கோயம்புத்தூர்

 1. karthick deena

  கார்த்திக் கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணியின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இந்த ஒரு ஓட்டை போட்டது யார் என்பது இதுவரை தெரியவில்லை.

  மேலும் படிக்க
  next
 2. ஒரு ஓட்டு வாங்கிய பா.ஜ.க. உறுப்பினருக்கு குடும்பத்தினர் வாக்களிக்காதது ஏன்?

  கோயம்புத்தூர் மாவட்டம் குருடம்பாளையத்தில் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ.கவைச் சேர்ந்த வேட்பாளர் ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்றுள்ளார். அவருக்கு அவருடைய குடும்பத்தினரே வாக்களிக்காதது ஏன் சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

  இந்த வார்டுக்கான தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில், குறிப்பாக ட்விட்டர் தளத்தில் இது குறித்து பெரிய அளவில் கேலிசெய்யப்பட்டு வருகிறது. இதனை கேலி செய்யு #ஒத்த_ஓட்டு_பாஜக, #Single_vote_BJP என இரண்டு ஹாஷ்டாகுகள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

  தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டு வாங்கிய பா.ஜ.க. உறுப்பினருக்கு குடும்பத்தினர் வாக்களிக்காதது ஏன்?

  #ஒத்த_ஓட்டு_பாஜக, #Single_vote_BJP
 3. `காளிகாம்பாள் கோயிலை அண்ணாமலை தேர்வு செய்தது ஏன்?

  ஆ. விஜயானந்த்

  பாஜக ஆர்ப்பாட்டம்
  கோயில் ஆர்ப்பாட்டம்

  தமிழ்நாட்டில் அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், `போராடுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர்,' என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

  கொரோனா இரண்டாம் அலை காரணமாக, தமிழ்நாட்டில் இறை வழிபாடு நடத்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோயில்கள், மசூதிகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் வார இறுதி நாள்களில் வழிபாடு நடத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

  அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி, பா.ஜ.க சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த தமிழ்நாடு அரசு, `மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் அனுமதி அளிக்கப்படுகிறது' என தெரிவித்தது.

  இந்நிலையில், அனைத்து நாள்களிலும் கோவில்களைத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  குறிப்பாக, 12 திருக்கோவில்களின் முன்பாக இந்தப் போராட்டத்தை பா.ஜ.கவினர் நடத்தினர். சென்னை, பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள்கோயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

  இது தவிர, திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில், ராமநாதபுரம், ராமநாத சுவாமி ஆலயம், கோவை கோனியம்மன் ஆலயம், தில்லை நடராஜர் ஆலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் எனப் பல பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, ``தமிழ்நாட்டில் திரையரங்குகளைத் திறந்த நிலையில், கோயில்களைத் திறக்க அனுமதி மறுக்கப்படுவது ஏன்? திரையரங்குகளில் மட்டும் கொரோனா பரவாதா? எங்களின் பூஜை அறைகளுக்குள் உங்களின் (தி.மு.க) சிந்தாந்தத்தைக்கொண்டு வர வேண்டாம். கொரோனாவை காரணம் காட்டி தடைவிதிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் வேறு வழியில்லாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்" என்றார்.

  தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ``எப்போதுமே நாங்கள் நல்ல விஷயங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். குறிப்பாக, பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு முடிவு செய்தபோது வரவேற்றோம். அதேநேரம், திரையரங்குகளைத் திறக்க முடிவு செய்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம். எங்களின் எதிர்ப்பையும்மீறி திரையரங்குகளைத் திறந்தார்கள்" என்றார். கோயிலை பூட்டுவதற்கு கொரோனா ஒரு காரணம் இல்லை.

  ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் தன்னிச்சையாக செயல்படுவோம் என்று கூறிய தி.மு.க, தற்போது மத்திய அரசின் வழிகாட்டலின்படி கோயில்களை மூடுவதாக தெரிவித்துள்ள கருத்தில் உண்மையில்லை. கடவுள் இல்லை என்பதுதான் தி.மு.கவின் சித்தாந்தம். ஆகவேதான், கோயில்களுக்குத் தடை போடுகிறார்கள்.நாங்கள் தமிழக அரசுக்கு பத்து நாள்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் கோயில்களைத் திறப்பது தொடர்பாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.

