காஷ்மிர் மோதல்

 1. ரியாஸ் மஸ்ரூர்

  பிபிசி, ஸ்ரீநகரில் இருந்து

  தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்கான் லால் பிந்த்ரூவின் குடும்பத்தினர்

  சமீபத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் உள்பட ஏழு பேர் காஷ்மீரில் கொல்லப்பட்ட நிகழ்வுகள் 1990கள் காலகட்டம் போன்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. ஜம்மு & காஷ்மீரில் தொடர் கொலைகளால் பதற்றம்

  ஜம்மு காஷ்மீர் பகுதியில் பள்ளிக்குள் சென்று இரு ஆசிரியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

  ஜம்மு காஷ்மீரில் உள்ள ஈத்கர் பகுதியில் வியாழனன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

  முன்னதாக புதன்கிழமையன்று சாலையோர வியாபாரி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  ஸ்ரீநகரில் உள்ள லால் பசாரில், மதினா செளக் என்ற இடத்தில் விரேந்தர் பஸ்வான் என்ற அந்த வியாபாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். விரேந்தர் பஸ்வான் பிகாரை சேர்ந்தவர்.

  ஜம்மு & காஷ்மீரில் 5 நாட்களில் 7 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் – தொடரும் பதற்றம்

  View more on twitter
 3. காஷ்மீர் பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியரின் குடும்பத்தினர்

  ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய சுடப்பட்ட ஆசிரியர்களின் உறவினர்களில் ஒருவர், தங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 4. இந்தியா பாகிஸ்தான்

  இந்தியாவுக்காக சினேகா தூபே அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருவதைப் போலவே, பாகிஸ்தானில் அந்நாட்டுக்காக ஐ.நா அரங்கில் சைமா சலீம் பேசிய காணொளியும் வைரலாகி வருகிறது. அவர் கண் பார்வை குறைபாடுடையவர் என்பதால் ப்ரெய்லி உதவியுடன் பதில் அளித்தார்.

  மேலும் படிக்க
  next
 5. ரஜ்னீஷ் குமார்.

  பிபிசி ஹிந்தி

  இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான OIC யில் செளதி அரேபியா ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் காஷ்மீர் விஷயத்தில் அதன் உறுப்பு நாடுகளிடமிருந்து பாகிஸ்தான் ஏமாற்றத்தையே சந்திக்கிறது.

  ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் உள்ளிட்ட அனைத்து முக்கிய மன்றங்களிலும் காஷ்மீர் பிரச்சினையை ஓஐசி உறுப்பு நாடுகள் எழுப்ப வேண்டும் என்று குரேஷி கேட்டுக் கொண்டார்.

  மேலும் படிக்க
  next
 6. செப்டம்பர் 14ஆம் தேதி நேரலை நிறைவடைகிறது

  பிபிசி நேயர்களுக்கு வணக்கம்,

  இத்துடன் இந்த பக்கத்தில் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம். இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 7. வந்துகொண்டிருக்கும் செய்தி"நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்" - மெஹ்பூபா முஃப்தி

  காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெஹ்பூபா முஃப்தி தாம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  காஷ்மீர் தற்போது இயல்புநிலையில் இல்லை என்று தன்னிடம் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

  "ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களின் உரிமைகளுக்காக இந்தியாவில் ஆளும் மத்திய அரசு கவலைப்படுகிறது. ஆனால், அதே அக்கறையை அது காஷ்மீரிகள் மீது வேண்டுமென்றே காட்ட மறுக்கிறது. காஷ்மீரில் இயல்புநிலை இல்லை என்று உள்ளூர் நிர்வாகத்தினர் என்னிடம் கூறுகின்றனர். அப்படியென்றால், மத்திய அரசு இயல்புநிலை இருப்பதாக போலியாக கூறி வருவது வெளிப்பட்டு விட்டது," என்று மெஹ்பூபா முஃப்தி கூறியுள்ளார்.

  View more on twitter
 8. கிலானி உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி

  சமீபத்தில் மரணமடைந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானியின் உடல் வியாழனன்று ஜம்மு - காஷ்மீர் காவல் துறையால் அடக்கம் செய்யப்பட ஒப்படைக்கப்படும் முன், அவரது உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

  இது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது என்று காவல்துறை தெரிவிக்கிறது.

  காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவரான சையது அலி ஷா கிலானி ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழன்று காலமானார். அவருக்கு வயது 92. நீண்டகாலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

  காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் எழுப்பி வந்தவர் கிலானி. கடந்த 11 ஆண்டுகளில் பெரும்பாலான காலத்தை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

  கிலானியின் வீட்டைச் சுற்றி இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

  கிலானி உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி
 9. ஜம்மு காஷ்மீர் நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் - இஸ்லாமிய நாடுகள் அமைப்பு, இந்தியா ஆட்சேபம்

  2019 ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் தொடர்பில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஆர்கனைசேஷன் ஆஃப் இஸ்லாமிக் கோ ஆபரேஷன் என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை இந்திய அரசு ரத்து செய்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

  இந்த அமைப்பின் பொதுச் செயலகம் வெளியிட்ட அந்த அறிக்கையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானங்களில் குறிப்பிட்டுள்ளபடி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச ரீதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி என்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இதை இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்திருக்கிறது. இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அந்த அமைப்புக்கு உரிமை இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

 10. ஆமீர் பீர்சாதா

  பிபிசி நியூஸ் - இந்தியா

  காஷ்மீர்

  பல ஆண்டுகளாக, இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீர் பகுதியில் பதற்றத்தைத் தூண்ட ஆயிரக்கணக்கான போராளிகளை எல்லை தாண்டி ஊடுருவச் செய்து வருவதாக பாகிஸ்தான் மீது தொடர்ந்து குற்றம் சாட்டப் படுகிறது. பாகிஸ்தானும் இதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4