் விவகாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து இந்த தலைவர்கள் விவாதித்ததாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

 2. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  தமிழ்நாடு

  புதிய பொருளாதார கொள்கையால் வந்த வாய்ப்புகளைத் தொடக்கத்தில் வெகு சில மாநிலங்களே துடிப்புடன் பயன்படுத்திக் கொண்டன. அதில் தமிழ்நாடும் ஒன்றாக இருந்தது.

  மேலும் படிக்க
  next
 3. செளதிக் பிஸ்வாஸ்

  பிபிசி செய்தியாளர்

  பிரசாந்த் கிஷோர்

  பாஜக ஒன்றும் மிகவும் சக்திவாய்ந்த கட்சி அல்ல என பிரசாந்த் கிஷோர் நம்புகிறார். அவர்களுக்கு சவால் அளிக்க ஏற்கெனவே உள்ள கட்சிக்கோ புதிய கட்சிக்கோ வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் எதிர்கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து இதை செய்யலாம் என்கிறார் அவர்.

  மேலும் படிக்க
  next
 4. விவசாயிகள் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி

  CONGRESS
  Image caption: நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டிச் செல்லும் ராகுல் காந்தி

  இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, நாடாளுமன்றம் நோக்கி இன்று டிராக்டர் ஓட்டிச்சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

  பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து உள்ளிட்ட அம்மாநில எம்.பி.க்கள் சிலருடன் இன்று காலை தமது வீட்டில் இருந்து ராகுல் காந்தி டிராக்டரில் நாடாளுமன்றம் நோக்கிப் புறப்பட்டார். இதனால், அவர் செல்லும் வழிநெடுகிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "விவசாயிகள் சட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகள், அரசைப் பொருத்தவரை தீவிரவாதிகள். ஆனால், உண்மையில் இந்த சட்டங்கள் ஒன்று இரண்டு கார்பரேட் முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவே உள்ளன," என்று தெரிவித்தார்.

  "வீதியில் இறங்கி மாதக்கணக்கில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லும் விதமாகவே தமது வீட்டில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டி வந்தேன்," என்று ராகுல் காந்தி கூறினார்.

  இதற்கிடையே, கட்டுப்பாட்டு விதிகளை மீறி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இருந்த பகுதி நோக்கி டிராக்டரில் வந்த ஆதரவாளர்கள் செல்ல காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சூர்ஜிவாலா முயன்றார்.

  அவரை நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க தலைமையகம் அருகே வழிமறித்த காவல்துறையினர் அவரையும் சில காங்கிரஸ் பிரமுகர்களையும் கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

  CONGRESS
  Image caption: நாடாளுமன்றம் புறவாயில் பகுதி சாலை அருகே செய்தியாளர்களிடம் பேசும் ராகுல் காந்தி
 5. ஜுபைர் அஹமது

  பிபிசி செய்தியாளர்

  நரசிம்மராவ்

  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் மூலம் பல பொருளாதார சீர்திருத்த திட்டங்களை அந்த 1991 ஜூலை 24 பட்ஜெட் மூலம் அறிவித்தது.

  மேலும் படிக்க
  next
 6. என் தொலைபேசியை ஒட்டுக்கேட்டது மக்கள் குரல் மீதான தாக்குதல் - ராகுல்

  என் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது. இது ராகுல்காந்தியின் அந்தரங்கம் சம்பந்தப்பட்டது அல்ல. நான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர். மக்களின் குரல்களை நான் எதிரொலிக்கிறேன். எனவே, இது மக்களின் குரல் மீதான தாக்குதல் என்று பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. அத்துடன் இந்த பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் இந்திய உள்துறை அமைச்சர் பதவி விலகவேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோதி மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் ராகுல்காந்தி.

  View more on twitter
 7. 'பெகாசஸ் ஸ்பைவேருக்கு இந்திய அரசு வாடிக்கையாளர்' - கே.எஸ். அழகிரி

  நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக பாண்டிச்சேரியில் இருந்து

  pegasus spying india

  இஸ்ரேலின் என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவின் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்கள் கிளர்ந்து எழாமல், ஊடகம் உண்மையை வெளியிடாமல், எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தாமல் போயிருந்தால் இந்த நாடு அடிமைப்பட்டுவிடும் என்று சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

