ட்விட்டர்

 1. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ட்விட்டர் செயல்படும்

  ஆப்கானிஸ்தான்

  ஆப்கானிஸ்தானில் ட்விட்டர் சமூக ஊடகம் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்தி வந்த ஃபேஸ்புக் பக்கங்கள், இடுகைகள் முடக்கப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் இன்று அறிவித்தது. அமெரிக்க சட்டப்படி தங்களுடைய நிறுவனம் செயல்படுவதால், அந்த நாட்டால் தீவிரவாதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள தாலிபன்கள் தொடர்பான இடுகைகள், பக்கங்களை முடக்குகிறோம் என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.

  இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தமது சமூக ஊடகம் இயங்கும் என்ற அறிவிப்பை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  விதி மீறல்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் . ஆப்கனில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. எனவே மக்கள் ட்விட்டர் மூலம் உதவிகளை கோரி வருகிறார்கள். அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் மக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 2. ராகுல் காந்தி, காங்கிரசார் டிவிட்டர் கணக்குகள் செயல்பாட்டுக்கு வந்தன

  View more on twitter

  முடக்கப்பட்டிருந்த ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரசார் டிவிட்டர் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.

  சமீபத்தில் டெல்லியில் பாலியல் ரீதியாக துன்புறுதப்பட்ட ஒரு சிறுமியின் குடும்பத்தை சந்தித்தார் ராகுல்காந்தி. அந்த சந்திப்பின் படத்தை ராகுல் காந்தி தன் ட்விட்டரில் கணக்கில் பகிர்ந்து இருந்தார்.

  பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காட்டக்கூடாது என்ற சட்டத்தின்கீழ் ராகுல் குறித்து ட்விட்டரில் புகார் செய்யப்பட்டது.

  இதையடுத்து அவரது கணக்கு ட்விட்டரால் முடக்கப்பட்டது.

  இதையடுத்து, ராகுல்காந்தி வெளியிட்ட ஒரு வீடியோ அறிக்கையில் ட்விட்டர் பக்கச்சார்புடைய தளம் என்றும், அது இந்தியாவின் அரசியல் நடைமுறையில் குறுக்கிடுகிறது என்றும் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.

  இந்நிலையில், ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு மீண்டும் திறந்துவிடப்பட்டு இருக்கிறது என ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

  இது ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் இருந்தும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரின் ட்விட்டர் கணக்குகளும் இன்று காலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.

 3. இந்தியாவின் அரசியலில் தலையிடுகிறது டிவிட்டர்:ராகுல் அறிக்கை

  ராகுல்காந்தி

  தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருப்பது தொடர்பாக ராகுல் காந்தி யூடியூபில் வெளியிட்ட வீடியோ அறிக்கை:

  என் கணக்கை முடக்கியதன் மூலம் டிவிட்டர் நமது அரசியல் நடைமுறையில் குறுக்கிடுகிறது. நம்முடைய அரசியலைத் தீர்மானிக்கும் வகையில் தனது வணிகத்தை நடத்துகிறது ஒரு நிறுவனம். ஓர் அரசியல்வாதியாக எனக்கு இது பிடிக்கவில்லை.

  இது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு மீதான தாக்குதல். இது ராகுல்காந்தி மீதான தாக்குதல் அல்ல. இது ராகுல்காந்தி வாயை மூடுவது அல்ல. 19-20 மில்லியன் பேர் என்னை பின் தொடர்கிறார்கள். ஒரு கருத்தைத் தெரிந்துகொள்வதற்கான அவர்கள் உரிமையை முடக்குகிறீர்கள். இது நியாயமற்றது மட்டுமல்ல, டிவிட்டர் நடுநிலையான தளம் என்ற கருத்தை மீறுவதும் ஆகும். முதலீட்டாளர்களுக்கும் இது அபாயகரமானது. ஏனெனில், அரசியல் போட்டியில் ஒரு பக்கச்சார்பான நிலை எடுப்பது டிவிட்டருக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

  நமது ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு நாம் அனுமதிக்கப்படவில்லை. ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. டிவிட்டரில் நாம் நினைப்பதை போடமுடியும் என்பதால் அதை ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று என்று நினைத்தேன். ஆனால், அப்படி இல்லை என்று தோன்றுகிறது.

  டிவிட்டர் ஒரு நடுநிலையான, புறவயமான தளம் அல்ல என்பது தற்போது வெளிப்படையாகத் தெரிகிறது. இது பாரபட்சமான தளம். குறிப்பிட்ட காலத்தில் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதைதான் டிவிட்டர் கவனத்தில் கொள்கிறது.

