நெதர்லாந்து

 1. நெதர்லாந்து சென்ற விமானப் பயணிகளுக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு

  நெதர்லாந்து

  தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு சென்ற 13 பேரிடம் புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  கொரோனா வைரஸுக்கான சோதனை செய்த 61 பயணிகளில் அவர்களும் அடங்குவர். கொரோனாவின் புதிய திரிபு வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில்கொண்டு நெதர்லாந்தில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  ஒமிக்ரான் திரிபு குறித்து உலக சுகாதார அமைப்புக்கு கடந்த புதன்கிழமையன்று தென்னாப்பிரிக்கா தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கவலைக்குரிய திரிபு என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

 2. சரோஜ் பத்திரனா

  பிபிசி உலக சேவை

  இலங்கை

  இலங்கையில் பிறந்த ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஐரோப்பாவுக்கு குழந்தைகள் விற்பனை சந்தைகள் மூலம் விற்கப்பட்டன. பல தசாப்தங்களுக்குப் பிறகு கட்டாயப்படுத்தப்பட்டு தங்களுடைய பிள்ளைகளை கொடுக்க நேர்ந்த துயரத்தை நினைத்து வருந்தும் தாய்மார்ள், பெற்ற பிள்ளைகளை பார்க்க காத்திருக்கிறாரக்ள்.

  மேலும் படிக்க
  next
 3. கொரோனா

  ஐரோப்பாவின் பல நாடுகளில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட பல நாடுகளிலும் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக ஒரே நாளில் 5,000 தொற்றுகள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 4. படிப்படியாக ஊரடங்கை தளர்த்தும் ஐரோப்பிய நாடுகள்

  வரும் திங்கட்கிழமை முதல் பிரான்ஸில் எவ்வாறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் எட்யார்ட் பிலிப்பே தெரிவித்துள்ளார். அந்நாட்டின் பகுதிகள் சிவப்பு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கு ஏற்றாற்போல தளர்வுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வெளியில் சென்று உடற்பயிற்சி செய்யும் போது இரண்டு நபர்களுக்கு மேல் யாரும் சந்திக்கக்கூடாது என்று பெல்ஜியம் அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது வரும் ஞாயிறு முதல் நான்கு பேர் வரை சந்தித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என்று அந்நாட்டு மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  அடுத்த நான்கு மாதங்களுக்கு படிப்படியாக எவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற வழிமுறைகளை நெதர்லாந்து அறிவித்துள்ளது. அங்கு வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்ப பள்ளிகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்படும். ஜுன் 1ஆம் தேதி முதல் உணவகங்கள் மற்றும் பார்கள் திறக்கப்படும். இறுதியாக விளையாட்டுகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கான அனுமதி செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  படிப்படியாக ஊரடங்கை தளர்த்தும் ஐரோப்பிய நாடுகள்
  படிப்படியாக ஊரடங்கை தளர்த்தும் ஐரோப்பிய நாடுகள்
 5. பெண்கள் ஆளும் நாடுகளில் தொற்று கட்டுபாட்டில் இருப்பது எப்படி?

  நியூசிலாந்து முதல் ஜெர்மனி வரை, தைவான் நார்வே போன்ற பெண்களால் ஆட்சி செய்யப்படும் சில நாடுகளில் கோவிட்-19ஆல் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது.

  மேலும் அந்நாடுகளில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள் இந்த தொற்று பரவாமல் இருக்க எடுத்த நடவடிக்கைகளை ஊடகங்களும் பாராட்டியுள்ளன.

  View more on youtube
 6. நெதர்லாந்து தேசம் முழுவதும் நான்கு மணி நேரம் தொலைத்தொடர்பு துண்டிப்பு - ஹேக்கிங் செய்யப்பட்டதா? மற்றும் பிற செய்திகள்

  தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் போலீஸ் வீதிகளில் குவிக்கப்பட்டனர். அவசர தேவைக்கு தொலைத்தொடர்பை சார்ந்து இருக்காமல் நேரடியாக காவல் நிலையம், மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர் அதிகாரிகள்.

  மேலும் படிக்க
  next
 7. MH17 Ukraine plane crash

  அது உக்ரைன் அரசு மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் பிரிவினைவாத குழுக்கள் ஆகியோர் இடையே மோதல் நிலவி வந்த நேரம். அப்போது உக்ரைன் ராணுவ விமானங்கள் பலவும் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன.

  மேலும் படிக்க
  next