குற்றம்

 1. கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி. எஸ். ரமேஷ்

  உயிரிழந்த தொழிலாளி திருடி மாட்டிக்கொண்ட பின்னர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக ரமேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. பேஸ்புக்கில் பெண் என நினைத்து பழகியவர் ஆண் என்று தெரிந்ததும் கொலை செய்த இளைஞர் கைது

  கைது
  Image caption: காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள காஞ்சிபுரம் முருகன்

  பேஸ்புக்கில் பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்டு பழகியவர் ஆண் என்று தெரிந்ததால் அவரை கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து. மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

  மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் இருந்த கண்ணாணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

  அதில் இறந்தவர் விளாத்திகுளம் அருகே உள்ள மேலஈரால் பகுதியை சேர்ந்த முருகன் (28) என்பதும், அவரை கொலை செய்தது காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியைச் சேர்ந்த் முருகன் (24) என்பதும் தெரியவந்தது.

  முருகன் கொலை குறித்து கைது செய்யப்பட்ட முருகனிடம் போலீசார் நடத்திய விசரணையில், இறந்து போன முருகன் அமுதா என்ற பெண் பெயரில் முகநூல் கணக்கு ஒன்று உருவாக்கி வைத்துள்ளார்.

  அந்த முகநூல் வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் முருகன் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகனிடம் பெண் என்று நினைத்து பேஸ்புக் வழியாக பழகி வந்துள்ளார்.

  பின்னர் இருவரும் செல்போன் நம்பர் பரிமாறிக் கொண்டுள்ளார்.; காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகனிடம் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் செல்போனில் பெண் குரலில் பேசி வந்துள்ளார்.

  இருவரும் காதலர் தினத்தன்று சந்திக்க திட்டமிட்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் எட்டையாபுரம் வந்துள்ளார்.

  எட்டயபுரத்தில் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தான் பேசிய பழகி வந்த நபர் பெண்ணல்ல ஆண் என்பது காஞ்சிபுரம் முருகனுக்கு தெரிய வந்தது.

  உடனே முருகன் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்புவதாக கூறி கிளம்பியபோது, அவருடன் சமரசம் பேசி தன்னுடன் அழைத்துச் சென்ற ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

  இந்த நிலையில் விளாத்திகுளத்தை சேர்ந்த முருகன் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகனை மிரட்டி மீண்டும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தி அழைத்துள்ளார்.

  ஆனால் முருகன் மறுத்துவிடவே இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வீடியோவை உனது குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக முருகனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரம் அடைந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் எப்படியாவது விளாத்திகுளத்தை சேர்ந்த முருகனை கொலை செய்துவிட்டு அவனது செல்போனில் உள்ள ஆபாச வீடியோவை அழித்து விட வேண்டும் என திட்டமிட்டு குளிர் பானத்தில் விஷத்தை ஊற்றி வைத்துள்ளார். இருவரும் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சுடுகாட்டு பகுதிக்கு சென்று மதுபானம் அருந்தியுள்ளனர்.

  அப்போது விஷம் கலந்த குளிர்பானத்தை காஞ்சிபுரம் முருகன் விளாத்திகுளம் முருகனுக்கு கொடுத்துள்ளார்.அதை குடித்த முருகன் மயக்கத்தில் இருந்துள்ளார். அப்போது காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் அருகில் இருந்த கல்லை முருகனின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். கொலை செய்த இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் தனது மணி பர்ஸ்சை தவற விட்டு சென்றுள்ளார்.

  முருகன் தனது வீட்டிற்கு சென்ற போது தன்னுடைய மணி பர்ஸ்சை தவறவிட்டு வந்ததை அறிந்து, அதை எடுப்பதற்காக மீண்டும் மறுநாள் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சென்றபோது அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 3. வெட்டிக் கொல்லப்பட்ட காந்திமதி

  என்கவுன்டர் செய்யப்பட்ட கிருஷ்ணனின் மனைவி காந்திமதி கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு அவர் வீட்டுக்கு அருகேயுள்ள பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் அறியப்படாத நான்கு பேர், காந்திமதியை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களை வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

  மேலும் படிக்க
  next
 4. தில் நவாஸ் பாஷா

  பிபிசி இந்தி, ஹாத்ரஸிலிருந்து

  ஹாத்ரஸ் பாலியல் வல்லுறவு, கொலை நடந்து ஓராண்டு - 'வீட்டுச் சிறையில்' இறந்த பெண்ணின் குடும்பம்

  குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடகங்கள் முன்னிலையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் ஒரு நாள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவோம் என்று நம்புகிறோம் என்றும் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 5. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்ற சிறுவர்கள்: என்ன நடந்தது?

