இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை

 1. விவசாயிகள் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி

  CONGRESS
  Image caption: நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டிச் செல்லும் ராகுல் காந்தி

  இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, நாடாளுமன்றம் நோக்கி இன்று டிராக்டர் ஓட்டிச்சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

  பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து உள்ளிட்ட அம்மாநில எம்.பி.க்கள் சிலருடன் இன்று காலை தமது வீட்டில் இருந்து ராகுல் காந்தி டிராக்டரில் நாடாளுமன்றம் நோக்கிப் புறப்பட்டார். இதனால், அவர் செல்லும் வழிநெடுகிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "விவசாயிகள் சட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகள், அரசைப் பொருத்தவரை தீவிரவாதிகள். ஆனால், உண்மையில் இந்த சட்டங்கள் ஒன்று இரண்டு கார்பரேட் முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவே உள்ளன," என்று தெரிவித்தார்.

  "வீதியில் இறங்கி மாதக்கணக்கில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லும் விதமாகவே தமது வீட்டில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டி வந்தேன்," என்று ராகுல் காந்தி கூறினார்.

  இதற்கிடையே, கட்டுப்பாட்டு விதிகளை மீறி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இருந்த பகுதி நோக்கி டிராக்டரில் வந்த ஆதரவாளர்கள் செல்ல காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சூர்ஜிவாலா முயன்றார்.

  அவரை நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க தலைமையகம் அருகே வழிமறித்த காவல்துறையினர் அவரையும் சில காங்கிரஸ் பிரமுகர்களையும் கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

  CONGRESS
  Image caption: நாடாளுமன்றம் புறவாயில் பகுதி சாலை அருகே செய்தியாளர்களிடம் பேசும் ராகுல் காந்தி
 2. டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை விவசாயிகள் போராட்டம்

  FARMERS
  Image caption: ராகேஷ் கெய்த், பாரதிய கிசான் யூனியன் தலைவர்

  மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஜூலை 22ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட நகர அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

  இதையடுத்து, விவசாயிகள் போராட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்ட இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.

  இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் கெய்த், "200 விவசாயிகள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பேட்ஜுகளுடன் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்," என்று கூறினார்.

  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 விவசாயிகள் சங்கங்கள், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பின் கீழ் ஒரே இயக்கமாக செயல்பட்டு வருகின்றன.

  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதனால் எம்.பி.க்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள ஜந்தர் மந்தரில் தங்களின் போராட்டத்தை நடத்த டெல்லி காவல்துறையிடம் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி வழங்க எந்த எழுத்துபூர்வ கடிதமும் வழங்கப்படவில்லை.

  இந்த நிலையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, விவசாயிகள் ஜந்தர் மந்தரில் ஜூலை 22ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி தருவதாக அறிவித்தது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த அனுமதியை நகர அரசு வழங்கியிருக்கிறது.

  இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ஜந்தர் மந்தர் பகுதியில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  View more on twitter
 3. விவசாயிகள் போராட்டம்

  விவசாயிகளின் போராட்ட விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. விவசாயிகளுடன் அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சிக்குமாறு கடந்த ஜனவரியில் மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த, அவர்கள் விடாமுயற்சியுடன் தொடரும் போராட்டமே காரணம். அப்போது முதல் டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகளை காவல்துறையினர் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதில்லை. இப்போது அவர்களின் போராட்டம் ஆறு மாதங்களை நிறைவு செய்திருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 4. இன்று கருப்பு தினம் அனுசரிப்பு: 6 மாதத்தை கடந்த டெல்லி விவசாயிகள் போராட்டம்

  இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகின்றன. அதே சமயத்தில், இந்தியாவின் பிரதமராக பதவியேற்று ஏழாண்டு காலத்தை நரேந்திர மோதி நிறைவு செய்கிறார்.

  இந்த நிலையில், இன்றைய நாளை “கருப்பு தினமாக” அனுசரிக்க போவதாக பல்வேறு விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

  குறிப்பாக, இந்திய தலைநகர் டெல்லியை ஒட்டி உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ள காசியாபாத் பகுதியில் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

  View more on twitter
 5. Video content

  Video caption: விவசாயிகளிடம் சிக்கிய BJP MLA: சட்டை கிழிந்தது - எங்கே, எப்போது?

  விவசாயிகளிடம் சிக்கிய BJP MLA: சட்டை கிழிந்தது - எங்கே, எப்போது?

 6. மணீஷ் பாண்டே

  நியூஸ் பீட் செய்தியாளர்

  கெட்டி

  "சிலர் கட்டிப்பிடிக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களிடமிருந்து விலகியே இருங்கள்." "ஆனால் நீங்கள் அந்த நபருடன் நெருக்கமாக இருந்தால், ஒரு அரவணைப்பு அல்லது அந்த நெருங்கிய தொடர்பு உதவும் என்று உங்களுக்குத் தெரிந்தால், அவர்களின் கையைப் பிடிக்க பயப்பட வேண்டாம்."

  மேலும் படிக்க
  next
 7. திஷா

  ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த வன்முறைக்கும் திஷா ரவிக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க வலுவான ஆதாரம் உள்ளதா, அதை சேகரித்தீர்களா? என்று காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அடிப்படையிலேயே இந்த சதியை பார்க்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: விவசாயிகள் போராட்டம்: சர்ச்சை டூல் கிட் வழக்கில் தீஷா கைது
 9. விவசாயிகள் போராட்டம் ட்விட்டர்

  சர்ச்சைக்குரிய இடுகைகள் பகிர்வு விவகாரத்தில் இந்திய அரசு உத்தரவிட்ட பிறகும், மிகவும் அலட்சியத்துடன் மிகவும் தாமதமாக ஆணையின் ஒரு சில பகுதிகள் மட்டுமே செயல்படுத்தப்பட்ட போக்குக்கு தனது ஏமாற்றத்தை அரசுத்துறைச் செயலாளர் பதிவு செய்தார்.

  மேலும் படிக்க
  next
 10. இளங்கோ

  இந்த அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை வரி செலுத்துவோரின் பணத்தை செலவு செய்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் ரயில் சேவைகளையும் உருவாக்குகிறது. பிறகு அவற்றை விற்று பணமாக்குவது தனியார் நலனுக்காகத்தானா? என்று திமுக உறுப்பினர் என்.ஆர். இளங்கோ கேள்வி எழுப்புகிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 7