மலேசியா

 1. இந்தியர்களுக்கு பயணத் தடையை நீக்கிய மலேசியா

  இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் குடிமக்கள் மலேசியாவுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

  கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி விதிக்கப்பட்ட தடையை நீக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையடுத்து இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இனி மலேசியாவுக்கு செல்ல இயலும். எனினும், இதற்கான சில விதிமுறைகளையும் அந்நாடுஅறிவித்துள்ளது.

  மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் அனுமதி, நீண்ட காலம் தங்குவதற்கான விசா உள்ளவர்கள், முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மலேசியாவுக்குள் நுழைய இனி அனுமதி உண்டு.

  இந்திய துணை கண்டத்தைச் சேர்ந்த பயணிகள் இரு தவணை கொரோனா தடுப்பூசிகளைப் போட்டிருக்க வேண்டும்.

  மலேசியாவுக்கு வந்து சேர்ந்ததும் கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும என்றும், மலேசிய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின்படி குறிப்பிட்ட காலத்துக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா வைரசின் புதிய திரிபுகள் மலேசியாவுக்குள் ஊடுருவாமல் இருக்க இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.

  இது குறித்து சம்பந்தப்பட்ட ஐந்து நாடுகளின் தூதரகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அத்துறை கூறியுள்ளது.

  கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இந்த ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது.

  எனினும், எந்த நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை.

  malaysia
 2. ஆஃப்கன் விவகாரம்: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தைக் கூட்ட மலேசியாவின் பாரிசான் கூட்டணி வலியுறுத்தல்

  சதீஷ் பார்த்திபன்

  ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு மலேசியா குரல் கொடுக்க வேண்டும் என மலேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்) கூட்டணிக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் நடுநிலையான, உலக அரங்கில் மதிப்புமிக்க இஸ்லாமிய நாடாக விளங்கும் மலேசியாவுக்கு என சொந்த செல்வாக்கு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

  "கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள தாலிபன் குழுவுடன் மலேசியா முன்கூட்டியே தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், தேவை ஏற்படும் பட்சத்தில், ஆஃப்கன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை எளிதில் கொண்டு சேர்க்க முடியும்."

  "மேலும், தாலிபன் அரசு அல்லது ஆட்சியை அங்கீகரிக்கும் விஷயத்தில் நீண்டகாலமாக மலேசியா கடைப்பிடித்து வரும் அனைத்துலக உறவுகள் தொடர்பான கொள்கைகள், கோட்பாடுகளை நமது அரசாங்கம் பின்பற்ற வேண்டும். தாலிபன்களுக்கு என இதில் தனிச் சலுகைகள், சிறப்பு விதிவிலக்குகள் ஏதும் இருக்கக்கூடாது," என்று பொதுச் செயலாளர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.

  தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் நேசனல் கூட்டணியில், மலேசியாவின் பெரும்பான்மை இனத்தவர்களான மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கும் அம்னோ (UMNO), மலேசிய இந்தியர் காங்கிரஸ், மலேசிய சீன சங்கம் (MCA) ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 3. மலேசியாவுக்கு புதிய பிரதமர் பதவியேற்பு

  மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராகப் பதவியேற்றுள்ளார் இஸ்மாயில் சப்ரி யாகூப். கடந்த ஒன்றரை மாதங்களில் மலேசிய அரசியல் களம் அடுத்தடுத்துப் பல்வேறு திருப்பங்களை சந்தித்துள்ளது.

  இவ்வாறு நடக்கும் என்றோ, நாட்டை வழிநடத்தும் பொறுப்புக்கு தாம்வருவோம் என்றோ இஸ்மாயில் சப்ரி மட்டுமல்ல, அவரது சக அரசியல் தலைவர்களும், மலேசிய மக்களும் கூட எதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது அதுதான் நடந்திருக்கிறது.

  இஸ்மாயில் சப்ரி யாகூப்: மலேசிய துணைப் பிரதமர் 40 நாள்களில் பிரதமர் ஆனது எப்படி?

  malaysia new prime minister ismail sabri yakob
 4. சதீஷ் பார்த்திபன்

  பிபிசி தமிழுக்காக

  Malaysia PM

  இவ்வாறு நடக்கும் என்றோ, நாட்டை வழிநடத்தும் பொறுப்புக்கு தாம் வருவோம் என்றோ இஸ்மாயில் சப்ரி மட்டுமல்ல, அவரது சக அரசியல் தலைவர்களும், மலேசிய மக்களும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

  மேலும் படிக்க
  next
 5. இஸ்மாயில் சப்ரி யாகூப்

  மலேசியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவு அமைச்சகம், ஊரக மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சகம் என பல அமைச்சகங்களை பல்வேறு காலகட்டங்களில் இஸ்மாயில் சப்ரி யாகூப் பதவி வகித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. மலேசிய அரசியல் நெருக்கடி: அறிய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்

  மலேசியா
  Image caption: கோப்புப்படம்

  மலேசிய பிரதமர் பதவியில் இருந்து மொஹிதின் யாசின் பதவி விலகியிருக்கும் நிலையில், புதிய அரசு அமையும்வரை காபந்து அரசாக செயல்படுமாறு அவரை மாமன்னர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

  மொஹிதின் யாசினுக்கு அவர் பதவி வகித்த 17 மாதங்களுமே சிக்கல் நிறைந்தவையாக இருத்தன.

