சிறை

 1. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  போலீஸ் தாக்குதல் மரணம்

  காவல் நிலைய மரணங்கள் நடக்கும்போது குற்றமிழைத்தவர்களை தண்டிப்பது மட்டும் போதுமானதல்ல; இழப்பீடும் வழங்குவதுதான் சரியானதாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் முடிவுக்கு வந்தது. இந்த நிலாபடி வழக்கிற்குப் பிறகுதான் இழப்பீடு கேட்பதென்பது சட்ட ரீதியான உரிமையாக மாற்றப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 2. சிறை கம்பி

  வெலிகடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் வலுக்கட்டாயமாக பிரவேசித்து, கைதிகளை அச்சுறுத்தியதாக லொஹான் ரத்வத்த மீது குற்றஞ்சுமத்தப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 3. லொஹான் ரத்வத்த

  அநுராதபுரம் சிறைச்சாலையில் தனது சகாக்களுடன் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதியை முழந்தாளிடச் செய்து, அவரது தலையில் துப்பாக்கி வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

  மேலும் படிக்க
  next
 4. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீன கைதிகளில் நால்வர் பிடிபட்டனர்

  இஸ்ரேல் சிறை ஒன்றில் இருந்து இந்த வார தொடக்கத்தில் தப்பிய ஆறு பாலத்தீனர்களில் நான்கு பேர் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

  அவர்களில் இருவர் சனிக்கிழமை அதிகாலை கார் நிறுத்தம் ஒன்றில் பதுங்கி இருந்த போது பிடிக்கப்பட்டனர் என்றும் மற்ற இருவர் வெள்ளிக்கிழமை அன்று நாசரேத் நகரின் அருகே பிடிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது இஸ்ரேல் காவல்துறை.

  மேற்குக் கரையில் உள்ள நகரான ஜெனின் எனும் நகரிலுள் அல்-அக்சா தியாகிகள் படையின் முன்னாள் தளபதி சக்காரியா ஜூபெய்தியும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார். மீதமுள்ள மூவர் 'இஸ்லாமிய ஜிகாத்' எனும் அமைப்பினர் ஆவர்.

  கடந்த திங்களன்று இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள கில்போ சிறைச்சாலையில் இருந்து ஆறு பேர் தப்பிய பின் அவர்களுக்கான தேடுதல் வேட்டை தொடங்கியது.

  வயல் வெளி அருகே தப்பியோடிய கைதிகள் வெளியே வந்த வழி.
  Image caption: வயல் வெளி அருகே தப்பியோடிய கைதிகள் வெளியே வந்த வழி.
 5. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீனர்கள். சித்தரிக்கும் படம்.

  தப்பிய சிறைக்கைதிகள் ஆறு பேரும் திங்களன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணி அளவில் சிறையிலிருந்து தப்பிச் செல்வதை அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் காட்டுகின்றன.

  மேலும் படிக்க
  next
 6. Vietnam: Man gets five years in jail for spreading Covid

  லீ வான் த்ரி எனும் அந்த இளைஞர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி உள்ளார் என்று நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது. அந்த எட்டுப் பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

  மேலும் படிக்க
  next
 7. இந்தோனீசியாவின் ஜகார்த்தா சிறையில் தீ - 41 பேர் பலி

  இந்தோனீசியா

  இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியில் உள்ள டாங்கரெங் சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக குறைந்தபட்சம் 41 பேர் பலியாகியுள்ளனர்.

  இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலையில் நடந்துள்ளது. அப்போது பெரும்பாலான கைதிகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

  தீ ஏற்பட்ட சி பிளாக் பகுதியில் 122 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த சிறை அறைகள், 40 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது என்றும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைதானவர்கள் அவற்றில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

  இந்த சம்பவத்தில் சிக்கிய பன்னிரண்டுக்கும் அதிகமானோர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  தீ ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரித்து வருவதாக சிறைத்துறை செய்தித்தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

 8. இஸ்ரேலிய சிறையில் இருந்து தப்பிய 6 பாலத்தீனர்களுக்கு உதவிய துருப்பிடித்த ஸ்பூன்கள்

  இஸ்ரேல்
  Image caption: கில்போ சிறைச்சாலை

  இஸ்ரேலில் உள்ள சிறை ஒன்றில் இருந்து சுரங்கம் தோண்டி ஆறு பாலத்தீனர்கள் இரவோடு இரவாக தப்பியுள்ளனர். தப்பியோடிய ஆறு சிறைக் கைதிகளையும் இஸ்ரேலிய அதிகாரிகள் தற்பொழுது தேடிக் கொண்டிருக்கின்றனர்.

  கில்போ சிறைச்சாலையில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறையின் கழிப்பிடத்தில் இருந்து சிறையின் சுற்றுச்ச் சுவருக்கு வெளியே உள்ள சாலை வரை நிலத்துக்கு அடியில் சுரங்கம் தோண்டிய அந்தச் சிறைக் கைதிகள் அதன் வழியாகத் தப்பியோடி உள்ளதாக கருதப்படுகிறது.

  தங்கள் வயல்கள் வழியாக சிறைக் கைதிகள் தப்பி ஓடுவதைப் பார்த்த விவசாயிகள் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

  இவர்களில் ஐந்து பேர் 'இஸ்லாமிக் ஜிகாத்' எனும் அமைப்பின் உறுப்பினர்கள்; ஒருவர் அல்-அக்சா தியாகிகள் படை எனும் தீவிரவாதக் குழுவின் முன்னாள் தலைவர்.

  இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 9. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய பாலத்தீனர்கள். சித்தரிக்கும் படம்.

  சந்தேகத்திற்குரிய நபர்கள் வயல்கள் வழியாக ஓடுவதை விவசாயிகள் பார்த்த பின்னரே சிறையில் இருந்து ஆறு பேரும் தப்பியது சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. காபூல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போராளிகளை விடுவித்த தாலிபன்கள்: காணொளி வெளியீடு

  Video content

  Video caption: காபூல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களுடைய சகாக்களை விடுவிக்கும் தாலிபன்கள்.

  காபூல் சிறைகளில் உள்ள தங்களுடைய சகாக்களை அதிரடியாக சிறைக்குள் நுழைந்து விடுவித்துள்ளனர் தாலிபன்கள்.

  அங்குள்ள மிகப்பெரிய சிறைச்சாலையான புல் இ சார்க்கிக்குள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தாலிபன்கள் ஆயுதமேந்திய போராளிகள் குழு நுழைந்தனர்.

  அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாலிபன்களை அடையாளம் கண்டு அவர்களை போராளிகள் விடுவித்தனர். முன்னதாக, பக்ராம் விமானப்படை தளத்தில் உள்ள சிறையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு தாலிபன்கள் கொண்டு வந்தனர்.

  பாக்ராம் சிறைச்சாலையில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினர், தாலிபன்கள், பிற தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் ஐந்தாயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

பக்கம் 1 இல் 7