இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்கள்

 1. இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலத்தீனர்கள் பலி

  மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் ஐந்து பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

  தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாங்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அதன்போது இறந்த ஐவரும் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது.

  பாலத்தீன தரப்பிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தங்கள் நாட்டு ராணுவத்தினர் இருவருக்கும் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

  தங்கள் உறுப்பினர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

  பர்குய்ன் எனும் பகுதியில் இருவரும் ஜெருசலேம் அருகே உள்ள பித்து எனும் இடத்தில் மூவரும் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீன் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

  israel palestine
 2. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீன கைதிகளில் நால்வர் பிடிபட்டனர்

  இஸ்ரேல் சிறை ஒன்றில் இருந்து இந்த வார தொடக்கத்தில் தப்பிய ஆறு பாலத்தீனர்களில் நான்கு பேர் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

  அவர்களில் இருவர் சனிக்கிழமை அதிகாலை கார் நிறுத்தம் ஒன்றில் பதுங்கி இருந்த போது பிடிக்கப்பட்டனர் என்றும் மற்ற இருவர் வெள்ளிக்கிழமை அன்று நாசரேத் நகரின் அருகே பிடிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது இஸ்ரேல் காவல்துறை.

  மேற்குக் கரையில் உள்ள நகரான ஜெனின் எனும் நகரிலுள் அல்-அக்சா தியாகிகள் படையின் முன்னாள் தளபதி சக்காரியா ஜூபெய்தியும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார். மீதமுள்ள மூவர் 'இஸ்லாமிய ஜிகாத்' எனும் அமைப்பினர் ஆவர்.

  கடந்த திங்களன்று இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள கில்போ சிறைச்சாலையில் இருந்து ஆறு பேர் தப்பிய பின் அவர்களுக்கான தேடுதல் வேட்டை தொடங்கியது.

  வயல் வெளி அருகே தப்பியோடிய கைதிகள் வெளியே வந்த வழி.
  Image caption: வயல் வெளி அருகே தப்பியோடிய கைதிகள் வெளியே வந்த வழி.
 3. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீனர்கள். சித்தரிக்கும் படம்.

  தப்பிய சிறைக்கைதிகள் ஆறு பேரும் திங்களன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணி அளவில் சிறையிலிருந்து தப்பிச் செல்வதை அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் காட்டுகின்றன.

  மேலும் படிக்க
  next
 4. இஸ்ரேலிய சிறையில் இருந்து தப்பிய 6 பாலத்தீனர்களுக்கு உதவிய துருப்பிடித்த ஸ்பூன்கள்

  இஸ்ரேல்
  Image caption: கில்போ சிறைச்சாலை

  இஸ்ரேலில் உள்ள சிறை ஒன்றில் இருந்து சுரங்கம் தோண்டி ஆறு பாலத்தீனர்கள் இரவோடு இரவாக தப்பியுள்ளனர். தப்பியோடிய ஆறு சிறைக் கைதிகளையும் இஸ்ரேலிய அதிகாரிகள் தற்பொழுது தேடிக் கொண்டிருக்கின்றனர்.

  கில்போ சிறைச்சாலையில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கழிப்பிடத்தில் இருந்து சிறையின் சுற்றுச்ச் சுவருக்கு வெளியே உள்ள சாலை வரை நிலத்துக்கு அடியில் சுரங்கம் தோண்டிய அந்தச் சிறைக் கைதிகள் அதன் வழியாகத் தப்பியோடி உள்ளதாக கருதப்படுகிறது.

  தங்கள் வயல்கள் வழியாக சிறைக் கைதிகள் தப்பி ஓடுவதைப் பார்த்த விவசாயிகள் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

  இவர்களில் ஐந்து பேர் 'இஸ்லாமிக் ஜிகாத்' எனும் அமைப்பின் உறுப்பினர்கள்; ஒருவர் அல்-அக்சா தியாகிகள் படை எனும் தீவிரவாதக் குழுவின் முன்னாள் தலைவர்.

  இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 5. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீனர்கள். சித்தரிக்கும் படம்.

  சந்தேகத்திற்குரிய நபர்கள் வயல்கள் வழியாக ஓடுவதை விவசாயிகள் பார்த்த பின்னரே சிறையில் இருந்து ஆறு பேரும் தப்பியது சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. மியூனிக் படுகொலை

  இஸ்ரேலின் பிரதமர் கோல்டா மேயரின் உத்தரவுப்படி தாக்குதலுடன் தொடர்புடைய பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கறுப்பு செப்டம்பர் பிரிவைச் சேர்ந்தவர்களும். ஜெர்மானியர்களும் ஒவ்வொருவராகக் குறிவைத்து அழிக்கப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
 7. பெகாசஸ் ரகசிய மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்ட இந்தியாவின் முக்கிய புள்ளிகள்

  இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மூன்று எதிர்க்கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் பல தொழிலதிபர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

  இஸ்ரேல் - பாலத்தீனம்: காசா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்

  காசா

  பாலத்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது

  புதன்கிழமை அதிகாலை முதல் காசா நகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்க முடிந்தது.

  செவ்வாய்க்கிழமையன்று காசா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டன. இதில் பல இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேலிய தீயணைப்புத் துறை கூறுகிறது.

  கடந்த மே 21-ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் பிராந்தியத்தில் நடக்கும் பெரிய மோதலாகும் இது.

  காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காசா இயக்கத்தின் எச்சரிக்கையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் யூத தேசியவாதிகள் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் .உருவாகியிருக்கிறது,

 9. சிங்கம்

  வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்துள்ளது. ஏற்கனவே இதே நோயால் பெண் சிங்கம் ஒன்று உயிரிழந்த நிலையில் இது இரண்டாவது உயிரிழப்பாகும்.

  மேலும் படிக்க
  next
 10. நேதன்யாஹு

  நெதன்யாகு தனது 18 வயதில் இஸ்ரேலுக்கு திரும்பி ஐந்து வருடங்களை ராணுவத்தில் கழித்தார். ராணுவத்தில் உயரடுக்கு கமாண்டோ பிரிவான சாயேரெட் மட்கல்லில் பணியாற்றினார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 8