இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

 1. லக்கிம்பூர் சம்பவம் அரசை எதிர்க்கும் யாரும் கொல்லப்படுவார்கள் என்ற செய்தியை விடுக்கிறது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்

  ஏ.எம். சுதாகர்

  சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
  Image caption: சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

  லக்கிம்பூர் விவசாயிகள் போராட்ட சம்பவம் மூலம் போராடுபவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவார்கள் என்பதையே மத்தியில் ஆளும் பாஜக அரசின் நடவடிக்கை உணர்த்துகிறது என்று கூறியிருக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.

  சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. இலங்கை அரசு இந்திய அரசுடன் மிகுந்த நட்புடன் பல உதவிகளை செய்து வருகிறது. ஆனாலும் பாதிக்கப்படும் தமிழக மீனவர்கள் குறித்து மத்திய அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை," என்றார்.

  "லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக பிரதமர் குறைபட்சம் அனுதாபம்கூட தெரிவிக்கவில்லை. போராடுபவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படுவார்கள் என்பதையே பிரதமரின் நடவடிக்கை உணர்த்துகிறது," என்று முத்தரசன் கூறினார்.

  "பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை கட்டுக்கடங்காமல் இறக்கை கட்டி பறக்கிறது. எரிபொருட்கள் விலை உயர்வால் தற்போது அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு விதிக்கின்ற வரியே விலை உயர்வுக்கு அடிப்படைக் காரணம். மக்கள் பிரச்னைகள் பற்றி கவலை கொள்ளாமல், தங்களை தற்காத்துக் கொள்வதாக எதிர்கட்சி தலைவரின் நடவடிக்கைகள் உள்ளது. விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகின்ற 30ஆம் தேதி சைக்கிள் பேரணி நடத்தப்படும்," என்று முத்தரசன் தெரிவித்தார்.

 2. வாத்சல்ய ராய்

  பிபிசி செய்தியாளர்

  கன்னையா குமார் - ஜிக்னேஷ் மேவானி

  "உங்கள் எதிரியைத் தேர்ந்தெடுங்கள், நண்பர்கள் தானாகவே உருவாகிவிடுவார்கள். நாங்கள் நாட்டின் மிகப் ஜனநாயகக் கட்சியில் சேர விரும்புகிறோம், ஏனென்றால் காங்கிரஸ் காப்பாற்றப்படாவிட்டால் தேசம் காப்பாற்றப்படாது." என்று கூறியிருக்கிறார் கன்னையா குமார்

  மேலும் படிக்க
  next
 3. கேரளா

  கேரளா முதல்வராக பதவியேற்றுள்ள பினராயி விஜயனின் அமைச்சரவையில் முந்தைய ஆட்சியில் அமைச்சர்களாக இடம்பெற்ற ஒருவர் கூட அமைச்சராகவில்லை. பினராயி நீங்கலாக அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் புது முகங்கள்.

  Catch up
  next
 4. கேரள முதல்வராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன் - அமைச்சரவையில் 20 புது முகங்கள்

  kerala

  கேரள மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பினராயி விஜயன் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.

  76 வயதாகும் பினராயி விஜயன் அமைச்சரவையில் கடந்த முறை அவரது ஆட்சியில் இடம்பெற்ற யாரும் இடம்பெறவில்லை. இம்முறை அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் புது முகங்கள்.

  திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் இதையொட்டி நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் என்சிபியின் ஏ.கே. சசீந்திரன், இந்திய தேசிய லீக்கின் அகமது தேவர்கோவில், ஆர். பிந்து, பி.ஏ. முகம்மது ரியாஸ் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

  கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற கேரள மாநில சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 140 இடங்களில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வென்றுள்ளது.

 5. நரேந்திர மோதி

  ஆலோசனைகளுக்கு பதிலளிப்பது என்பது உங்கள் அலுவலகத்திற்கோ, அரசுக்கோ பழக்கமில்லாதது என்றாலும், இந்தியா மற்றும் அதன் மக்கள் மீது அக்கறையுடன் நாங்கள் முன்வைக்கும் இந்த ஆலோசனைகளுக்கு பதிலளிப்பது சிறப்பானதாக இருக்கும்" என்று பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எதிர்கட்சி தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 6. தேர்தல் விழிப்புணர்வு

  திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊக்க தொகை அளிக்கப்படும் என இரு கட்சிகளும் தெரிவித்திருந்தது பெரிதும் பேசப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 7. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  எடப்பாடி ஸ்டாலின் கமல்

  `இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் வழங்குவது தொடர்பான எங்களின் அறிவிப்பை ஸ்டாலின் காப்பியடித்துவிட்டார்' என்கிறார் கமல். `எங்கள் தேர்தல் அறிக்கை கசிந்துவிட்டது' என்கிறார் எடப்பாடி பழனிசாமி. உண்மையில் என்ன நடக்கிறது?

  மேலும் படிக்க
  next
 8. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  மு.க. ஸ்டாலின்

  `வேட்பாளர்களை அறிவிக்கவிருக்கிறோம். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது' என தி.மு.க தரப்பில் உறுதி காட்டியதால், வேறு வழியின்றி இறுதியாக மார்க்சிஸ்ட் கட்சியும் 6 இடங்களைப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டுவிட்டது.

  மேலும் படிக்க
  next
 9. தினகரன்

  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், பாஜகவும் அமமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வந்தால் ஏற்பீர்களா என கேட்டதற்கு, அந்த கட்சிகள் வரும் என எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் தொடர்ந்து கேட்பதால் அப்படி பதிலளித்தேன். அவர்களாக கூட்டணி பேச வந்தால் பேசுவோம் என்று பதிலளித்தார் டி.டி.வி. தினகரன்.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: தா.பாண்டியன் காலமானார்: கடுமையான புலிகள் எதிர்ப்பாளராக இருந்தவர் மாறியது ஏன்?

  கடந்த 24ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பக்கம் 1 இல் 2