அமித் ஷா

 1. நிலக்கரி பற்றாக்குறை: அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

  அமித் ஷா
  Image caption: அமித் ஷா, இந்திய உள்துறை அமைச்சர்

  இந்தியாவில் நிலவி வரும் நிலக்கரி பற்றாக்குறை விவகாரம் குறித்து எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி மற்றும் உயரதிகாரிகளுடன் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.

  இந்திய மின்சார ஆணைய தரவுகளின்படி, நாட்டில் தற்போதைய நிலையில் அனல் மின் நிலையங்கள் கையிருப்பில் உள்ள நிலக்கரியின் கையிருப்புக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தட்டுப்பாடு நிலவுகிறது.

  கடந்த 5ஆம் தேதி, நாட்டில் உள்ள 135 மின்னுற்பத்திக்காக நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களில் 106 நிலையங்களில் அடுத்த 6-7 நாட்கள் வரையிலான நிலக்கரியே இருந்துள்ளது.

  பொருளாதாரத்தை மீள்கட்டியெழுப்பப்படுவதால் ஏற்பட்டுள்ள மின் நுகர்வு அதிகரிப்பு, செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட கன மழையால் தடை பட்ட நிலக்கரி தோண்டும் பணிகள், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையேற்றத்தால் குறைந்த உற்பத்தி, மழைக்காலத்துக்கு முன்பாகவே போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைக்கத் தவறியது போன்றவை இதற்கு காரணம் என்று நிலக்கரித்துறை தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் நிலக்கரி கையிருப்பு நிலையை ஆராய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு உள்ளது. அந்தக்குழுவே இன்று டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியிருக்கிறது.

 2. செப்டம்பர் 14ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

  இத்துடன் இந்த பக்கத்தில் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 3. Video content

  Video caption: இந்தி மொழியை கற்க அறிவுறுத்தும் அமித் ஷா - இதில் பின்னணி ஏதும் உள்ளதா?

  இந்தி திவஸ் நிகழ்வையொட்டி பேசிய அமித் ஷா, இந்தி மொழியை சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்தி மோதியே பேசுவதாக சுட்டிக்காட்டினார்.

 4. பதவி விலகிய முதல்வர் விஜய் ரூபானியுடன், புதிதாக முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பூபேந்திர பட்டேல் (இடது).

  குஜராத் அரசியலில் திடீர் திருப்பமாக முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 5. விஜய் ரூபானி

  கோவிட் 19 சிக்கலை மோசமாக கையாண்டதற்காக விஜய் ரூபானி பதவி விலகியிருந்தால் அவரை மக்கள் பாராட்டியிருப்பார்கள் என்று குஜராத்தை சேர்ந்த பிரபல தலித் தலைவரும், சுயேச்சை எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. பாஜக கே.டி. ராகவன்

  இந்த வீடியோக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினால், மதன் ரவிச்சந்திரன் என்ற பிராண்ட் நிற்கும். ஆனால், 15 மிகப் பெரிய எதிரிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஏனென்றால், இவற்றை வெளியிடுவதன் மூலம் ஒரு மனிதனின் அரசியல் வாழ்வையே அறுத்து எறிகிறோம் என அண்ணாமலை தன்னிடம் கூறியதாக இன்று வெளியிட்டுள்ள புதிய காணொளியில் மதன் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 7. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  தமிழ்நாடு பா.ஜ.க

  தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கிவிட்டது. அதைப் பற்றி எடுத்துக் கூறுவதற்காகத்தான் இருவரும் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் நடக்கும் ரெய்டுகளை நிறுத்துமாறு பா.ஜ.கவிடம் கூறினாலும் அதனை தி.மு.க அரசு கேட்குமா எனத் தெரியவில்லை என்கிறது இந்த விவகாரத்தில் இருவரின் செயல்பாடுகளையும் நன்கறிந்த வட்டாரம்.

  மேலும் படிக்க
  next
 8. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கப்பட்டது

  இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின்கீழ் இயங்கி வந்த கூட்டுறவுத் துறையை தனியாகப் பிரித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. தனி அமைச்சகத்தின் முயற்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. ஆப்கானிஸ்தான் படை வீரர்

  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபன்கள் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி கந்தஹாரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து பல தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 10. 'அமித் ஷா வருகிறார்; கதவுகளை மூடி வையுங்கள்' - கடிதம் எழுதிய குஜராத் காவல்துறை

  இந்தியாவிலேயே உயரிய பாதுகாப்பான 'Z+' பாதுகாப்பு பெற்றுள்ளவர்களில் ஒருவர் அமித் ஷா. இதை யாருக்கு வழங்குவது என்பதையும் அவருக்கு கீழே உள்ள உள்துறை அமைச்சகமே முடிவு செய்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 12