  பா.ஜ.கவின் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ``போராடுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை அவர்களாகவே உருவாக்கிக் கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரையில்மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான், கொரோனா நோய்த் தொற்று தளர்வுகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை என்னவென்றால், `அதிகமாகக் கூட்டம் கூடுகிற நிலையைத் தவிர்க்க வேண்டும், திருவிழாக்களை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசுமுடிவு செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளது.

  சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கோவில்களுக்கு பக்தர்கள் அதிகமாக வரக் கூடிய சூழல் உள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நான்கு நாள்களில் திருக்கோயில்கள் முழுமையாக திறந்துள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் தெய்வத்துக்கு வேண்டிய அனைத்து பூஜைகளும் எப்போதும்போல நடந்து வருகின்றன. கொரோனா அபாயம் நம்மைவிட்டு நீங்கியவுடன் திருக்கோயில்களை முதல் பணியாக முதலமைச்சர் திறந்து வைப்பார்" என்றார்.

  தொடர்ந்து பேசிய சேகர்பாபு, `` பா.ஜ.க நடத்தும் போராட்டத்தை உற்று நோக்கினால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் எதாவது ஒரு நாளை போராட்டத்துக்கு உகந்த நாளாக அவர்கள் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு காளிகாம்பாள் கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள்வந்து செல்வார்கள். இவர்களின் இன்றைய போராட்டத்தால் அந்தக் கோயிலில் வழிபாடு என்பது 3 நாள்களாகக் குறைந்துவிட்டது.

  போராடுகிறவர்கள், கண்மூடித்தனமாக காரணங்களை உருவாக்கிக் கொண்டு போராடுகிறார்களே தவிர, கொரோனா நோய்த் தொற்றில் விலைமதிக்க முடியாத உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். எம்மதமும் சம்மதமே என்பதுதான் முதல்வரின் கோட்பாடு.கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்.

  கோயில் ஆர்ப்பாட்டம்
 4. கோவை விமானப்படை பெண் அதிகாரியின் பாலியல் வன்கொடுமை புகார்: சரண் அடைந்த அதிகாரிக்கு நீதிமன்ற காவல்

  விமானப்படை பயிற்சிக்கல்லூரி
  Image caption: விமானப்படை பயிற்சிக்கல்லூரி, கோயம்புத்தூர்

  தமது பாலியல் புகார் மீது விமானப்படை சரியான நடவடிக்கை எடுக்காததால் சிவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கட்டாயம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  29 வயதாகும் அந்த பெண் அதிகாரி கோவை விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்று வருகிறார். கோவை ரெட்ஃபீல்ட்ஸ் விமானப்படை கல்லூரியில் கடந்த 10ஆம் தேதி பயிற்சிக்காக சென்ற நிலையில், தன்னை ஃபிளைட் லெப்டிணன்ட் பதவியில்உள்ள அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்த பெண் கூறியிருக்கிறார்.

  இந்த மையத்தில் கடந்த மாதம்தான் விமானப்படையைச் சேர்ந்த 30 அதிகாரிகளுக்கு பயிற்சி தொடங்கியது. அந்த பெண் அளித்த புகாரின்படி, விளையாட்டில் ஈடுபட்டபோது காயம் அடைந்த தான், மாத்திரையை உட்கொண்டு விட்டு தூங்கி விட்டதாகவும் கண் விழித்து பார்த்தபோது தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

  இந்த புகாரின்பேரில் கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆரம்பநிலை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கைது செய்யப்பட்ட அதிகாரி, உடுமலைப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  புகார்தாரரான பெண் அதிகாரியை அதே விமானப்படை தளத்தில் பணியாற்றும் ஃபிளைட் லெப்டிணன்ட் பதவி வகிக்கும் ஆண் அதிகாரி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.

  சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அந்த அதிகாரி, தனக்கு எதிராக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியதைத் தொடர்ந்து, மாவட்ட நீதிபதி முன்பாக சரண் அடைந்தார்.

  அப்போது விமானப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விவகாரங்களில் விசாரணை நடத்த காவல் துறைக்கு வரம்பு இல்லை என்று குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

  இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், விமானப்படை நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை என்பதாலேயே காவல்துறையின் உதவியை நாடியதாக கோவை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் அவகாசம் கோரப்பட்டது.