  கொரோனா பெருந்தொற்று தீவிரத்தை தடுக்கத் தவறியது, சர்ச்சைக்குரிய ஊழல் புகார்கள், கூட்டணி கட்சியின் அழுத்தம் என பல முனைகளிலும் அவரது அரசு நெருக்கடியை சந்தித்தது.

  மலேசியாவில் கொரோனா தாக்கம் காரணமாக 12,510 பேர் இறந்துள்ளதாகவும் அங்கு நிலைமையை சமாளிக்க முடியாத நிலைக்கு அரசு இயந்திரங்கள் தள்ளப்பட்டதற்குக் காரணம் மொஹிதின் யாசினின் தவறான ஆளுகை என்றும் பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.

  அந்த நாட்டு அரசியலின் சமீபத்திய பிரச்னையை அறிய வேண்டுமானால், இந்த ஐந்து விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

  இது குறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

 7. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  மலேசியா

  இன்று அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக உள்ள மொஹிதின் யாசின், அன்வார் இப்ராகிம், மகாதீர் மொஹம்மத் ஆகிய மூவருமே அம்னோவின் முக்கிய தலைவர்களாக வலம் வந்தவர்கள்தான். மலேசியாவில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், மொஹிதின் தரப்புக்கு ஆட்சியைத் தொடரும் வாய்ப்பு குறைவு. அதே சமயம், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் அம்னோ கட்சி பதவிக்கு வர முயன்று வருகிறது. அதுவும் எளிதில் கைகூடுவது சந்தேகம்தான்.

  மேலும் படிக்க
  next
 8. மலேசியாவில் காபந்து அரசாக மொஹிதின் யாசின் தொடர மன்னர் உத்தரவு

  மலேசியா
  Image caption: மொஹிதின் யாசின், மலேசிய காபந்து பிரதமர்

  மலேசியாவில் புதிய அரசு அமையும்வரை காபந்து அரசாக தொடருமாறு பிரதமர் மொஹிதின் யாசினை மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இது தொடர்பாக மாமன்னர் அரண்மனையின் ஃபேஸ்புக் அலுவல்பூர்வ பக்கத்தில் மலாய் மொழியில் மன்னரின் முடிவு விவரிக்கப்பட்டுள்ளது.

  அதில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும்வரை காபந்து அரசாக தொடருமாறு மன்னர் பிரதமருக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  View more on facebook
 9. தாலிபன்

  காபூல் விமான நிலையத்துக்கு வந்த ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் விமானங்களில் ஏற முண்டியடித்ததால் காலை முதலே நிலைமை பதற்றமாக இருந்தது. இதனால் அமெரிக்க கூட்டுப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

  Follow
  next
 10. மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் பதவி விலகல் - ராஜினாமா ஏற்பு

  சதீஷ் பார்த்திபன், மலேசியா

  மலேசியா
  Image caption: மொஹிதின் யாசின்

  மலேசிய பிரதமர் பதவியில் இருந்து மொஹிதின் யாசின் இன்று விலகி உள்ளார்.

  அவரது ராஜினாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக்கொண்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

  மலேசியாவில் மொஹிதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேசனல் அமைச்சரவை இன்று பதவி விலகிய தகவலை அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற கைரி ஜமாலுதின் சற்று முன்னர் தெரிவித்தார்.

  கடும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் மொஹிதின் யாசின் இன்று பதவி விலகுவார் என கடந்த இரு தினங்களாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

  இன்று திங்கட்கிழமை மலேசிய மாமன்னரைச் சந்தித்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைப்பார் என பிரதமர் துறையின் சிறப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.

  இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மொஹிதின் யாசின் தலைமையில் ஆளும் பெரிக்கத்தான் அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாக தோட்டத்தொழில் அமைச்சர் பதவி வகித்த கைருடின் அமான் ரசாலி தெரிவித்தார்.

  அமைச்சரைக் கூட்டம் முடிந்த பின்னர் மாமன்னரைச் சந்தித்துள்ளார் பிரதமர் மொஹிதின் யாசின். அப்போது அவர் பதவி விலகுவது குறித்து மாமன்னரிடம் தெரிவித்துள்ளார்.

  இன்னும் சற்று நேரத்தில் அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்த இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மலேசியாவில் தற்போது கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்திருப்பதால் பொதுத்தேர்தலை நடத்த இயலாத சூழல் நிலவுகிறது. எனவே இடைக்கால பிரதமராக மூத்த நாடாளுமன்ற எம்பிக்களில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இல்லையெனில் ஒற்றுமை அரசாங்கம் அமைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

  மேலும், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் அவர் ஆட்சி அமைக்க மாமன்னர் ஒப்புதல் அளிக்கக்கூடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பக்கம் 1 இல் 35