ரெயில்வே

 1. Video content

  Video caption: ஆப்கானிஸ்தான் சந்தைகளில் பொருட்களை வாங்க குவியும் மக்கள் - என்ன காரணம்?

  வெளிநாட்டுப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?

 2. இந்திய ரயில்வே

  சட்டப்பேரவை உறுப்பினரின் செயல்பாடுகள் குறித்து சக பயணிகள் புகார் அளித்தனர். ரயில்வே பாதுகாப்பு படையினர், பயணச்சீட்டு பரிசோதகர் ஆகியோர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்

  மேலும் படிக்க
  next
 3. டெல்லியில் 11 ஆண்டுகளில் இல்லாத கன மழை: தாழ்வான சாலைகளில் வெள்ளம் புகுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

  View more on twitter

  இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கன மழையால் பல இடங்களில் தாழ்வான சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது.

  இதனால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நரேத்தில் 112.1 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.

  இதற்கு முன்பு ஒரே நாளில் இந்த அளவு மழை 2010ஆம் ஆண்டு செப்ாடம்பர் 20ஆம் தேதி பெய்தது. அப்போது மழை நீர் 110மி.மீ அளவுக்கு பதிவானதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

  டெல்லியில் நேற்று முதல் விட்டு பெய்து வந்த மழை, இன்று காலையில் இடைவிடாது பொழிந்தது. இந்த மழை டெல்லி, தேசிய தலைநகர் வலய பகுதியில் தொடரும் என்றும் சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  View more on twitter
 4. சீனா

  இங்குள்ள ஒரு கோடியே இருபது லட்சம் பேர் வாழும் ஜங்செள நகரம், மஞ்சள் ஆற்றுப்படுகையையொட்டிய பகுதியில் உள்ளது. அங்கு விரிவான அணை கட்டுமானத்தால் இதுபோன்ற இடர்பாடு நேரலாம் என அறிவியாளளர்கள் முன்பே எச்சரித்ததாகக் கூறுகிறார், பிபிசி சீன செய்தியாளர் ஸ்டீஃபென் மெக்டோனெல்.

  மேலும் படிக்க
  next
 5. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதி மூழ்கிய நிலையில் வாகனங்கள்.

  மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால், பெரும்பாலான நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

  மேலும் படிக்க
  next
 6. பாகிஸ்தான் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 40-ஆக உயர்வு

  ரயில்

  பாகிஸ்தானில் இரு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 40-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

  பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் சர் சையஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மில்லட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மோதிக்கொண்டன.

  இன்று அதிகாலையில் விபத்து நடந்ததாகவும் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் கராச்சியில் இருந்து சர்கோதா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

  மில்லட் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தரம்புரண்டு அருகேயுள்ள தண்டவாளத்தில் விழுந்து கிடந்ததாகவும், அந்த வழியாக வந்த சர் சையது எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது மோதியதாகவும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

  இந்த விபத்து தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் பிரதமர் இம்ரான் கான், சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல அமைச்சருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

  விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் இம்ரான்கான் குறிப்பிட்டிருக்கிறார்.

  விபத்து நடந்தபோது சையது அகமது எக்ஸ்பிரஸ் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக அதில் பயணம் செய்த அப்துல் ரகுமான் என்பவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.

  விபத்து நடந்ததும் எங்கும் அழுகுரல்களும், கதறல்களும் கேட்டதாக அப்துல் ரகுமான் கூறியிருக்கிறார். சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அந்த வெளிச்சத்தில் காயமடைந்தவர்கள் மீட்டார்கள் என்று அவர் கூறுகிறார்.

  கடந்த சில ஆண்டுகளில் பல ரயில் விபத்துகள் பாகிஸ்தானில் நடந்திருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் கராச்சி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

  2019-ஆம் ஆண்டு நவம்பரில் டெஸ்காம் எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீவிபத்தில் 74 பேர் உயிரிழந்தனர்.

  View more on twitter
 7. டெல்லியில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு - மெட்ரோ சேவைகள், கடைகள் திறப்பு

  METRO RAIL

  இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டுள்ளதன் அடையாளமாக மெட்ரோ ரயில் சேவை பயணிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

  டெல்லி மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 10ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதையடுத்து இன்று முதல் 50 சதவீத பயணிகளுடனும், 10 முதல் 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

  கடைகள் திறக்கப்பட அனுமதிக்கப்பட்டாலும், அவற்றின் கதவு எண், ஒற்றை இலக்கத்தில் முடிந்தால் ஒற்றை இலக்க தேதிகளிலும் இரட்டை இலக்கத்தில் முடிந்தால், இரட்டை இலக்க தேதியிலும் திறக்க நகர அரசு அனுமதி வழங்கியுள்ளது.

  டெல்லியில் சில தொழில் நடவடிக்கைகளை தொடங்க அனுமதி வழங்கியிருந்தாலும், அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

  டெல்லியில் கொரோனா பாதிப்புகளின் அன்றாட எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆயிரத்தைக் கடந்த வேளையில், ஞாயிற்றுக்கிழமை புதிய பாதிப்பு எண்ணிக்கை 381 ஆக குறைந்திருக்கிறது. தொடர்ச்சியாக பாதிப்பு அளவு சரிந்து வருவதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு வழங்கியிருக்கிறது.

  View more on twitter
  View more on twitter
 8. இந்திய ரயில்வே

  ரயில் நடைமேடை நுழைவுச் சீட்டு (பிளாட்ஃபார்ம் டிக்கெட்) ரூ.50ஆக உயா்த்தப்பட்டதை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து தென்மேற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. வினீத் கரே

  பிபிசி செய்தியாளர்

  கொரோனா வைரஸ்

  இந்தியாவில் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு உள்ளது என்பதை விட, அது தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில் நிலவும் விநியோக தடங்கலே அதிகம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: தைவானில் உள்ள குகை பாலத்தில் ரயில் பெட்டிகள் ஒரு குகை பாலத்தில் சிக்கின
பக்கம் 1 இல் 7