  இதையடுத்து சரண் அடைந்த ஆண் அதிகாரியை உடுமலைப்பேட்டை சிறையில் நீதிமன்ற காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 5. Video content

  Video caption: மை ஸ்கூல் டைரி செயலியை பயன்படுத்தும் கோவை மசக்காளிபாளையம் அரசுப் பள்ளி

  கோவை மசக்காளிபாளையம் அரசு பள்ளி ஒன்றில், மை ஸ்கூல் டைரி என்கிற செயலி மூலம் இணைய வழி கற்றல் தொடங்கி பல பள்ளி நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்டிருக்கின்றன.

 6. கோவை பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா - பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை

  மு. ஹரிஹரன்

  கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அந்த பள்ளிக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா கண்டறியப்பட்ட மாணவர்கள் மூன்று பேர் சிகிச்சைக்காக ஈ எஸ் ஜ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்ட அன்று 33 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

 7. Video content

  Video caption: விளை நில பகுதிகள் பாலைவனமாக மாற காரணமாகும் தடாகம் செங்கல் சூளைகள்

  ஒரு காலத்தில் விவசாயம் சார்ந்த நிலமாக தடாகம் இருந்தது. கரும்பு, சோளம், வாழை, தென்னை, தானிய வகை என பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு பொன் விளைந்த பூமியாக இப்பகுதி இருந்தது.

 8. பள்ளி குழந்தை

  ஒருவரையொருவர் தொட்டுப் பேசக்கூடாது, கட்டிப்பிடிக்கக் கூடாது, இடைவேளை நேரத்தில் மாணவர்கள் குழுவாக நிற்கக் கூடாது போன்ற கடும் நிபந்தனைகளால் தங்களுடைய மகிழ்ச்சியை அடக்கிக் கொண்டு மாணவர்கள் வகுப்புகளில் பங்கெடுத்தனர்.

  மேலும் படிக்க
  next
 9. மு ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  பேபி தடாகம் கிராமவாசி

  நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமாக மண் எடுப்பதும், செங்கல் சூளைகள் இயங்குவதும் தொடர்ந்து வருகிறது.

  மேலும் படிக்க
  next
 10. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பணம் கைப்பற்றப்படவில்லை - எஸ்.பி.வேலுமணி

  எஸ்.பி.வேலுமணி

  தனக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையின்போது 13 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாக வெளிவந்த செய்தியும், தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக கூறப்படுவதும் பொய்யான தகவல்கள் என தெரிவித்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைவர்களில் ஒருவருமான எஸ்.பி.வேலுமணி.

  சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த வேலுமணி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.

  "திமுக அரசால் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு போடப்பட்டு, எனக்கு சம்பந்தமில்லாத இடங்களில் கூட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், கோவை மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என்னை சகோதரனாக பாவித்து தமிழகம் முழுவதும் எனக்கு ஆதரவாக இருந்த கழகத் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

  50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சித் திட்டங்களை பெற்றுத்தந்ததன் காரணமாக கோவை மாவட்ட மக்கள் இந்த மிகப் பெரிய அங்கீகாரத்தை எங்களுக்கு கொடுத்தனர். அந்த அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை நடைபெற்றது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.சோதனையின்போது 13 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. அப்படி எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக வந்த தகவலும் தவறான தகவல். நான் அனைத்து மதங்களையும் மதிப்பவன். கடவுள் நம்பிக்கை உடையவன். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நீதிபதிகளை நம்புகிறேன். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அதிக அளவிலான கிராம சாலைகள் அமைத்துள்ளோம், ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம், 148 விருதுகள் பெற்று தந்துள்ளேன். இதுபோன்ற சாதனைகளை ஆட்சியில் இருந்தபோதும் பத்திரிக்கைகள் பெரிதாக வெளியிடவில்லை. எந்த சூழலிலும் நாங்கள் கோவை மாவட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்போம். அம்மா மறைந்த பின்பு ஆட்சியை பாதுகாத்ததில் நான் முக்கியமானவன். இதன் காரணமாகவே என் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது' என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 இல் 14