ஆப்ரிக்கா

 1. Video content

  Video caption: 50C வெப்பநிலை: பருவநிலை மாற்றத்துக்கு இரையாகும் மொரிடேனியா மக்கள்

  ஆப்பிரிக்க நாடான மொரிடேனியாவில் 50 டிகிரிக்கும் அதிகமாக நிலவும் வெப்பத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 2. உணவு பட்டினி

  2021ஆம் ஆண்டின் பட்டினிப் பட்டியலின்படி இந்தியா 101வது இடத்தைப் பிடித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் 92வது இடத்திலும் சீனா 5வது இடத்திலும் நேபாளம் 76வது இடத்திலும் இலங்கை 65வது இடத்திலும் பர்மா 71வது இடத்திலும் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 3. சரோஜ் பத்திரனா

  பிபிசி

  Food prices

  இந்த ஆண்டின் உலக உணவு தினம்,பஞ்சம் குறித்த ஐநாவின் எச்சரிக்கை மற்றும் உலகமெங்கும் உணவு விலைகளில் பெரும் உயர்வு பற்றிய அச்சங்களுக்கு மத்தியில் கொண்டாடப்படுகிறது. ஆனால் உயரும் உணவு விலைகளின் உண்மையான தாக்கம் என்ன, மக்களை ’உணவு வறுமையிலிருந்து’ மீட்க என்ன செய்ய முடியும்?

  மேலும் படிக்க
  next
 4. சூப்பர் மேன்

  சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் அதிக பன்முகத் தன்மையை கொண்டுவர டிசி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 5. டீக்ரே போராளிகள் மீது எத்தியோப்பிய ராணுவம் கடும் தாக்குதல்

  எத்தியோப்பியா

  தனிநாடு நாடு கேட்டுப் போராடி வரும் வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

  எறிகணைகள், டாங்குகள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக போராளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

  எனினும் பிராந்தியத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டீக்ரே போராளி குழுவைச் சேர்ந்த மூத்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  தாக்குதல் குறித்து எத்தியோப்பிய அரசு எதையும் உறுதி செய்யவில்லை. தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் அங்கு என்ன நடக்கிறது என்பதை உறுதி செய்யவும் இயலவில்லை.

  கடந்த வாரத்தில் அரசுப் படைகளின் தாக்குதல் தொடங்கியதாகவும் இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி(டி.பி.எல்.எஃப்) அமைப்பின் மூத்த உறுப்பினர் கெட்டாசூவ் ரீடா தெரிவித்தார்.

  11 மாதங்களாக நீடித்துவரும் இந்த நெருக்கடியால் சுமார் 4 லட்சம் பேர் பஞ்சம் போன்ற சூழலில் வாழ்ந்து வருவதாக கடந்த ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

  இதுவரையிலான சண்டையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு வெளியேறிச் சென்றுவிட்டனர்.

  பின்னணி என்ன?

  1994-ஆம் ஆண்டு எத்தியோப்பியா இனவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் டீக்ரே.

  2018ல் அபிய் அகமது பிரதமர் ஆகும் முன்புவரை டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கு எத்தியோப்பியாவின் அரசியலிலும், ராணுவத்திலும் பெரிய ஆதிக்கம் இருந்தது.

  அபிய் அகமது பிரதமரானவுடன், எரித்ரியாவுடன் நடந்து வந்த நீண்ட கால சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தார். நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

  ஆனால் மத்திய அரசின் அதிகாரத்தை அவர் பெருக்குவதாகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் டீக்ரேவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.

  கடந்த ஆண்டு, ஆளும் கூட்டணியில் இடம் பற்றிருந்த பல்வேறு இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை இணைத்து ஒரே தேசியக் கட்சியை அபிய் அகமது அமைத்தார். ஆனால், இந்தக் கட்சியில் இணைய டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி மறுத்துவிட்டது.

  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டீக்ரேவில் பிராந்தியத் தேர்தல் நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய அரசு விதித்திருந்த நாடு தழுவிய தடையை மீறி இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்று அறிவித்தார் பிரதமர் அபிய் அகமது.

  அவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று டீக்ரே நிர்வாகம் கருதியது.

  டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி 2020 நவம்பர் 4ம் தேதி ஒரு ராணுவ முகாமை தாக்கிவிட்டதாகவும், அந்த அமைப்பு ஒரு அளவை மீறிப் போய்விட்டதாகவும் கூறி அதன் மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினார் அபிய் அகமது.

  போர் முடிந்தவிட்டதாக அபிய் அகமது அறிவித்தாலும் சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

 6. டகாசியின் கடைசி தினங்களில் ரேஞ்சர் பவுமாவுடன்,

  "நான் அவளை எனது குழந்தையை போல நேசித்தேன். அவளின் துறுதுறுப்பு சுபாவம், எப்போதெல்லாம் நான் அவளுடன் பேசினேனோ அப்போதெல்லாம் என் முகத்தில் புன்னகையை வர வைத்தது." என்று பவுமா தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 7. ஜேம்ஸ் கல்லஹர்

  சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்

  மலேரியா

  பல ஆயிரம் ஆண்டுகளாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக இருக்கும் மலேரியாவுக்கு முதல் முறையாக தடுப்பூசி போடப்பட இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 8. ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசி போட அனுமதி

  ஒரு நூற்றாண்டு ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

  ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது. நூறு ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும்.

  RTS, S என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது. ​​

  கானா, கென்யா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் முன்னோட்டத் நோய்த்தடுப்புத் திட்டங்களின் வெற்றிக்குப் பிறகு, இப்போது மலேரியா அதிகமாகப் பரவும் சஹாராவுக்கு கீழே இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளிலும் தடுப்பூசி போட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. “இது ஒரு வரலாற்றுத் தருணம்” என்று உலக சுகாதார நிறுவனத்தின் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

  Historic go-ahead for malaria vaccine to protect African children
 9. ஜோனாதன் அமோஸ்

  அறிவியல் செய்தியாளர்

  அங்கிலோசர்.

  உடம்பு முழுவதும் கொம்பு முளைத்த பயங்கரமான தோற்றம் கொண்ட அங்கிலோசர் என்ற விலங்கின் ஒரு முள் எலும்பு புதைபடிவம் ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. கினி அதிபராக பதவியேற்றார் ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ அதிகாரி

  மமடி.
  Image caption: புதிய அதிபர் மமடி.

  மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கினி நாட்டின் முன்னாள் அதிபர் ஆல்ஃபா காண்டேவுக்கு எதிராக ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ கர்னல் மமடி டோம்பொயா, இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார்.

  41 வயதான மமடி, தற்போது அதிபராக பொறுப்பேற்றுள்ளதால், ஆப்பிரிக்காவின் இரண்டாவது இளம் தலைவராக அறியப்படுகிறார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற கினி ஆட்சிக் கவிழ்ப்பை சர்வதேச அரங்கில் பலரும் பரவலாக கண்டித்தனர்.

  மேற்கு ஆப்பிரிக்காவின் இரண்டு பன்னாட்டு அமைப்புகளான எகொவாஸ், ஆப்பிரிக்க ஒன்றியம் இரண்டுமே கினி நாட்டின் உறுப்புரிமையை இடைநீக்கம் செய்தன.

  மேலும் எகோவாஸ் அமைப்பு மமடிக்கு எதிராக தடைகளை விதித்தது. புதிய அரசமைப்பு சட்டத்தை எழுதுவது, ஊழலை சமாளிப்பது , தேர்தல் முறையை மாற்றுவது, நம்பத்தகுந்த, வெளிப்படையான தேர்தலை நடைமுறைபடுத்துவது போன்ற பணிகள் மூலம் நாட்டை மறுகட்டுமானம் செய்வதே தன் நோக்கம் என புதிய அதிபர் கூறியதாக ஏ.எஃப்.பி முகமை குறிப்பிட்டுள்ளது.

பக்கம் 1 இல் 13