ஊழல்

 1. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது கூட்டுறவு தங்க நகைக் கடனில் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

  "தேர்தல் நேரத்தில் கொங்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் மாலை 5 மணிக்கு வேலைநேரம் முடிந்தாலும் இரவு 8 மணிக்கெல்லாம் கடன் கொடுத்துள்ளனர்."

  மேலும் படிக்க
  next
 2. பெர்டில் ஃபால்க்

  பிபிசிக்காக

  1942 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி ஃபிரோஸ் காந்தி மற்றும் இந்திர காந்தி திருமணம்

  லக்னோவில் இருந்த தங்கள் இல்லத்திலிருந்து தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, தனது தந்தையின் வீடான ஆனந்த பவனத்துக்கு இந்திரா குடிபுகும் வரை நன்றாகவே இருந்தது.

  மேலும் படிக்க
  next
 3. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையம் (கோப்புப்படம்)

  இங்குள்ள நிலக்கரிக் கிடங்கில் இருப்பைச் சரிபார்த்தபோது, பதிவேட்டில் உள்ளதற்கும் இருப்பில் உள்ள நிலக்கரிக்கும் இடையில் 2,38,000 டன் வித்தியாசம் இருந்ததாக செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். இதன் மதிப்பு 85 கோடி ரூபாய் இருக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 4. தொடர்ந்து வாய்தா: ராஜேந்திர பாலாஜி மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

  ராஜேந்திர பாலாஜி
  Image caption: ராஜேந்திரபாலாஜி, தமிழக முன்னாள் அமைச்சர்

  தன் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து ஒத்திவைக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்து வருவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது 7 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

  அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

  இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் சத்தியநாராயணன் - ஹேமலதா அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். சத்தியநாராயணன் வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் நீதிபதி ஹேமலதா, காலம் கடந்து வழக்குப் பதிவுசெய்வதால் பயனிருக்காது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

  இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அதன்படி அந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.

  அதற்கு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கண்டனம் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் பிழைகள் கொண்ட மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து மனுதாரர் வாய்தா கேட்டுவருவதாகவும் கூறினார்.

  இதையடுத்து ராஜேந்திர பாலாஜி தரப்பு மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இனி இந்த வழக்கில் வாய்தா கேட்கக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் வழக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறி வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 5. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  கே.சி. வீரமணி

  கடந்த பத்து ஆண்டு காலத்தில் அவரது வருமானம் மூலம் சேமித்தது என்பது அதிகபட்சமாக 7 கோடிதான். கடந்த பத்து ஆண்டுகளில் அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.65 கோடி ரூபாய் ஆகும் என்கிறது அறப்போர் இயக்கத்தின் புகார் மனு.

  மேலும் படிக்க
  next
 6. திருச்செந்தூரில் எஸ்.பி. வேலுமணி: திடீர் வருகை பற்றி உளவுத்துறை விசாரணை

  வேலுமணி
  Image caption: எஸ்.பி. வேலுமணி

  முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ரகசியமாக திருச்செந்தூர் வர காரணம் என்ன என்பது குறித்து தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

  அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி க்கு சொந்தமான வீடுநிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் என சுமார் 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இன்றும் பல இடங்களில் சோதனை தொடருகிறது.

  இந்த நிலையில், அவர் இன்று திடீரென திருச்செந்தூர் வந்ததாக தகவல் வெளியானது.

  இது குறித்து விசாரித்தபோது, சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து வேலுமணி, காரில் திருச்செந்தூர் நோக்கி சென்றதாக கூறப்பட்டது.

  ஆனால் இன்று திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அவர் அங்கு செல்லவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

  வேலுமணி எங்கு சென்றார் என்பதை கண்டறிய முடியாத நிலையில், மீண்டும் பிற்பகல் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வேலுமணி வந்தார்.

  தேடி வந்த நிலையில் மதியம் சென்னை செல்லும் விமானத்தில் அவர் பயணிக்க டிக்கெட் எடுக்கப்பட்டு இருப்பதை அறிந்த செய்தியாளர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

  எதிர்பார்த்தது போல சென்னை செல்லும் விமானத்தில் பயணிக்க கார் மூலமாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு எஸ்.பி வேலுமணி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை தவிர்த்து விட்டு விமான நிலையம் உள்ளே செல்ல முயற்சி செய்தார்.

  செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் ஒருசில வார்த்தைகளை மட்டும் கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். அப்போது அவர் பேசுகையில் நேற்று கோவிலுக்கு வருவதாக இருந்தேன் இந்த சம்பவம் காரணமாக வர முடியவில்லை தலைவர்கள் அறிக்கை அளித்து இருக்கின்றனர்.

  இரு தினங்களில் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அனுமதியோடு விரைவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பேன் என கூறி சென்றார்.

  முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் திடீரென எஸ்பி வேலுமணி தூத்துக்குடி மாவட்டதிற்கு வர காரணம் என்ன?, திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தில் ரகசியமாக யாரையும் சந்தித்தாரா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையை திசை திருப்ப வந்தாரா என்ற பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

  இது குறித்து பல்வேறு இடங்களில் தூத்துக்குடி உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 7. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  எஸ்.பி. வேலுமணி

  ஊழல் முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ள எஸ்.பி. வேலுமணி எப்போது கைது செய்யப்படுவார், சமீபத்திய ரெய்டு நடவடிக்கையைத் தொடர்ந்து என்ன நடக்கும்? இவைதான் அதிமுக வட்டாரத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள். இந்த விவகாரத்தில் அதிமுக மேலிடம் என்ன செய்கிறது?

  மேலும் படிக்க
  next
 8. தமிழக முதல்வருடன் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி சந்திப்பு

  போராட்டம்
  Image caption: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு முன்பாக குவிந்துள்ள அதிமுகவினர்.

  தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக இயக்குநர் கந்தசாமி சந்தித்துப் பேசியுள்ளார்.

  எஸ்.பி. வேலுமணி வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனைக்கு அதிமுக தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னாள் அமைச்சர்களை அரசு பழிவாங்கும் எண்ணத்துடன் நடத்தக்கூடாது என்றும் அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்காமல் மக்கள் நல பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

  இதற்கிடையே, எஸ்.பி. வேலுமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 9. அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

  கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

  அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். போக்குவரத்து துறையில் முறைகேடு மற்றும் ஊழல் செய்ததாக இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.

  இவர் அமைச்சராக இருந்தபோது ஜிபிஎஸ் கருவிகளைக் கொள்முதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கே ஏலம் வழங்கப்படுவதாக அப்போது புகார் எழுந்தது.

  விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.

  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் இவர் தோல்வியுற்றார்.

  M R Vijayabaskar
 10. A person holds a sign reading "Bolsonaro out" during a protest calling for the impeachment of Brazil's President Jair Bolsonaro in Rio de Janeiro, Brazil, on 3 July 2021

  கடந்த மாதம் கோவிட்-19 காரணமாக பிரேசிலில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்தது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாக பிரேசில் உள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5