கணினி

 1. பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

  பெகாசஸ்
  Image caption: என்எஸ்ஓ என்ற இஸ்ரேலி நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி இந்தியா முக்கிய நபர்களை உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

  பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தி உளவு பார்த்ததாக இந்திய அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  முன்னதாக, இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமிக்க உத்தரவிடும்படி சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

  அவற்றை நேற்று விசாரித்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அடங்கிய அமர்விடம், இதுபோன்ற தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.

  வேண்டுமானால் இந்த விவகாரத்தில் தவறான தகவல்கள் பரவுவதை தவிர்க்கும் விதமாக சிறப்புக் குழுவை மத்திய அரசு நியமிக்க தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற விவகாரத்தில் தேச நலனுக்கு எது தேவையோ அதை மட்டுமே அரசு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

  ஆனால், விசாரணையின் கடைசிவரை பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி சாமானியர்களையும் முக்கிய பிரமுகர்களையும் அரசு வேவு பார்த்ததாக என்ற விவரத்தை அவர் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தவில்லை.

  இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அரசு ஏன் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யாமல் தவிர்க்கிறது? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யாவிட்டால், அடுத்ததாக இந்த விவகாரத்தில் குழுவை அமைக்க மனுதாரர்கள் விடுக்கும் கோரிக்கை மீது மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

  இதைத்தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மனுதாரர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் மனுக்களில் கோரியுள்ளது போல எந்த அளவுக்கு தகவல்களை நீதிமன்றத்தில் பகிர்ந்து கொள்ள முடிவெடுக்கிறார்கள் என்பதை அந்த பதிலை வைத்துப் பார்க்கலாம் என்று தலைமை நீதிபதி கூறினார்.

  அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல், "இதுபோன்ற தகவல்களை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது. வேண்டுமானால் ஒரு குழு நியமிக்கப்பட்டால் அதன் முன்பு சில தகவல்களை வரம்புக்கு உட்பட்டு தெரிவிக்கிறோம்," என்று கூறினார்.

  இதையடுத்து தலைமை நீதிபதி, "நாங்களும் உங்களிடம் எல்லா நுட்பமான தகவல்களையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு உங்களை நாங்கள் கட்டாயப்படுத்தவும் இல்லை. நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். உங்களுடைய பதிலை அதில் தெரிவியுங்கள்," என்று கூறினார்.

  அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபல், "தேச பாதுகாப்பு தொடர்பான தகவல்களை மனுதாரர்களும் கோரவில்லை. பெகாசஸ் என்ற தொழில்நுட்பத்தை இந்திய அரசு பயன்படுத்தியதா என்பதை அறியவே விரும்புகிறோம்," என்று தெரிவித்தார்.

  இதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி, "சிறப்புக் குழு அமைப்பதா வேண்டாமா என்பதை பின்னர் முடிவு செய்கிறோம். இப்போது மனுக்களை விசாரணைக்கு ஏற்பது பற்றியே விவாதிக்கிறோம். அரசு தரப்பு தனது நிலைப்பாட்டை மனு மூலமாக தெளிவுபடுத்தட்டும். அடுத்த 10 நாட்களில் மீண்டும் இந்த மனுக்களை விசாரிக்கிறோம். அவற்றை ஏற்பது பற்றி அப்போது முடிவெடுக்கிறோம்," என்று குறிப்பிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

 2. ஷிவ் நாடார்

  1976-ம் ஆண்டு ஏழு பேருடன் இணைந்து டெல்லியில் ஹெச்.சி.எல் (ஹிந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிட்டட்) நிறுவனத்தை ஷிவ் நாடார் உருவாக்கினார். இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ்க்கு அடுத்ததாக மூன்றாவது மிகப்பெரிய ஐ,டி நிறுவனமாக தற்போது ஹெச்.சி.எல் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. வாட்ஸ்அப்

  மே 15 முதல் ஜூன் 15 வரை இந்தியாவில் மட்டும் "அதிக எண்ணிக்கையிலான மற்றும் அசாதாரண அளவிலான தகவல்களை" அனுப்பிய 20 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்சாப் கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 4. Putin and Biden

  வர்த்தக நிறுவனங்களின் தகவல்களை முடக்கி வைத்துக்கொண்டு அவற்றை, மீண்டும் நிறுவனத்தின் வசம் விடுவதற்காக இணைய வழித் தாக்குதலாளிகள் பணயத் தொகை கேட்கும் ரான்சம்வேர் தாக்குதல்கள் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 5. மதன்

  உச்ச நீதிமன்றமும், `தடுப்புக் காவல் சட்டம் என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது அல்ல' எனக் கூறியுள்ளது. அதேநேரம், சட்டத்தைப் பயன்படுத்தும்போது உண்மையான குற்றவாளிக்கு எதிராகத்தான் பயன்படுத்த வேண்டும். பொய் வழக்கைப் போட்டு அதன் அடிப்படையில் இதனைப் பயன்படுத்தக் கூடாது," என கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. ஏ.எம்.சுதாகர்

  பிபிசி தமிழுக்காக

  ஆன்லைன் குற்றங்கள்

  ஆன்லைன் வாயிலாக நிறைய பணம் சம்பாதிக்க ஏராளமாக வாய்ப்பு உள்ளது என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். பேசுவது பெண் அல்ல, மோசடி நபர்கள் என்று அறியாத சிலரும் அவர் கூறும் செயலியை பதிவிறக்கம் செய்து விடுகின்றனர். அதை செல்பேசியில் நிறுவியவுடன், அந்த நபரின் விவரம், வங்கிக்கணக்குகள், கடவுச்சொற்கள் போன்றவற்றை திருடி விடுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 7. பேட்டரி

  புதிய மடிக்கணினி பேட்டரிகள் பொதுவாக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. இதற்குள் சுமார் 500 முதல் ஆயிரம் முறை சார்ஜ் செய்யப்படுகின்றன.

  மேலும் படிக்க
  next
 8. மறைமலை இலக்குவனார்

  தமிழறிஞர்

  மு.ஆனந்தகிருட்டிணன்

  கல்வித்துறை வித்தகர் மால்கம் ஆதிசேசையா தலைமையில் அமைந்த குழு அண்ணா பல்கலைக்கழகத்துணைவேந்தர் பதவிக்கு ஆனந்தகிருட்டிணன் அவர்களின் பெயரைப் பரிந்துரைத்தது.அவர் பதவி ஏற்றது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.

  மேலும் படிக்க
  next
 9. பில் கேட்ஸ்

  இந்த காதல் ஜோடி 1994ஆம் ஆண்டில் திருமணம் செய்தனர். லனாயின் ஹவாய் தீவில் இவர்களின் திருமணம் நடந்தது. அந்த நேரத்தில் உள்ளூரில் வாடகைக்கு விடப்பட்டிருந்த அனைத்து ஹெலிகாப்டர்களையும் இந்த ஜோடி வாடகைக்கு எடுத்திருந்தனர். காரணம், அன்றைய நாளில் தங்களுடைய திருமணத்துக்கு வருபவர்கள் தவிர வேறு தேவையற்ற விருந்தினர்கள் அங்கு வருவதை அந்த ஜோடி விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 10. ஜோ டெடி

  பிபிசி

  Porn

  ஹேக் செய்யப்பட்ட மூத்த அதிகாரியின் கணினியில், ஆபாசப்பட நடிகர்கள் மற்றும் இணையதளங்களின் பெயர்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டிருந்த ஆபாசப்பட காணொளிகளின் பட்டியலின் படப்பிடிப்பு காட்சிகளும் இணைக்கப்பட்டிருந்தன

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2