மேற்கு ஆஃப்ரிக்கா

 1. பவானிபூர் இடைத்தேர்தல் - மம்தா பானர்ஜி முன்னிலை

  மம்தா பானர்ஜி
  Image caption: மம்தா பானர்ஜி

  மேற்குவங்க மாநிலம் பவானிபூர், ஜாங்கிபூர், சம்சேர்கன்ச் ஆகிய தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

  பவானிபூரில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜி தமது பாஜக போட்டியாளரை விட முன்னணியில் இருப்பதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைய தளத்தில் காலை 10.40 மணி அளவில் காணப்பட்ட தகவல்படி, மம்தா பானர்ஜி 5,333 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 2,956 வாக்குகளும், மூன்றாம் இடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஸ்ரீஜீவ் பிஸ்வாஸ் 132 வாக்குகளும் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு நடந்த மேற்கு வங்க மாநில சட்டமன்றப் பொது தேர்தலில் தமது முன்னாள் தளபதியும் பிறகு பாஜகவுக்கு தாவியவருமான சுவேந்து அதிகாரியை எதிர்த்து, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு மயிரிழையில் வெற்றியை தவறவிட்டார் மம்தா.

  ஆனால், மம்தாவின் கட்சி மாநிலத்தில் அபார வெற்றி பெற்றது. பாஜக படுதோல்வி அடைந்தது. அதனால், சட்டமன்ற உறுப்பினராகவே இல்லாமல் முதல்வரானார் அவர்.

  இந்நிலையில் முதல்வர் பதவியில் தொடர்வதற்கு அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆவது அவசியம் என்ற நிலையில், தாம் வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூரில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட்டார் மம்தா.

 2. பூஜா சாப்ரியா

  பிபிசி நியூஸ்

  பல தார திருமணம்

  தென்னாப்பிரிக்காவில் பாலின ஆர்வலர்கள் சமத்துவத்திற்காக பிரசாரம் செய்கிறார்கள். பெண்களை தேர்வு செய்ய அனுமதிக்க, பலதாரங்களை சட்டப்பூர்வமாக்குகிறார்கள், ஏனெனில் தற்போதைய அமைப்பு ஆண்களுக்கு மட்டுமே பலதார மணத்தை அனுமதிக்கிறது.

  மேலும் படிக்க
  next
 3. புர்கினா ஃபசோ கிராமத்தில் நடந்த தாக்குதலில் 132 பேர் பலி

  புர்கினா ஃபசோ கிராமத்தில் நடந்த தாக்குதலில் 132 பேர் பலி

  ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபசோவின் வட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 132க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

  சமீப காலத்தில் நடந்த மோசமான தாக்குதல் இது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பல வீடுகள் மற்றும் உள்ளூர் சந்தை எரிக்கப்பட்டது.

  இந்த வன்முறைக்கு எந்தக் குழுவும் பொறுப்பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சமீப காலமாக, குறிப்பாக எல்லைப் பகுதிகளில் இஸ்லாமிய குழுக்களின் தாக்குதல் அதிகமாகி வருகிறது.

  இந்த சம்பவம் தன்னை சீற்றமடைய செய்துள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 4. Nanu

  நாடெங்கும் சிஸியின் 9 குழந்தைகளைப் பற்றித்தான் இப்போது பேச்சு. அவர் கருவுற்றிருந்தபோதுகூட 7 குழந்தைகள்தான் பிறக்கப் போகின்றன என அனைவரும் நினைத்திருந்தார்கள்

  மேலும் படிக்க
  next
 5. ஹெலன் பிரிக்ஸ்

  சுற்றுச்சூழல் செய்தியாளர்

  காபி ஸ்டெனோஃபில்லா

  அராபிகா காபி போன்ற சுவையுள்ள, ஆனால் வெப்பமான சூழலில் வளரக்கூடிய மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வரும் அரிய வகை காட்டுச்செடிவகை காபியான ஸ்டெனோபில்லாவை நாம் விரைவில் சுவைக்க முடியும்

  மேலும் படிக்க
  next
 6. மொசாம்பீக்

  தனது தலை துண்டித்துக் கொல்லப்பட்டபோது, அவனுக்கு உதவ முடியாமல் அந்தக் கொலையைப் பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே முடிந்ததாக இந்த அமைப்பிடம் ஒரு தாய் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 7. பிபிசி ஆப்பிரிக்கா ஐ

  ``புதிய பேக்கேஜ் பிறந்துள்ளது, விலை 45 ஆயிரம்'' என்று குழந்தையை வாங்கக் கூடியவருக்கு அவ்மா செல்போனில் தகவல் அனுப்பினார். கென்யாவில் அதிர வைத்த குழந்தைகள் கடத்தலின் மறுபக்க கதையை பிபிசி ஆப்பிரிக்கா ஐ புலனாய்வு ஆராய்ந்தது.

  மேலும் படிக்க
  next
 8. யானைகள்

  மர்மமான முறையில் உயிரிழக்கும் யானைகளின் மரணத்திற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக அவற்றின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 9. ஆஃப்ரிக்க பலிகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்தால், இந்த பெருந்தொற்று நோயால் ஆஃப்ரிக்காவில் ஒரே ஆண்டில் சுமார் 1,90,000 பேர் உயிரிழக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் அடுத்த சில ஆண்டுகளிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  “நோய்த்தொற்று பரவல் வெளிப்படையாக உணரமுடியாத வகையில் இருக்கும்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆஃப்ரிக்க பிராந்திய தலைவர் மட்ஷிடிசோ மோட்டி கூறுகிறார்.

  கொரோனா வைரஸின் நிலையற்ற மற்றும் மெதுவான பரவல் முறை ஆஃப்ரிக்காவை மற்ற பிராந்தியங்களிலிருந்து வேறுபடுத்துகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்கள் கூறுகின்றனர்.

  ஆஃப்ரிக்காவிலேயே அதிக மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளான நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, ஐவோரி கோஸ்ட் உள்ளிட்டவை முடக்க நிலையை தளர்த்த தொடங்கியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

 10. பிரதமர், அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு

  மேற்கு ஆஃப்ரிக்க நாடான கினி-பிசாவுவின் பிரதமர் நூனோ கோம்ஸ் நபியாம் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  அவருக்கு மட்டுமல்லாது அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூவருக்கும் கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

  தலைநகர் பிசாவுவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

  செவ்வாயன்று அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்று அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  சுமார் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ள அந்த சிறிய நாட்டில் கோவிட் 19 தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  மேற்கு ஆஃப்ரிக்க நாடான கினி-பிசாவுவின் பிரதமர் நூனோ கோம்ஸ்
  Image caption: மேற்கு ஆஃப்ரிக்க நாடான கினி-பிசாவுவின் பிரதமர் நூனோ கோம்ஸ்
பக்கம் 1 இல் 2