சமூக ஊடகங்கள்

 1. Former US President Donald Trump

  ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில், பார்வையாளர்கள் சேருவதற்கான அழைப்பு அடுத்த மாதம் விடுக்கப்படும் என்றும் 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கை அதில் இருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. விராட் கோலி

  கோலியின் கருத்துக்கு பதிலளித்துள்ள ஒரு ட்விட்டர் பயனர், "எங்கள் பண்டிகைகளை எப்படி கொண்டாட வேண்டும் என எங்களுக்குத் தெரியும். உங்கள் அறிவைப் பயன்படுத்தி கோப்பைகளை வெல்லுங்கள், அது தான் உங்களுக்கு சாத்தியப்படாமல் இருக்கிறது," என்று கூறியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 3. லிங்க்ட் இன்

  சமீபத்தில், லிங்க்ட்இன் நிறுவனம் மெலிசா சான் மற்றும் கிரெக் ப்ரூனோ உட்பட பல பத்திரிகையாளர்களின் கணக்குகளை அதன் சீன வலைத்தளத்திலிருந்து கருப்புப் பட்டியலில் சேர்த்தது.

  மேலும் படிக்க
  next
 4. ஃபெர்னாண்டோ டுவார்டே

  பிபிசி

  Seong Gi-hun, one of the main characters in Squid Game, holds a dalgona

  நெட்ஃப்ளிக்ஸில் ஒளிபரப்பாகி உலக அளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்க்விட் கேம் தொடர், தென் கொரியாவின் சமூக அமைப்பையும் சிக்கலையும் படம் பிடித்துக்காட்டுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் மீண்டும் தடங்கல்; மன்னிப்புக் கோரியது பேஸ்புக் ஃபேஸ்புக்,

  View more on twitter

  இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சேவைகளில் மீண்டும் ஏற்பட்ட தடங்கல் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

  உலகம் முழுவதும் பலர் ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகள் சில மணி நேரங்களுக்குக் கிடைக்கவில்லை.

  எனினும் கடந்த திங்கள்கிழமையன்று சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட முடக்கத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என ஃபேஸ்புக் விளக்கம் அளித்திருக்கிறது.

  இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் இயங்காதது குறித்து ட்விட்டர் உள்ளிட்ட வேறு சமூக வலைத்தளங்களில் இதுபற்றி ஏராளமானார் பதிவிட்டிருந்தனர்.

 6. எம்.ஏ.பரணிதரன்

  பிபிசி தமிழ்

  ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி

  நுனிநாக்கு ஆங்கிலம் அல்லது காதல் ரசம் சொட்டும் மொழிகளில் பேசி இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எளிதில் வசப்படக்கூடிய பெண்கள் அல்லது ஆண்களை தங்களுடைய இலக்காக்குகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

  ஒரு நாட்டின் பிரதமர், தொழிலதிபர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும்போது, இப்படி கைகட்டி பவ்வியமாக நின்று படத்துக்கு போஸ் கொடுக்கலாமா என பலரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். உண்மை என்ன?

  மேலும் படிக்க
  next
 8. ஃப்ரான்செஸ் ஹாகென், முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர்

  இன்ஸ்டாகிராம் ஆராய்ச்சி தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல இளைஞர்கள் அத்தளத்தைப் பயன்படுத்துவதில் நேர்மறையான அனுபவங்களைக் கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார் மார்க் சக்கர்பெர்க்.

  மேலும் படிக்க
  next
 9. விழியில் ஃபேஸ்புக்

  ஒரு கோடியே 6 லட்சம் பேர் இந்த சிக்கல் குறித்து ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். இந்த இணைய தளங்களில் ஏற்பட்ட கோளாறு எவ்வளவு பெரியது என்பதையும், உலகம் எப்படி இவற்றை சார்ந்திருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. 6 மணி நேரம் செயலிழந்த வாட்சாப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் - காரணம் என்ன?

  ஃபேஸ்புக்

  சமூக ஊடக மற்றும் செய்திப் பறிமாற்றத் தளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சாப் ஆகியவை நேற்று திங்கள் கிழமை இரவு தொடங்கி 6 மணி நேரத்துக்கு செயலிழந்தன.

  இந்த மூன்றுமே ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த நிறுவனங்களின் சேவைகளை மொபைல் செயலிகள் மூலமோ, கணினி மூலமோ எதன் மூலமும் பெற முடியவில்லை.

  சமூக ஊடகத் தளங்கள் அவ்வப்போது முடங்குவது இயல்புதான் என்றாலும், இந்த முடக்கம் மிகப் பெரியது.

  காரணம் இந்த முடக்கம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும் நடந்துள்ளது. அதே போல சரி செய்வதற்கு எடுத்துக்கொண்ட காலமும் மிக நீண்ட நேரம்.

  இன்னும் முழுமையாக இந்த சேவைகள் மீளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாறு காணாத இந்த முடக்கத்துக்குக் காரணம் என்ன?

  கான்ஃபிகரேஷன் மாற்றத்தை தவறாக செயல்படுத்தியதால்தான் இந்த முடக்கம் நேரிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

  ஒரு கோடியே 6 லட்சம் பேர் இந்த சிக்கல் குறித்து ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள்.

  இந்த இணைய தளங்களின் கோளாறு எவ்வளவு பெரியது என்பதையும், உலகம் எப்படி இவற்றை சார்ந்திருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.

  கிரீன்விச் சராசரி நேரப்படி திங்கள் கிழமை 16.00 மணிக்கு கிடைக்காமல் போன இந்த சேவைகள், 22.00 மணிக்கு மீண்டும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

  தவறாக செயல்படுத்தப்பட்ட கான்ஃபிகரேஷன் மாற்றம் நிறுவனத்தின் உள்ளக கருவிகளையும், கணினிகளையும் பாதித்துவிட்டதால், சரி செய்யும் நடவடிக்கைகள் சிக்கலாக மாறிவிட்டதாக ஃபேஸ்புக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பக்கம் 1 இல் 22