பிரேசில்

 1. வளரும் பொருளாதாரங்களின் வலுவான குரல் இந்தியா: பிரதமர் நரேந்திர மோதி

  View more on twitter

  வளரும் பொருளாதார நாடுகளின் வலுவான குரலாக இந்தியா விளங்கி வருகிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

  பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் எனப்படும் அமைப்பின் 13ஆவது உச்சிமாநாடு இன்று காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

  இதில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோதி, "கடந்த 15 ஆண்டுகளில் பிரிக்ஸ் அமைப்பு பல சாதனைகளை படைத்துள்ளது. இன்று நாம் உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான செல்வாக்கு மிக்க குரலாக விளங்கி வருகிறோம்.

  நமது முன்னுரிமைகளில் கவனம் செலுத்த இந்த தளம் பயனுள்ளதாக இருந்தது," என்று குறிப்பிட்டார்.

  இன்றைய உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரேசில் அதிபர் ஸேர் போல்சனாரோ, தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ராமஃபோசா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

  View more on twitter
 2. தமது எதிர்காலத்தைக் கணிக்கும் பிரேசில் அதிபர்

  தாம் கொல்லப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று தமது எதிர்காலம் குறித்து மூன்று கணிப்புகளை வெளியிட்டுள்ளார் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ.

  முன்னாள் அதிபரான இடதுசாரி அரசியல்வாதி லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவை விட இவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

  எனினும் தாம் சிறைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் பொல்சனாரூ குறிப்பிட்டுள்ளார். "பூமியிலுள்ள யாராலும் என்னை அச்சுறுத்த முடியாது," என்றும் அவர் கூறியுள்ளார்.

  2018ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பரப்புரையில் ஈடுபட்டு இருந்த சயீர் பொல்சனாரூ கத்தியால் குத்தப்பட்டார்.

  பிரேசிலின் மின்னணு வாக்குப்பதிவு முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ள இவர் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

  பிரேசிலின் தலைமை தேர்தல் நீதிமன்றம் அந்நாட்டின் வாக்குப்பதிவு முறையில் எந்த கோளாறும் இல்லை என்று புதன்கிழமையன்று கூறியிருந்தது.

  Brazil's Jair Bolsonaro
 3. பாலா அடாமோ இடியோட்டா

  பிபிசி நியூஸ், பிரேசில்

  மில்லென்னியல்ஸ்

  "தோல்வியடைந்தவர்கள்", "சோம்பேறிகள்" என்று மீம்கள் மூலம் அவர்கள் கிண்டலடிக்கப்படுகிறார்கள். அவர்கள் பெற்றோரை அதிகமாக சார்ந்திருப்பது விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இந்தத் தலைமுறையை இப்படிக் கடந்துவிட முடியாது என்கிறார் ஒரு நிபுணர்.

  மேலும் படிக்க
  next
 4. கெளதமன் முராரி

  பிபிசி தமிழுக்காக

  2020 டோக்யோ பெய்ஜிங் ஒலிம்பிக் பதக்கம்

  திரட்டிய எலெக்ட்ரானிக் பொருட்களிலிருந்து 32 கிலோ தங்கம், 3,500 கிலோ வெள்ளி, 2,200 கிலோ வெண்கலம் பிரித்து எடுக்கப்பட்டு பதக்க தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டன.

  மேலும் படிக்க
  next
 5. கொரோனா தடுப்பூசி போராட்டம்

  கோவாக்சின் தடுப்பூசி மருந்துக்கு நிர்ணயிக்கப்பட்ட 'சந்தேகக்குரிய விலையை' ஏற்றுக் கொள்ள தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக பிரேசில் சுகாதாரத்துறை அதிகாரி ரிகார்டோ மிராண்டா தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் பிரேசில் நாட்டில் தீவிர அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  மேலும் படிக்க
  next
 6. கொரோனா பற்றி தவறான தகவல் - பிரேசில் அதிபரின் காணொளிகள் நீக்கம்

  கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களைப் பகிர்ந்ததற்காக பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவின் காணொளிகள் சிலவற்றை தங்கள் இணையதளத்தில் இருந்து யூடியூப் நீக்கியுள்ளது.

  கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை; உள்ளடக்க விதிகள் காரணமாகவே நீக்கியுள்ளோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

  கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதலே பொது முடக்கம், முக்கவசம் அணிதல், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து வந்தார்.

  கொரோனா பற்றி தவறான தகவல் - பிரேசில் அதிபரின் காணொளிகள் நீக்கம்
 7. பிரேசில் அதிபர்

  கொரோனா வைரஸ் தடுப்பூசி கொள்முதல், பொது முடக்கத்தை அமல்படுத்துவது, கவச ஆடை வாங்குவது போன்ற விவகாரத்தில் போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்ற விமர்சனத்துக்கும் போல்சனாரூ ஆளானார். அந்த நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. A person holds a sign reading "Bolsonaro out" during a protest calling for the impeachment of Brazil's President Jair Bolsonaro in Rio de Janeiro, Brazil, on 3 July 2021

  கடந்த மாதம் கோவிட்-19 காரணமாக பிரேசிலில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்தது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த நாடாக பிரேசில் உள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. பிரேசிலில் 5,00,000-ஐக் கடந்த கொரோனா மரணங்கள்

  உலகம் முழுக்க பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அதிக மரணங்களை எதிர்கொண்டிருக்கும் இரண்டாவது நாடாக இருக்கிறது பிரேசில்.ஆறு லட்சம் மரணங்களைக் கடந்து அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. ஐந்து லட்சம் மரணங்களோடு பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் சுமார் 3.80 லட்சம் பேர் மரணித்து இருக்கிறார்கள்.பிரேசிலில் 15 சதவீத பெரியவர்களுக்கு மட்டுமே முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என ஃபியோக்ரஸ் என்கிற சுகாதார அமைப்பு கூறுகிறது.பிரேசிலில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதால், குளிர் காலத்தில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.

 10. கொரோனா இறப்பு

  கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களுக்கு, தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 9