சிபிஐ

 1. வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை: சிபிஐ

  Mehul Choksi

  இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,600 கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நீரவ் மோதியுடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்டுள்ள மெஹுல் சோக்ஸி டொமினிகா நாட்டில் பிடிபட்டதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி டொமினியா அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ தெரிவித்துள்ளது.

  ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள மெஹுல் சோக்ஸி, 2018ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் வசித்து வந்தார்.

  இந்த நிலையில், கியூபா செல்லும் திட்டத்திடன் அங்கிருந்து தப்பித்து டொமினிகா நாட்டுக்கு படகில் சென்றபோது இன்டர்போல் அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டார்.

  அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டொனினிகா அரசை மெஹுல் குடியுரிமை பெற்றுள்ள ஆன்டிகுவா நாட்டின் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இந்த செய்தியின் முழுமையான தகவலை அறிய இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

 2. மெகுல் சோக்சி

  ஆன்டிகுவாவில் தனக்கு எதிரான விசாரணை வளையத்தை சிபிஐ விசாரித்து வருவதை அறிந்து மெஹுல் சோக்ஸி, டொமினிகாவுக்கு நேற்று முன்தினம் இரவு தப்பிச் சென்ற போது இன்டர்போல் அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டுள்ளார். ஆன்டிகுவாவில் இருந்து படகு மூலமாக அவர் டொமினிகாவுக்கு தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. சுபோத் குமார் ஜெய்ஸ்வால்

  "சிபிஐயில் பணியாற்றுவோரின் தொழில்முறை சார்ந்த திறன்களை மேம்படுத்தி உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாற்ற பங்களிப்பை வழங்குவேன்."

  மேலும் படிக்க
  next
 4. சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

  சுபோத் குமார் ஜெய்ஷ்வால்

  மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சிபிஐயின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  இதற்கான அறிவிப்பை நேற்று (மே 25, செவ்வாய்க்கிழமை) மத்திய அரசு வெளியிட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  1985-ஆம் ஆண்டு மகாராஷ்டிர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ஜெய்ஸ்வால் தற்போது சிஐஎஸ்எஃப் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

  சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்ஸ்வால் 2 ஆண்டுகள் அப்பதவி வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 5. சிபிஐ இயக்குநர் நியமனம்: பிரதமர் தலைமையில் இன்று ஆலோசனை

  CBI INDIA

  இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐயின் இயக்குநராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான குழு இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறது.

  இந்த குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, மக்களவை எதிர்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  விதிகளின்படி 1984 முதல் 87ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் உள்ள உயரிதாரிகளில் இருந்து சிபிஐ இயக்குநர் பதவிக்கு தகுதி வாய்ந்தவரை இந்த குழுவே இறுதி செய்யும்.

  அசாம்-மேகாலயா பிரிவைச் சேர்ந்த 1984ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவரும் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநருமான ஒய்.சி. மோதி, குஜராத் மாநில பிரிவைச் சேர்ந்தவரும் எல்லை பாதுகாப்புப் படை தலைமை இயக்குநருமான ராகேஷ் அஸ்தானா, ஹரியாணா பிரிவைச் சேர்ந்தவரும் இந்திய, திபெத்திய எல்லை காவல் படை தலைமை இயக்குநருமான எஸ்.எஸ். தேஸ்வால், உத்தர பிரதேச காவல்துறை தலைமை இயக்குநரான எச்.சி. அவஸ்தி, கேரள காவல்துறை தலைமை இயக்குநரான லோக்நாத் பெஹரா, ரயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் அருண் குமார், மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தலைமை இயக்குநர் எஸ்.கே. ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரின் பெயர்கள் சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிசீலிக்கப்படும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

  பணி மூப்பு, நேர்மை, ஊழல் தடுப்பு வழக்குகளில் புலனாய்வுத்திறன், காவல் நிர்வாக அனுபவம் உள்ளிட்டவை, இந்த பதவிக்குரிய முக்கிய தகுதிகளாக கருதப்படுகின்றன.

  சிபிஐ இயக்குநராக தேர்வு செய்யப்படும் உயரதிகாரி, பதவியேற்கும் நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அப்பதவியை தொடருவார்.

 6. ரகோத்தமன்

  மத்திய புலனாய்வுத் துறையில் முப்பத்தி ஆறு ஆண்டு காலம் பணியாற்றிய ரகோத்தமன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலானாய்வுக் குழுவில், தலைமைப் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 7. சிங்கி ஷர்மா

  பிபிசி செய்தியாளர்

  இஷ்ரத் ஜஹான்

  இஷ்ரத் ஜஹானை சட்டவிரோதமாக கொலை செய்த குஜராத் காவல்துறை அதிகாரிகளை விடுவிப்பது, முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறும் செயல் என்று ஷமிமாவின் வழக்கறிஞர் பிருந்தா குரோவர் கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
 8. மோதி

  மாவட்ட நீதிமன்றத்தால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை நீரவ் மோதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருவேளை நீரவ் மோதி சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமானால், அதன் மீதான விசாரணை நடந்து தீர்ப்பு வர மேலும் சில மாதங்களாகலாம்.

  மேலும் படிக்க
  next
 9. அங்கிதா தாஸ்

  2012ஆம் ஆண்டில் குஜராத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு சமூக ஊடக தேர்தல் பரப்புரை தொடர்பாக அங்கி தாஸ் பயிற்சி கொடுத்ததாக வால் ஸ்ட்ரீட் கூறியிருந்தது. மோதியின் சமூக ஊடக பிரசாரங்களுக்கு ஆதரவான கருத்தை அவர் கொண்டிருந்ததாக ஊழியர்கள் பலரும் கூறியிருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 10. சாத்தான்குளம்

  தந்தை, மகன் இருவரின் உடைகள் கிழிந்த நிலையில், அவர்களை கடுமையாக தாக்கி காயம் ஏற்படுத்திய பிறகும், அதை மறைத்து போலீசார் மருத்துவச் சான்றிதழ் பெற்றுள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2