கமல் ஹாசன்

 1. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  பிரதமரை சந்தித்த தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ.க்கள்.

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை, தமிழ்நாடு பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். தி.மு.க அரசின் செயல்பாடுகள், கமல்ஹாசனின் அரசியல், பா.ஜ.க செய்ய வேண்டிய பணிகள் எனப் பல விஷயங்களை பிரதமர் விவாதித்ததாக கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 2. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  சூர்யா - கமல்

  தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ்களில் மாற்றங்கள் செய்யவும், தேவைப்பட்டால் அந்த சான்றிதழை ரத்து செய்யவும் மத்திய அரசுக்கு இதன் மூலம் அதிகாரம் கிடைக்கும்.

  மேலும் படிக்க
  next
 3. Maiam official

  மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தலைமைப் பண்பு மிக்கவர்கள் என்று புதிய நிர்வாகிகள் பற்றி கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. மநீம புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

  கமல்

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மட்டுமல்லாது அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்ற இருப்பதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

  இத்துடன் புதிய நிர்வாகிகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  அந்தப் பட்டியல் பின்வருமாறு.

  1. பழ.கருப்பையா - அரசியல் ஆலோசகர்

  2. பொன்ராஜ் வெள்ளைச்சாமி - அரசியல் ஆலோசகர்

  3. ஏ.ஜி.மவுரியா - துணைத் தலைவர் - கட்டமைப்பு

  4. தங்கவேலு - துணைத் தலைவர் - களப்பணி மற்றும் செயல்படுத்துதல்

  5. செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு

  6. சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர் - கட்டமைப்பு

  7. சரத்பாபு - மாநிலச் செயலாளர் - தலைமை நிலையம்

  8. ஸ்ரீப்ரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர்

  9. ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்

  புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள கட்சி அறிக்கையில், கட்சி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் உறுப்பினர்களுடன் நடந்த இணைய வழி உரையாடலில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

 5. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  தனி அறையில் நடக்கும் தொடர் விசாரணைகள் - கமலின் எதிர்காலத் திட்டம்தான் என்ன?

  தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தை மறுசீரமைக்கும் பணிகளில் கமல் ஈடுபட்டு வருகிறார். `தனி அறையில் நிர்வாகிகளுடன் நேருக்கு நேர் அவர் விவாதித்து வருகிறார். விரைவில் மக்கள் நீதி மய்யம் 2.0 என்ற வடிவத்தைப் பார்க்கலாம்' என்கின்றனர் ம.நீ.ம நிர்வாகிகள். என்ன நடக்கிறது?

  மேலும் படிக்க
  next
 6. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  வசுந்தரா

  நானும் ஒரு இசைக்கலைஞன் என்ற முறையில் அந்த படத்தின் பாடல்களில் எனக்கு சில பிரச்னைகள் இருந்தன. அவை 'ஆபா' (Abba) என்ற ஸ்கேண்டிநேவியன் இசைக்குழு பாடல்களின் காப்பி. எனக்கு அது பிடிக்கவில்லை. ஏனென்றால், நம்முடைய சொந்த இசையை உருவாக்குவதற்கு நம்மிடம் எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், அதை நாம் முழுமையாக பயன்படுத்துவதில்லை.

  மேலும் படிக்க
  next
 7. குழந்தை திருமணங்களை தடுக்க உடனடி நடவடிக்கை: கமல்ஹாசன்

  KAMAL HASSAN

  “சத்தமில்லாமல் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை," என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உறுதியான தடுப்பு நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்த ஆண்டும் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்," என்று கூறியுள்ளார்.

  "தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்வோம்," என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  View more on twitter
 8. கமல்ஹாசன்

  தம் தவறுகளை மறைக்க சிலர் எழுப்பும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. காலம் பதில் சொல்லும். கட்சியின் உள் கட்டமைப்பை தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்கு ஏற்ப மாற்ற ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 9. மக்கள் நீதி மய்யக் கட்சியிலிருந்து மேலும் ஒருவர் விலகல்

  தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

  விலகிய பலர் கமல் ஹாசன் மீதும் தேர்தல் சமயத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் மீதும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில் மக்கள் நீதி மய்யக் கட்சியின்பொதுச்செயலாளராகபதவி வகித்துவந்த சி.கே.குமரவேல் இன்று கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

  அதுகுறித்து கமல் ஹாசனுக்கு அவர் அனுப்பியுள்ள கடித்தத்தில், “நமது தோல்விக்கான காரணங்களையும் காரணிகளையும் இதற்கு முன் விலகிய பொறுப்பாளர்கள் உங்கள் முன்னும், ஊடகங்கள் முன்னும் வைத்துவிட்டார்கள், அவர்கள் முன் வைத்த காரணங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பது நீங்களும் அறிவீர்கள் புதிதாக நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை,” என குறிப்பிட்டிருந்தார்

 10. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  கமல்

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த முருகானந்தம் பதவி விலகியிருக்கிறார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை, மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். ` என்னுடன் பயணிக்க முடியாதவர்களுக்கு இரண்டு கதவுகளும் திறந்தே இருக்கும்' என்கிறார் கமல். என்ன நடக்கிறது ம.நீ.மவில்?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 11