ஆர்கே நகர்

 1. கோவில்பட்டியில் டி.டி.வி. தினகரன் தோல்வி

  dinakaran

  கோவில்பட்டி தொகுதியில் களம் கண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தோல்வியடைந்தார்.

  அவரை எதிர்த்து தேர்தல் களம் கண்ட அதிமுக வேட்பாளர் கடம்பூர் ஜனார்தனன், 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

  கடம்பூர் ஜனார்தனனுக்கு 586 தபால் வாக்குகள் உட்பட 67,970 வாக்குகளும் டி.டி.வி. தினகரனுக்கு 424 தபால் வாக்குகள் உட்பட 55,729 வாக்குகளும் கிடைத்துள்ளன.

  இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம். கோமதிக்கு 99 தபால் வாக்குகள் உட்பட 9,114 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கே. கதிரவனுக்கு 39 தபால் வாக்குகள் உட்பட 3,628 வாக்குகளும் கிடைத்துள்ளன.

  வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா தேர்வுக்கு 18 தபால் வாக்குகள் உட்பட 1,106 வாக்குகள் கிடைத்துள்ளன.

 2. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  பணம்

  தமிழகத்தில் இதுவரையில் ரூ. 265 கோடி மதிப்புள்ள பணம், நகைகளை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. இதில் ரொக்கமாக மட்டும் ரூ. 115 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால் பண விநியோகம் கட்டுப்படுத்தப்படுமா?

  மேலும் படிக்க
  next
 3. எடப்பாடி பழனிசாமி

  மாநிலம் நிதி நெருக்கடியில் இருக்கும்போது இவ்வளவு செலவுபிடிக்கும் அறிவிப்புகளைச் செய்தால் எப்படி சமாளிக்க முடியுமென செய்தியாளர்கள்கேட்டபோது, இந்தியா முழுவதும் கடன்வாங்கித்தான் செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். யாரும் நிதியை வைத்துக்கொண்டு திட்டத்தை அறிவிப்பதில்லை என்றார் எடப்பாடி பழனிசாமி.

  மேலும் படிக்க
  next