  இந்தியர்கள் என்ற முறையில் நாம் ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும்:இந்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாலேயேசில கம்பெனிகள் நமது அரசியலைத் தீர்மானிப்பதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? இதுதான் நடக்கப்போகிறதா அல்லது நமது அரசியலை நாமே தீர்மானிக்கப்போகிறோமா? அதுதான் இங்கே உண்மையான கேள்வி என்று தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி.

 4. ராகுல் காந்தி ட்விட்டர் பதிவை நீக்க அறிவுறுத்தல்

  டெல்லியில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட படத்தை நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  அந்தப் படத்தை பதிவிட்டது ஏன் என்று ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்புமாறும் அந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோரின் அடையாளங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருந்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  சிறுமியின் மரணம் குறித்த விரிவான செய்தி இங்கே.

  View more on twitter
 5. Video content

  Video caption: அமுல் நிறுவனத்தில் 1 லட்சம் முஸ்லிம்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா? - உண்மை என்ன?

  அமுல் நிறுவனத்தில் 1 லட்சம் முஸ்லிம்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா? - உண்மை என்ன?

 6. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  பீஸ்ட் அஜித்

  சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்புகள் கடந்த மாத இறுதியிலேயே சென்னையில் தொடங்கிய நிலையில், இந்த மாதத்திலிருந்து சினிமா படப்பிடிப்புகளும் ஆரம்பித்திருக்கின்றன. இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு, படப்பிடிப்பிற்கு பிந்தைய பணிகள் (Post Production) தொடங்கப்பட்டுள்ளன. என்னென்ன படங்கள், அவற்றில் என்ன அப்டேட்?

  மேலும் படிக்க
  next
 7. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: ட்விட்டர்

  TWITTER

  சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  ட்விட்டர் நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் சில பயனர்கள், குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்ய அந்நிறுவனம் அனுமதி அளித்துள்ளதாகக் கூறி இந்திய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் காவல்துறையில் புகார் தெரிவித்தது.

  இதன்பேரில் டெல்லி சைபர் கிரைம் காவல்துறை ட்விட்டர் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. போக்சோ சட்டத்திலும் ட்விட்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவை ஒருபோதும் ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது. அத்தகைய படங்கள் இருப்பதாக கூறப்படும் பக்கத்தில் உள்ள இடுகைகள் உடனடியாக நீக்கப்படும் என்று கூறியுள்ளது.

 8. குழந்தைகள் ஆபாச இடுகை விவகாரம்: ட்விட்டர் மீது டெல்லி சைபர் க்ரைம் பிரிவு வழக்கு

  twitter

  ட்விட்டர் சமூக வலைதளத்தில் குழந்தைகள் ஆபாச இடுகை தொடர்பான தகவலை அனுமதித்தது தொடர்பாக இந்திய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் மீது டெல்லி காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.

  ட்விட்டர் வலைதள பக்கத்தில் பாலியல் ரீதியாக குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் அத்தகைய இடுகைகளை தமது தளத்தில் அனுமதித்த ட்விட்டர் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) டெல்லி காவல்துறைக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியிருந்தது.

  இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறை சைபர் க்ரைம் பிரிவு துணை ஆணையாளர் அன்யேஷ் ராய் ஜூன் 29ஆம் தேதி ஆணையத்தின் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

  இந்த நிலையில், என்சிபிசிஆர் அளித்த புகாரின்பேரில், ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  View more on twitter
 9. மணிஷ் மகேஷ்வரி

  ட்விட்டர் இணையதளத்தின் 'ட்வீட் லைஃப்' என்ற பகுதியில் இந்த வரைபடம் இடம்பெற்றிருந்தது. எனினும், குறிப்பிட்ட பயனர் இதை சுட்டிக்காட்டி கருத்து பகிர்ந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலான பின்னர், இந்த வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 10. பிரசாந்தோ கே. ராய்

  தொழில்நுட்ப எழுத்தாளர்

  ட்விட்டர்

  ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் விதிகளுக்கு உடன்படாத நிறுவனங்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை ட்விட்டர் மூலமே சமூக ஊடகங்களுக்கு காண்பிக்க இந்திய அரசு முயல்வதாகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது என்று டிஜிட்டல் உரிமைகள் செயல்பாட்டாளர் நிகில் பஹாவா கூறுகிறார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9