  இந்தியாவில் இருக்கின்ற வேறெந்த தனியார் அமைப்புகளும் என்.எஸ்.ஓ நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களாக இல்லை, இந்திய அரசாங்கம் மட்டும் அதில் வாடிக்கையாளராக இருக்கிறது. எனவே இந்த உறவு வேலையில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு உள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  என்.எஸ்.ஓ நிறுவனத்துக்கு இந்திய அரசாங்கம் வாடிக்கையாளராக இருக்கின்ற செய்தியை இந்திய அரசாங்கமோ, நாட்டின் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, அல்லது சம்பந்தப்பட்ட துறையோ மறுக்கவில்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  "ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபொழுது உத்தரப் பிரதேசத்தை சார்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் அவருடைய இல்லத்தை உளவு பார்த்தார்கள் என்பதற்காக சந்திரசேகர் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட ஆதரவை காங்கிரஸ் திரும்பப்பெற்றது. அரசியல் வாழ்க்கையில் ஜனநாயகத்தில் உளவு பார்ப்பது மிகப்பெரிய குற்றம். இந்திய அரசியல் சட்டம் அதை குற்றம் என்று சொல்லியிருக்கிறது. அப்படியிருந்தும் இதுபோல் செய்கிறார்கள்."

  "இந்தியாவினுடைய புலனாய்வு துறைகளுக்கு இது தெரியவில்லை. புலனாய்வுத்துறை தான் தினமும் பிரதமருக்கு தரவுகளை சொல்கிறார்கள். ஆனால் ஒரு புலனாய்வுத்துறைக்கு தெரியாத ஒன்று, பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரிகிறது."

  "உடனடியாக இந்தியாவினுடைய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி தெளிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும், " என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 8. மோதியின் அமைச்சரவை அறிமுக உரை: எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற அலுவல் பாதிப்பு

  மோதி
  Image caption: பிரதமர் நரேந்திர மோதி

  இந்திய நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோதி தமது அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களை அறிமுகம் செய்ய முற்பட்டபோது, எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

  மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக தமது அமைச்சரவையை விரிவுபடுத்திய மோதி, அதில் 36 பேருக்கு வாய்ப்பளித்திருந்தார்.

  இது குறித்து மக்களவையின் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று பேசிய மோதி, "ஏராளமான பெண்கள், தலித்துகள், பழங்குடிகள் ஆகியவோரின் பிரதிநிதிகளாக பலரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட தகவலை பகிரும்போது நாடாளுமன்றத்தில் உற்சாகம் மிகுந்திருக்கும் என கருதினேன். இம்முறை எங்களுடைய சகாக்களில் பலர் விவசாயம், கிராமப்புறம், பிற்படுத்தப்பட்ட வகுப்பு போன்ற பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களை ஊக்குவித்து வாழ்த்தியிருக்க வேண்டும். அனேகமாக சிலருக்கு இந்த நாட்டில் பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகளின் வாரிசுகள் அமைச்சர்களானது மகிழ்ச்சி தராமல் இருந்திருக்கலாம். அதனால்தான், புதிய அமைச்சர்கள் அறிமுகம் செய்யப்படுவதை கூட அவர்கள் அனுமதிக்கவில்லை," என்றார்.

  பிரதமர் பேசியபோதே, விலைவாசி, விவசாயிகள் போராட்டம் போன்ற பிரச்னைகளை எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் எழுப்பினர். இதையடுத்து சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா, "நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தரத்தையே நீங்கள் குறைக்க முற்படுகிறீர்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு நம்முடையது," என்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

  இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், "நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் இன்று செய்தது சோகமான மற்றும் துரதிருஷ்டவசமானது. பிரதமரால் தமது அமைச்சரவை சகாக்களை கூட அறிமுகம் செய்து வைக்க முடியவில்லை," என்று கூறினார்.

 9. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  காமராஜ்

  1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காமராஜ் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தபோது, அவருக்கு திராவிடர் கழக தலைவர் ஈ.வெ. ராமசாமி ஒரு தந்தி அனுப்பினார். அதில், காமராஜின் முடிவு அவருக்கு மட்டுமின்றி தமிழக மக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்று ஈ.வெ.ரா குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 10. சரோஜ் சிங்

  பிபிசி இந்தி நிருபர்

  ராகுல், பிரியங்காவுடன் சந்திப்பு: பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைகிறாரா?

  மேற்கு வங்கத் தேர்தலில் மமதா பானர்ஜியின் வெற்றியின் பின்னர், பிரசாந்த் கிஷோர் அரசியல் உத்தி வகுக்கும் பங்களிப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். பெரிதாக ஏதோ நடக்கப்போவதாக ஊடகங்கள் கூறிவருகின்றன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 36