தொலைக்காட்சி

 1. Video content

  Video caption: பிறந்த நாளுக்காக படகு சவாரி செய்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த திமிங்கலங்கள்

  அர்ஜென்டினாவில் படகு சவாரி செய்த பயணிக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் பயணம் செய்த படகை திமிங்கலங்களில் ஒன்று தொட்டுச் சென்றது. அவருக்கு என்ன நடந்தது?

 2. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  மணி ஹைஸ்ட்

  கடந்த நான்காவது சீஸனின் முதல் சில எபிசோடுகள் மிகச் சாதாரணமாக இருந்த நிலையில், இந்த சீஸனில் ஆரம்பத்திலிருந்தே அதகளம்தான். ஐந்து எபிசோடுகளும் ஜெட் வேகத்தில் பறக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 3. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  ஓடிடி தளம்

  தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்கள் வெளியாவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் முக்கிய முடிவுகள் எடுத்ததாக செய்திகள் வெளியானது. இது மீண்டும் திரையரங்க உரிமையாளர்கள் VS தயாரிப்பாளர்கள் என உரசலை ஏற்படுத்தி இருக்கிறதா?

  மேலும் படிக்க
  next
 4. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  பிக்பாஸ் சீசன் 5

  இந்த நிகழ்ச்சியில் திரையில் தோன்றுபவர்கள் முதல் திரைக்கு பின்னால் வேலை பார்ப்பவர்கள் வரை ஒவ்வொருவருமே தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நிகழ்ச்சிக்கு போட்டியாக வேறு சில புதிய தொடர்களும் நேயர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளதால், அந்த நேயர்களை தன்பக்கம் ஈர்க்குமா பிக்பாஸ் சீசன் 5 என்ற கேள்வி எழுந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. கிறிஸ் கான்ஸ்

  சிறந்த ஆல் ரவுண்டர் வீரராக கருதப்பட்ட கேர்ன்ஸ், இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளிலும், 215 ஒருநாள் போட்டிகளிலும், 1989 மற்றும் 2006 காலகட்டங்களில் நியூசிலாந்து அணிக்காக இரு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதன்பின் தொலைக்காட்சி வருணனையாளராக இருந்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. ச. ஆனந்தப்ரியா

  பிபிசி தமிழுக்காக

  மாஸ்டர் செஃப் தமிழ்

  'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாற, அதனை சமாளிக்கும் விதமாகவே சன் டிவி 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை தமிழில் கொண்டு வருகிறது என பேச்சுகள் அடிபடத் தொடங்கியது.

  மேலும் படிக்க
  next
 7. இந்திய கடல்சார் மீன் வள மசோதா: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

  பிரபுராவ் ஆனந்தன், இராமநாதபுரம்

  மீனவர்கள்

  இந்திய கடல்சார் மீன் வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதா தங்களுடைய நலன்களுக்கு எதிரானது என்று கூறி ராமேஸ்வரத்தில் இன்று அனைத்து விசைபடகுகளிலும் கறுப்புக் கொடி கட்டி மீனவர்கள் கடலில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  அந்த மசோதாவில் கடல் எல்லை வரையறை, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை, மீன்பிடிக்கச் செல்லும்போது அனுமதிச்சீட்டு பெறுவதற்கு கட்டணம், பிடித்து வரும் மீன்களுக்கு விலை நிர்ணயம் போன்ற அம்சங்கள் மீனவர்களை பாதிக்கக்கூடியவை ஆக உள்ளன என்று மீனவர்கள் கருதுகின்றனர்.

  இதையடுத்து, அந்த மசோதாவுக்கு எதிராக இன்று காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்பாட்டம் நடத்தி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

  இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், நாடாளுமன்றத்தில் மீன் வள மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்றும் மீனவர்கள் முழக்கமிட்டனர்.

  மீனவர்கள்
 8. சினிமா தொடர்பான திருத்தச் சட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு

  stalin
  Image caption: மு.க. ஸ்டாலின்

  இந்திய அரசின் சினிமாட்டோகிராஃப் திருத்தச் சட்டம் 2021க்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. திரைப்படச் சான்றிதழ் வாரியம், மாநில அரசுகளின் உரிமைகளை இந்தச் சட்டம் குறைப்பதோடு, கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் இருப்பதாக மத்திய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  இந்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாதிற்கு மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "இந்தச் சட்டம் திரைத்துறையினர் மத்தியில் மட்டுமல்லாது, கருத்துச் சுதந்திரத்தின் மீது அக்கறையுள்ள சமூகத்தினரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒரு துடிப்புமிக்க ஜனநாயகத்தில் கலை ரீதியான சிந்தனைக்கும் சுதந்திரத்திற்கும் இடமுண்டு. ஆனால், இருபதாண்டுகளுக்கு முன்னால் உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட மத்திய அரசின் மறு ஆய்வு செய்யும் அதிகாரத்தை இந்தச் சட்டம் மீண்டும் சேர்க்க முயல்கிறது.