  அதே தெருவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் சிறுவர்கள் இருவரும் தீனதயாளனை அழைத்து சென்றதை பார்த்துள்ளார். பின்னர் அந்த சிறுவர்களிடம் போலீசார் விசாரித்து போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

  மேலும் படிக்க
  next
 6. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  தலித் படுகொலைகள்

  தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 300 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எவிடென்ஸ் அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்தக் கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,' என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

  மேலும் படிக்க
  next
 7. ஏ.எம். சுதாகர்

  பிபிசி தமிழுக்காக

  சேலம்

  பெரியப்பாவுடன் என்னை தாத்தா, பாட்டி ஒப்பிட்டுப் பேசினர். அதை பொறுக்க முடியாத இருவருக்கும் தீ வைத்தேன் என்று 16 வயது பேரன் காவல்துறையிடம் கூறியபோது, அதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 8. விவசாயி தாக்கப்பட்ட விவகாரம் - வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் கைது செய்து விடுவிப்பு

  கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயி கோபால்சாமி தாக்கப்பட்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  கடந்த 6ம் தேதி நில ஆவணங்கள் தொடர்பாக விவசாயி கோபால்சாமி ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகம் சென்ற போது , கிராம நிர்வாக அலுவலருக்கும் கோபால்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அங்கிருந்த கிராம உதவியாளர் முத்துச்சாமி குறுக்கிட்டதால், அவரை சாதியைக் குறிப்பிட்டு திட்டியதோடு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதனையடுத்து, காவல்துறையினர் கோபால்சாமி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில்விவசாயி கோபால்சாமியை உதவியாளர் முத்துசாமி தாக்கும் வீடியோ வெளியாகி வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

  அதில் உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் உதவியாளர் முத்துச்சாமி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தனர்.மேலும் விவசாயி கோபால்சாமி கொடுத்த புகாரின் பேரில் கிராம உதவியாளர் முத்துச்சாமி மீதும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மீதும் அன்னூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், இருவரையும் பிணையில் விடுவித்துள்ளனர்.

 9. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்குத் தடை இல்லை - உயர் நீதிமன்றம்

  கொடநாடு எஸ்டேட்.

  கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் கூடுதலாக விசாரணை நடத்தத் தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓய்வில்லமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் கூடுதல் விசாரணை நடத்தத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, அந்த வழக்கில் சாட்சிகளில் ஒருவரான அனுபவ் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

  இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் இதில் விசாரணை நடத்துவது உள் நோக்கமுடையது என அவர் கூறியிருந்தார்.

  இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமாரால் விசாரிக்கப்பட்டுவந்தது. இந்த வழக்கில், ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கில் விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவது அரசியல் உள்நோக்கமுடையது. ஆகவேகூடுதல் விசாரணை நடத்தக்கூடாது என வாதிட்டனர்.

  இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் கூடுதல் விசாரணை அவசியம் என அரசுத் தரப்பில் வாதிட்டனர்.

  இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கின் எந்தக் கட்டத்திலும் கூடுதல் விசாரணை நடத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது எனத் தீர்ப்பளித்தனர். மேலும், வழக்குத் தொடர்ந்திருப்பவர் இந்த வழக்கில் வாதியோ, பிரதிவாதியோ அல்ல; வெறும் சாட்சி மட்டுமே என்று கூறி ரவி தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தனர்.

  முன்னதாக, இந்த வழக்கை விசாரித்து வந்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கி வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 10. கொடநாடு கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 2க்கு ஒத்திவைப்பு

  கொடநாடு எஸ்டேட்

  நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்த கொடநாடு கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  கொடநாடு வழக்கில் புதிதாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென கடந்த 13ஆம் தேதி நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்தது. அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

  இதையடுத்து சயான் உள்ளிட்டவர்களிடம் காவல்துறை மீண்டும் விசாரணை நடத்திவந்தது.அ.தி.மு.கவைச் சேர்ந்த ரவி என்பவர், தான் இந்த வழக்குத் தொடர்பாக தெரிவிக்க வேண்டிய அனைத்தையும்தான் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் தன்னை மீண்டும் விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்றும் சொல்லிவந்தார். அவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

  இந்நிலையில்தான் அந்த வழக்கின் விசாரணை இன்று நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் துவங்கியது. முக்கியக் குற்றவாளியாகச் சொல்லப்பட்ட சயான் காலை ஒன்பதே முக்கால் மணிக்கே நீதிமன்றத்திற்கு வந்தார். சுமார் பத்து மணியளவில் விசாரணை துவங்கியது.

  மற்றொரு குற்றவாளியான வாளையார் மனோஜ் ஆஜராகவில்லை. சுமார் 20 நிமிடங்கள் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. அந்தத் தருணத்தில் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனந்தகிருஷ்ணன், பால நந்தகுமார் உள்ளிட்டோர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், ரவியை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.

  இதையடுத்து ரவி தரப்பு வழக்கறிஞர்களுக்கும் அரசுத் தரப்பு, சயான் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி தெரிவித்தார்.

  மேலும், இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், கோத்தகிரி மின்சாரத் துறை துணைப் பொறியாளர் ஆகியோர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பக்கம் 1 இல் 14