பிஎன்பி ஊழல்

 1. எம்.ஏ. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  கோப்புப் படம்

  வேகமாக வளர்ந்து வரும் இன்டர்நெட் உலகில், அரசாங்கமே ரொக்கப் பரிவர்த்தனையை தவிருங்கள் - ஆன்லைன் பரிவர்த்தனையை செய்யுங்கள் என ஊக்குவிக்கிறது. ஆனால், இதைப் பயன்படுத்தியே மோசடிகளும் தடையின்றி தொடருவதுதான் வேதனை தரும் விஷயம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. நரேந்திர மோதி

  எதிர்காலத்தில் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கான நடைமுறையை இந்திய அரசு ஏற்கெனவே தொடங்கி விட்டது. அதன் முன்னோட்டமாகவே தற்போதைய இ-ருப்பி திட்டம் கருதப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 3. விஜய் மல்லையா திவாலானவர் என அறிவித்தது லண்டன் உயர் நீதிமன்றம்

  விஜய் மல்லையா
  Image caption: விஜய் மல்லையா

  இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான விஜய் மல்லையாவை "திவாலானவர்" என்று அறிவித்துள்ளது லண்டன் உயர் நீதிமன்றம்.

  இது தொடர்பாக அவர் கடன் பெற்றிருந்த வங்கிகள் குழுவுக்கு தலைமை தாங்கும் இந்திய ஸ்டேட் வங்கி 2018இல் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், "விஜய் மல்லையா திவாலனவர். அவரது சொத்துகளை ஜப்தி செய்யலாம்," என்று கூறியுள்ளது.

  இந்த தீர்ப்பு இந்திய வங்கிகள் குழுவுக்கு வெற்றியாக கருதப்பட்டாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான உரிமை விஜய் மல்லையாவுக்கு உள்ளது.

  முன்னதாக, விஜய் மல்லையாவுக்கு எதிராக எஸ்பிஐ தலைமையில் பரோடா வங்கி, கார்பரேஷன் வங்கி, ஃபெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜேஎம் ஃபைனான்ஷியல் அசெட் ரீகன்ஸ்டிரக்ஷன் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்கள் சேந்து ஒரு குழுவாக எஸ்பிஐ தலைமையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

  2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி முதல் கணக்கிட்டு, ஆண்டுக்கு 11.5 சதவீத வட்டியுடன் கூடிய கடன் தொகையை விஜய் மல்லையா செலுத்த வேண்டும் என்று அந்த வங்கிகள் கோரின.

  ஆனால், இந்தியாவில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த விஜய் மல்லையா, வட்டித் தொகையுடன் கூட்டு வட்டி விதிக்கப்படுவதை எதிர்த்தார். இந்த வகையில், விஜய் மல்லையா பிரிட்டன் பண மதிப்பில் 1 பில்லியன் பவுண்டுகள் வரை வங்கிகளுக்கு அவர் செலுத்த வேண்டும்.

  இந்த நிலையில் விஜய் மல்லையாவை திவாலானவர் என்று லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அந்த பணத்தை விஜய் மல்லையாவின் சொத்துகளை ஜப்தி செய்து ஈடு செய்ய இதுவரை நிலவி வந்த சட்ட தடங்கல்கள் நீங்கியுள்ளன.

  இருப்பினும், மேல்முறையீட்டிலும் இந்த வங்கிகள் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய வங்கிகளால் விஜய் மல்லையாவின் சொத்துகளை ஜப்தி செய்து விற்க முடியும்.

 4. ஆர்பிஐ

  நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததைவிட ஒரு சதவிகிதம் குறையும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

  Follow
  next
 5. விஷால் சுக்லா

  பிபிசி செய்தியாளர்

  மெஹுல் சோக்ஸி

  பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி வெளிவருவதற்கு முன்பே அவர் வெளிநாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தார். ஒரு லட்சம் டாலர்களை முதலீடு செய்வதன் மூலம் குடியுரிமை பெறக்கூடிய ஒரு நாட்டையும் அவர் தேர்வு செய்தார்.

  மேலும் படிக்க
  next
 6. வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை: சிபிஐ

  Mehul Choksi

  இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,600 கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நீரவ் மோதியுடன் சேர்த்து குற்றம்சாட்டப்பட்டுள்ள மெஹுல் சோக்ஸி டொமினிகா நாட்டில் பிடிபட்டதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி டொமினியா அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ தெரிவித்துள்ளது.

  ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள மெஹுல் சோக்ஸி, 2018ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் வசித்து வந்தார்.

  இந்த நிலையில், கியூபா செல்லும் திட்டத்திடன் அங்கிருந்து தப்பித்து டொமினிகா நாட்டுக்கு படகில் சென்றபோது இன்டர்போல் அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டார்.

  அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டொனினிகா அரசை மெஹுல் குடியுரிமை பெற்றுள்ள ஆன்டிகுவா நாட்டின் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இந்த செய்தியின் முழுமையான தகவலை அறிய இங்கே கிளிக் செய்து படிக்கவும்.

 7. மெகுல் சோக்சி

  ஆன்டிகுவாவில் தனக்கு எதிரான விசாரணை வளையத்தை சிபிஐ விசாரித்து வருவதை அறிந்து மெஹுல் சோக்ஸி, டொமினிகாவுக்கு நேற்று முன்தினம் இரவு தப்பிச் சென்ற போது இன்டர்போல் அதிகாரிகளிடம் அவர் பிடிபட்டுள்ளார். ஆன்டிகுவாவில் இருந்து படகு மூலமாக அவர் டொமினிகாவுக்கு தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 8. தேடப்படும் குற்றவாளி மெகுல் சோக்சியை காணவில்லை

  இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள வைர வியாபாரி மெகுல் சோக்சி ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டில் காணாமல் போயுள்ளதாக அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

  இவர் வைர வியாபாரி நீரவ் மோதியின் உறவினர் ஆவார். பஞ்சாப் நேஷனல் வங்கியை பல்லாயிரம் கோடி ரூபாய் ஏமாற்றியதில் அவருடன் சேர்ந்து மெகுல் சோக்சி சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று கூறி இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரகம் ஆகியவை அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன.

  அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றம் ஒன்று முன்னர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  mekul choksi
 9. அலோக் ஜோஷி

  பிபிசி இந்தி

  வங்கி வேலைநிறுத்தம்

  கடந்த சில ஆண்டுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் நிகழ்ந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த விதம், தனியார் வங்கிகளில் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்ற வாதத்தை பலவீனப்படுத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 10. மோதி

  மாவட்ட நீதிமன்றத்தால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை நீரவ் மோதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருவேளை நீரவ் மோதி சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமானால், அதன் மீதான விசாரணை நடந்து தீர்ப்பு வர மேலும் சில மாதங்களாகலாம்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2