  இந்திய சினிமாட்டோகிராஃப் சட்டத்தின் பிரிவின் ஐந்து - ஏவைப் பூர்த்தி செய்யும் அனைத்துப் படங்களுக்கும் மத்தியத் திரைப்படச் சான்றிதழ் வாரியம் சான்றிதழ் வழங்கி வருகிறது. தகுதியான காரணங்களோடு திரைப்படத்தை நிராகரிக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது. அதே சட்டத்தின்பிரிவு ஐந்து - பியின் படி, விதிமுறைகள் என்ற வடிவில் கூடுதலான கட்டுப்பாட்டு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கூடுதலான சட்டங்கள், விதிகளின் மூலம் 21ஆம் நூற்றாண்டிலும் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவது சரியாகாது.

  ஒரு திரைப்படத்திற்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம், அனுமதி அளித்துவிட்டால், அந்தத் திரைப்படத்தை திரையிட அனுமதிப்பது குறித்த அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது. ஏனென்றால் சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் கையில் உள்ள அதிகாரமாகும்.

  ஆனால், மத்திய அரசுமுன்மொழிந்திருக்கும் இந்தச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இருப்பதோடு, மாநில அரசு மற்றும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் அதிகாரங்களிலும் தலையிடுகிறது. அதற்கு முன்னோட்டத்தைப் போல திரைப்படச் சான்றிதழுக்கான மேல்முறையீட்டு வாரியமும் கலைக்கப்பட்டது.

  திரைப்பட சான்றிதழ் வாரியம் சான்றிதழ் அளித்த பிறகு, மறு ஆய்வு செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கே அளிப்பது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 (2)ல் குறிப்பிடப்பட்டுள்ள “reasonable restriction" என்ற பதத்தை தவறாகக் கையாளுவதாகும். திரைப்படத் துறையினர் கலைரீதியாக சிந்திப்பதைக் கட்டுப்படுத்தி, இப்படித்தான் திரைப்படம் எடுக்க வேண்டுமெனச் சொல்வது ஏற்க முடியாதது.

  இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையான லட்சியங்களுக்கே இது முரணானது. சிந்திக்கும் உரிமையைப் பறிப்பது நமது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும். எந்தக் கட்சி ஆட்சியில்இருந்தாலும் ஜனநாயகம் துடிப்புமிக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.

  இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு சில அம்சங்களைச் நடைமுறையில் செயல்படுத்துவதும் கடினம். குறிப்பாக, வயதுவாரியாக திரைப்படங்களுக்குச் சான்றிதழ் அளிப்பது. சில திருத்தங்கள் திரைப்படம் எடுப்பதேயே மிகுந்த சவாலான, ஆபத்தான காரியமாக மாற்றுகின்றன.

  மேலே சொன்ன கருத்துகளையும் திரைத்துறையினரின் உண்மையான கவலைகளையும் மனதில் கொண்டு இந்திய சினிமாட்டோகிராஃப் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்களைக் கைவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

  இந்திய சினிமாட்டோகிராஃப் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த ஜூன் 18ஆம் தேதி வெளியிட்டது. அப்போது முதல் திரைத் துறையினர் இந்தச் சட்டம் குறித்து தங்களது எதிர்ப்பையும் அச்சத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

 9. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  கைதி

  லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படத்தின் கதை தன்னுடையது என ராஜீவ் என்பவர் தொடுத்த வழக்கு தற்போது கோலிவுட்டில் பரபரப்பாகியுள்ளது. இந்த படம் தொடர்பான சர்ச்சை என்ன? அதற்கு தயாரிப்பு தரப்பின் விளக்கம் என்ன?

  மேலும் படிக்க
  next
 10. ஆ விஜயனாந்த்

  பிபிசி தமிழுக்காக

  பாடமெடுக்கும் ஆசிரியை

  சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாம் தளத்தில் கல்வித் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. சுமார் 50 ஊழியர்களுடன் தனியார் சேனல்களுக்கு இணையாக இங்கு படப்பிடிப்புத் தளம் இயங்கி வருகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 6