பஞ்சாப்

 1. பஞ்சாபின் சிறிய கிராமத்தில் இருந்து டோக்யோ வரை – கமல்ப்ரீதின் பயணம்

  பஞ்சாபின் சிறிய கிராமத்தில் இருந்து டோக்யோ வரை – கமல்ப்ரீதின் பயணம்

  டோக்யோ ஒலிம்பிக்கில் வட்டு எறிதல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் 25 வயதான கமல்ப்ரீத் கவுர்

  பஞ்சாபில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்த இவர், சமீபத்தில் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார்.

  பதக்கம் வென்ற பிறகு, பலரும் என்னை தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்துவார்கள், ஆனால், வட்டு எறிதல் என்றால் என்னவென்றும் கேட்பார்கள்.

  ஒலிம்பிக் போட்டிக்கு செல்வதற்கு முன் பிபிசி செய்தியாளர் வன்தனா அவரிடம் அவரது விளையாட்டு குறித்தும் ஒலிம்பிக் குறித்தும் பேசினார்.

  உங்கள் மனதில் என்ன ஓடுகிறது?

  என் குறிக்கோள் நன்றாக விளையாட வேண்டும் என்பதும் பதக்கம் வெல்வதும் மட்டுமே. அதன் பிறகு கடவுள் செயல்.

  இளைஞர்களுக்கு கிரிக்கெட் குறித்து தெரியும். ஒரு சிலருக்கு மட்டுமே உங்கள் விளையாட்டு குறித்து தெரியும். பலரும் தெரிந்து கொள்ள வட்டு எறிதல் பற்றி கூறுகிறீர்களா?

  அனைவருக்கும் கிரிக்கெட் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் யாருக்கு வட்டு எறிதல் குறித்து தெரியவில்லை. இன்றும் என்னிடம் பேசும்போது, வட்டு எறிதல் என்றால் என்னவென்று கேட்கிறார்கள்? எப்படி விளையாடுவீர்கள் என்கிறார்கள். அது ஒரு சக்கரம் போன்றது. நீங்கள் அதை எவ்வளவு தூரத்திற்கு முடியுமோ அவ்வளவு தூரம் எறிய வேண்டும்.

  உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்று கேள்விப்பட்டோம்?

  எதிர்காலத்தில் எனக்கு நேரம் இருந்தால், நான் கிரிக்கெட் விளையாடுவேன். கிரிக்கெட் எனக்கு பிடிக்கும்

  விளையாட்டுத்துறையை தேர்ந்தெடுத்த பின் ஆண்களை விட பெண்கள் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?

  பெண் என்றால் அனைவருக்கும் வரும் முதல் சிந்தனை, திருமணம் தான். பெண் படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் விளையாட்டை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப்படுவதில்லை. விளையாட்டால் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது என்றுதான் கேட்பார்கள். இதைதான் நான் என் வாழ்க்கையில் பார்த்துள்ளேன்.

  நீங்கள் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வருகிறீர்கள். எந்த மாதிரியான சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது?

  நான் விளையாட்டுத்துறையை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று கூறி என் குடும்பத்தை சமாதானப்படுத்துவதே என் பெரும் பிரச்னையாக இருந்தது. நான் படிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். நான் உறுதியாக இருக்க, விளையாட்டை தேர்ந்தெடுக்க அனுமதித்தார்கள்.

  எங்கள் பகுதியில் பயிற்சி மையங்கள் குறித்து எனக்கு தெரியாது. பயிற்சி எடுக்க எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ளவே எனக்கு சில காலம் பிடித்தது. முன்கூட்டியே பயிற்சி கிடைத்திருந்தால், 2016 ஒலிம்பிக் போட்டியில் நான் கலந்து கொண்டிருப்பேன்.

 2. சீக்கியர்கள் ஏன் உலகெங்கும் அன்பைக் கொண்டாடுகிறார்கள்?

  பெரும்பாலான மதங்களில் மற்றவர்களுக்கு உதவுமாறும் நல்லது செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சீக்கியர்கள் எவ்வாறு பேச்சிலிருந்து செயலுக்குப் பயணித்தார்கள்? எல்லா சீக்கியர்களும் மகிழ்ச்சியானவர்களாகவும் சேவை செய்வதில் மகிழ்பவர்களாகவும் இருக்கிறார்களா?

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: ஆறு ஹெலிகாப்டர்கள் வாங்கிய பழைய இரும்பு வியாபாரி - ஏன்?

  பஞ்சாபை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஒருவர், இந்திய ராணுவத்திடமிருந்து பழைய 6 ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளார்.

 4. அன்பரசன் எத்திராஜன்

  பிபிசி நியூஸ்

  ஜப்பானின் தோல்விக்கு பிறகு பஞ்சாப் ரெஜிமென்டின் உறுப்பினர்களுடன் ராபின் ரௌலாண்ட்

  பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் பஞ்சாப் ரெஜிமென்ட்டில் ஓர் அங்கமாக இருந்த இளம்வயது கேப்டன் ரௌலேண்ட் தங்களைப் போன்ற பத்து மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருந்த ஜப்பானிய படையினரை பல வாரங்களாக எதிர்கொண்டிருந்த தங்களது சக வீரர்கள் 1500 பேரை விடுவிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 5. ஃபேஸ்புக் லைக்

  ஆசிரியர்கள் கூகுள் படிவம் (Google form) ஒன்றை காட்டுகின்றனர். அதில் இந்த வாரம் பள்ளி ஃபேஸ்புக் கணக்கில் இடப்பட்ட பதிவுகள், இந்த வாரம் பதிவு செய்யப்பட்ட லைக்குகள், கமெண்டுகளின் எண்ணிக்கை, யார் யாரிடம் எல்லாம், அதாவது எத்தனை பேரிடம் பேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது போன்ற கேள்விகள் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 6. திருமண ஜோடி

  திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ விரும்பும் நோக்குடன் அவர்கள் மனு மீது உத்தரவிட்டால் அதை நீதிமன்றம் ஏற்பது போல ஆகும். அத்தகைய ஒரு வாழ்க்கை முறை தார்மீக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்க முடியாது என்பதால் எவ்வித பாதுகாப்பையும் அவர்களுக்கு வழங்க உத்தரவிட முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. கொரோனா மரணம், மாதிரிப் படம்

  அவரது உடல் அடக்கத்தில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததுடன், இறந்தவரின் உடலை பிளாஸ்டிக் பையில் இருந்து வெளியே எடுத்து பலரும் தொட்டனர்.

  மேலும் படிக்க
  next
 8. இயான் மார்கன்

  பந்துவீச்சில் கலக்கிய கொல்கத்தா, பேட்டிங் வந்து போது தொடக்க ஓவர்களிலேயே சடசடவென விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் மார்கனின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா கரை சேர்த்தது.

  மேலும் படிக்க
  next
 9. ஆக்சிஜன் எடுத்துக் கொள்ளும் நோயாளி

  நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததை வெளியில் கூற வேண்டாம் எனவும், அவர்கள் மரணத்துக்கு வேறு விதமான உடல் உபாதைகள் காரணம் எனக் கூறுமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சுனில்.

  மேலும் படிக்க
  next
 10. Prashant Kishor

  இந்திய அரசியல் உலகில் கடந்த 10 ஆண்டுகளாக முக்கிய கட்சிகளின் சமூக ஊடகங்கள் மற்றும் உத்திகள் வகுப்பு நடவடிக்கையில் பங்கேற்பவராக பிரசாந்த் கிஷோர் அறியப்படுகிறார். காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவரது தொழில்முறை சேவையை தொடர்ந்து பெற்று வருகின்றன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4